இந்த பதிவில் “ஓரிதழ் தாமரை பவுடர் பயன்கள் ” பற்றி பார்க்கலாம்.
தாமரை என்றவுடன் இது தண்ணீரில் வளரக்கூடியது என்று என்ன வேண்டாம் இது நிலத்தில் வளரும் செடி ஆகும்.
ஆண்மை தொடர்பாக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது பல பயன்களை தருகின்றது.
Table of Contents
ஓரிதழ் தாமரை பவுடர் பயன்கள்
- இது ஆண்களுக்கு ஒரு அற்புதமான மருந்து ஆகும். ஆண்மை சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்க்கின்றது. இது ஆண்மையை அதிகரித்து உடல் வலிமையை அதிகரிக்கின்றது. ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரித்து இல்லற வாழ்க்கையில் திருப்பதியை ஏற்படுத்த உதவுகின்றது.
- தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை போக்கும்.
- இதில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகின்றது.
- இரத்தில் சக்கரையின் அளவை குறைப்பதோடு இரத்தத்தினையும் சுத்தம் செய்து இரத்த விருத்திக்கு உதவுகின்றது.
- உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
- உடலில் கொலஸ்ட்ரோலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
- உடல் வலி, உடல் களைப்பு மற்றும் உடல் அசதியை போக்கும் நிவாரணியாகவும் பயன்படுகின்றது.
- தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஓரிதழ் தாமரை சாப்பிடும் முறை
அரை தேக்கரண்டி ஓரிதழ் தாமரை பொடியினை ஒரு கப் நன்கு கொதித்த பசும் பாலில் நன்கு கலந்து வெல்லம் எதுவும் சேர்க்காமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்ததாகும். இரவு சாப்பாட்டிற்கு பின்பும் எடுத்துக் கொள்ளலாம்.
மற்றும் ஒரு நாளைக்கு அரை தேக்கரண்டி அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றால் இதை சாப்பிட்டு ஒரு மணிநேரத்திற்கு எந்த உணவும் எடுத்துக்கொள்ள கூடாது.
இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதை செடியாக எடுத்து அரைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
ஓரிதழ் தாமரை எங்கு கிடைக்கும்
ஓரிதழ் தாமரை பொடி பொதுவாக அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
செடியாக எடுக்க விரும்புவர்கள் கிராம புறங்கள், காடுகள் போன்ற இடங்களில் முயற்சிக்கலாம்.
இது பொதுவாக தானாக வளரக் கூடியவை.
ஓரிதழ் தாமரை தீமைகள்
கர்ப்பிணிகள் இதை தவிர்ப்பது சிறந்தது.
இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு மேலும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
பாலியல் உணர்ச்சியை அதிகமாக தூண்டும் தன்மை கொண்டவை. இதனால் இச்சை அதிகமாகும்.
அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளின் கீழ் இதை சாப்பிடுவது சிறந்ததாகும்.
You May Also Like :