குற்றியலிகரம் என்றால் என்ன

Kutriyaligaram Endral Enna

இந்த குற்றியலிகரம் என்றால் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய காலங்களில் குற்றியலிகரம் உரைநடை வழக்கில் இல்லை. அந்த காலங்களில் உள்ள இலக்கியங்களில் தான் குற்றியலிகரம் இருந்திருக்கின்றது.

தற்போது உரைநடை வழக்கில் குற்றியலுகரம் மட்டுமே இருக்கிறது. குற்றியலிகரம் இல்லை.

  • குற்றியலிகரம்
  • Kutriyaligaram Endral Enna

குற்றியலுகரம் என்றால் என்ன இங்கே சென்று பாருங்கள்.

குற்றியலிகரம் என்றால் என்ன

குறுமை + இயல் + இகரம்

குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம் ஆகும்.

உகரம் குறுகி ஒலிக்கும் போது குற்றியலுகரம் தோன்றுவது போல இகரம் குறுகி ஒலிக்கும் போது குற்றியலிகரம் தோன்றும்.

குற்றியலிகரத்தில் வரும் இகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து 1/2 மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும்.

குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்

இந்த குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மாத்திரமே வரும்.

இடம் 1:

குற்றியலுகரமும் யகரம் முதல் எழுத்தாகவும் சேர்ந்து வரும் போது குற்றியலிகரம் தோன்றும்.

குற்றியலுகரம் + யகரம் முதல் எழுத்து

எடுத்துக்காட்டு:

கொக்கு + யாது = கொக்கியாது
நாடு + யாது = நாடியாது
தோப்பு + யாது = தோப்பியாது

இடம் 2:

மியா – அசைச்சொல் (ஓசைக்காக மட்டும் பயன்படுத்துவார்கள்)

எடுத்துக்காட்டு:

கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியா

You May Also Like:

மயங்கொலி எழுத்துக்கள் யாவை

யாதும் ஊரே யாவரும் கேளிர்