காபந்து அரசு என்றால் என்ன

காபந்து அரசு பொருள்

இந்த பதிவில் “காபந்து அரசு என்றால் என்ன” என்பதை பற்றி பார்க்கலாம்.

காபந்து அரசு என்றால் என்ன

சட்டப்பேரவை மக்களால் கலைக்கப்பட்ட பின் அல்லது பதவிக்காலம் முடிந்த பின் புதிதாக ஓர் அரசு பொறுப்பேற்கும் வரை இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசாங்கம் தற்காலிகமாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனது பணிகளைச் செய்யும். இவ்வாறு ஆட்சி நடத்தும் அரசு முறையை காபந்து அரசு என்பர்.

காபந்து எனும் சொல்லின் தோற்றம்

காவந்து” எனும் உருது சொல்லில் இருந்து உருவாகியது.

காபந்து அரசு பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த காபந்து அரசாங்கம் பற்றி 1994இல் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது காபந்து அமைய பெற்றால் இது அரசின் அன்றாட நடைமுறைகளை மட்டுமே மேற்கொள்ளும். முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை.

காபந்து அரசின் செயற்பாடுகள்

காபந்து அரசாங்கம் என்பது பெயரளவில் செயற்படும் அரசாங்கமாகும். இதற்கு பொதுவான முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது. சிவில், பாதுகாப்புக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை கொண்டுவரவோ அல்லது சட்டசபையை கூட்டவோ அதிகாரம் இல்லை. நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. அத்துடன் அரசு துறை ரீதியான முடிவுகளை எடுக்க அதிகாரம் இல்லை. அப்படியே எடுக்கப்பட்டாலும் அது ஆளுநரால் நீக்கப்படும்.

காபந்து அரசு வேறு பெயர்கள்

  • இடைக்கால அரசு (interim government)
  • காபந்து எனும் சொல்லின் ஆங்கிலம் – Caretaker government

தமிழ்நாட்டில் காபந்து அரசாங்கம்

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் மாநில அரசாங்கத்தால் எந்த ஒரு திட்டத்தையோ, பிற கொள்கை ரீதியான முடிவுகளையோ செயல்படுத்தவோ அறிவிக்கவோ முடியாது.

இதே நிலை அடுத்ததாக எந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ அதுவரையில் நடைமுறையில் இருக்கும். இது போன்ற சூழலில் மிக அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் ஆளுநர் தன்னிச்சையாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.

அது சட்டசபை கூடிய 6 மாதங்களுக்குள் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநர் பிறப்பித்த சட்டங்களும் செல்லாததாகிவிடும்.

You May Also Like:
புதுக்கவிதை என்றால் என்ன
அணங்கு என்றால் என்ன