கற்றால் மட்டும் ஒருவர் சிறந்தவராக முடியாது. கற்றவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் தான் அந்த கல்வி மேன்மேலும் வளரும். அதன் மூலமாக பலன் பெருகும்.
ஒருவன் கற்றுக்கொண்டு தான் மட்டும் அந்த பயனை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அது எந்த பலனையும் தராது. தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பொழுது அந்தக் கற்றதால் அவர் மூலமாக இருவருக்கும் பலன் கிடைக்கும்.
ஒரு மனிதனாக இருந்து அவனுடன் இருப்பவர்கள் முட்டாள்களாகவோ, மூடர்களாகவோ அல்லது மூர்க்கத்தனம் உள்ளவர்களாகவோ இருந்தால் அனைவருக்கும் அவர்கள் மூலமாக ஆபத்து ஏற்படும்.
அதனால் அவர் கற்றதை ஒழுக்க வாழ்வியல் முறையை தன்னுடன் இருக்கக்கூடியவர்களுக்கு முறைப்படி போதித்தால் அந்த போதனை அவர் உயிருடன் இருப்பவர்கள் மூக்கத்தனமானவர்களாக மாறாமல் முரணாக இல்லாமல் அவரையும் பக்குவம் உள்ள மனிதனாக மாற்றுவதற்கு கற்பித்தல் முறை உதவும்.
கற்றதனால் பயன் என்னவென்றால் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதுதான். கற்றதைக் கற்பிப்பது தான் சிறந்த வழியே தவிர கற்றல் மட்டுமே வழியாக இருந்தால் அந்த கல்வியினால் எந்த பயனும் இருக்காது.
நாம் கற்ற கல்வி பெற்ற அறிவை பலருக்கும் கொடுத்தால்தான் அவர்களும் பயன்பெறுவார்கள். அதனால் கற்பித்தல் என்பது மிகவும் பயனுள்ளதாகும்.
மற்றவர்களுக்கு வழி காட்டுவது, நேர்வழியில் மக்களை அழைத்துச் செல்வது இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பது, தாகத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
Table of Contents
கற்றல் என்றால் என்ன
கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது வலுவூட்டல் ஆகும்.
மாந்தரின் செயற்பாடுகளில் முதன்மையானதாக கற்றல் விளங்குகின்றது.
கற்பித்தல் என்றால் என்ன
தாம் பெற்ற அறிவை, அனுபவத்தை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் அந்த அறிவை, அனுபவத்தை பிறருக்கு போதிப்பது அல்லது எடுத்துரைப்பது கற்பித்தலாகும்.
கற்றல் பற்றி அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்
ஆபி சுடுபர்ட் – “கற்றல் என்பது வெளிப்புறத் தொடர்பு மற்றும் நடத்தை வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக (கூட்டாக) இயங்கக் கூடிய அறிவைத் திரட்டுதலாகும்” என்கின்றார்.
வெர்னிகர் ஜாக்பாஸ்ஸா – “கற்றல் என்பது ஒரு செயற்பாடு. அது நிலையானது அல்ல. புது தகவல்களைப் பெற ஒரு மனிதன் ஒரு நாளும் கற்றலை நிறுத்தியது கிடையாது. அது அந்த மனிதனை சுறுசுறுப்பாகவும், விழிப்புணர்வுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி உணர்வுடனும் இருக்க வைக்கிறது”.
எரிக் பிளாக் பார்க் – “பல்வேறு தூண்டல்களுக்கு ஏற்ப பெறக்கூடிய புதிய துலங்கள்களே கற்றல்”
கிறிஸ்டின் சின்சாங் – “கற்றல் என்பது ஒருவருடைய நடத்தையில் ஒப்பீட்டளவில் ஏற்படக்கூடிய நிலையான மாற்றம்”
அங்கிலா சிங்கிள் – “உன்னுடைய வாழ்க்கையை பலப்படுத்தும் திறனை பெறுவதலே கற்றல். இது புத்தகத்தினாலோ அல்லது ஆசிரியராலோ கற்றுக் கொடுப்பது கிடையாது. நீ உன் சொந்த ஆய்வு மூலமாகவோ ஆசிரியரிடம் பகிர்வதன் மூலமாகவோ பெறுவதாகும்”.
தாமஸ் கார்ல் – “கற்றல் என்பது நம்மிடம் அளிக்கப்பட்ட தகவல்களைப் பெற்று பயன்படுத்தும் வாழ்நாள் செயற்பாடாகும். ஆர்வம் இருக்கும் வரை கற்றல் திறன் முடிவில்லாத ஒன்றாகும். பெற்ற தகவல்களை பயன்படுத்தி புரிந்து கொண்ட போது தான் கற்றல் வெற்றி அடைகின்றது”.
Read more: கோரோசனை பயன்கள்