கௌரி நல்ல நேரம் என்றால் என்ன

நாம் துவங்கும் செயல்களை நல்ல நேரத்தினை பார்த்து துவங்குவது மிக பிரதானமானதொன்றாகும். இதனூடாக சிறந்த முறையில் அந்த விடயம் நடைபெறும் என நம்புகின்றனர். அத்தகைய நல்ல நேரங்களில் ஒன்றே கௌரி நல்ல நேரமாகும்.

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன

கௌரி நல்ல நேரம் என்பது யாதெனில் கௌரி பஞ்சாங்கத்தில் பிரிக்கப்பட்டுள்ள நல்ல நேரம் ஆகும். அதாவது ஒரு நாளை பதினாறு முகூர்த்தங்களாக பிரிக்கின்றனர். அதனுள் பகலில் எட்டு முகூர்த்தங்களும் இரவில் எட்டு முகூர்த்தங்களும் காணப்படுகின்றது.

இவ்வாறு காணப்படுவதே கௌரி நல்ல நேரம் ஆகும். இங்கு முகூர்த்தம் என்பது 1:30 மணி நேரத்தை சுட்டுகின்றது.

கௌரி நல்ல நேரத்தின் சிறப்பம்சங்கள்

கௌரி நல்ல நேரத்தில் அமிர்தம், லாபம், தனம், சுகம் என்ற வேளைகளில் சுப காரியங்களை மேற்கொள்ளலாம். இதனால் சிறந்த முறையில் அன்றைய நாளில் காரியங்கள் நடந்தேறும்.

கௌரி நல்ல நேரத்தில் பல சிறப்பான நன்மைகள் கிட்டக் கூடிய ஒரு நேரமாக இந்த நேரம் காணப்படுகின்றது. ஏனெனில் இந்த நல்ல நேரத்தில் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும்.

மேலும் இந்த சுபமுகூர்த்த வேளைகளில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற முயற்சிகளினை மேற்கொண்டால் அதனுள் வெற்றி ஏற்படும்.

கௌரி நல்ல நேரத்தில் சுப கிரகங்களின் பார்வையானது பூமிக்கு கிட்டும் இதனால் அந்நேரத்தில் தீய கிரகங்கள் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் தணிந்து இருக்கும்.

கௌரி நல்ல நேரமானது சுப நேரங்கள், அசுப நேரங்கள் என காணப்படுகின்றது. அந்த வகையில் இலாபம், அமிர்தம், சுகம், தனம் போன்றவை சுப முகூர்த்தங்களாகவும் விசம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்த்தங்களாகவும் காணப்படுகின்றது.

லாபம்

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்களை மேற்கொண்டால் சிறப்பான நன்மைகள் கிட்டுவதோடு லாபகரமாகவும் அமையும்.

அமிர்தம்

இந்த நேரத்திலும் சுப காரியங்களை மேற்கொண்டால் முக்கிய காரியங்களில் சிறப்பான நன்மைகள் கிட்டுவதோடு மகிழ்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கப் பெறும்.

சுகம்

இந் நேரத்தில் நோய்களினால் அவதிப்படுபவர்கள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகக் கூடும்.

தனம்

இது ஒரு சுபமுகூர்த்த நேரமாகும். இந் நேரத்தில் தொழில் அல்லது வியாபாரம் மேற்கொண்டால் லாபம் கிடைப்பதோடு நன்மைகளும் கிட்டும்.

உத்தி

இந்த நேரத்தில் உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரியங்கள் மற்றும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்.

விசம்

இது அசுப முகூர்த்த நேரமாகும். இந்த நேரத்தில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வியிலேயே முடிவடையும், தேவையற்ற விரோதங்களும் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

சோரம்

இது அசுப முகூர்த்த நேரமாகும். இந் நேரத்தில் எந்த காரியத்தை செய்தாலும் தடை ஏற்பட்டு நின்று போகும், பொருள்கள் மற்றும் பணம் களவாடப்படும் என்பதனையும் குறிப்பிடலாம்.

ரோகம்

இந் நேரத்தில் எந்த நல்ல காரியத்திலும் ஈடுபடக் கூடாது நோயாளி மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும், விரைவில் குணமாகாது.

Read More: சித்திரை கனி என்றால் என்ன

இந்திரனுக்கு சாபம் கொடுத்த தேவலோக மங்கை