ஐசோடோப்புகள் என்றால் என்ன

ஐசோடோப்புகள்

ஒரு தனிமத்தின் வேதிப்பண்புகள் தனிமத்தில் உள்ள எலக்ட்ரானைப் பொறுத்து மாறுபடுகின்றது. ஐசோடோப்புகளில் எலக்ட்ரானின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லை. எனவே ஐசோடோப்புகளின் வேதிப்பண்புகளில் மாற்றம் ஏற்படுவதில்லை.

ஐசோடோப்புகள் என்றால் என்ன

ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் ஆகும். மேலும், ஒரு வேதித்தனிமத்தின் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட உறுப்புக்களாகும்.

ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான் மற்றும் எலக்ட்ரானும், வேறுபட்ட எண்ணிக்கையிலான நியூட்ரானும் கொண்ட இவ்வுறுப்புக்களே ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.

கார்பன் ஐசோடோப்புகள்

கார்பன் ஆறு எலக்ட்ரான் மற்றும் ஆறு புரோட்டான்களைக் கொண்டுள்ளது. ஆனால் நியூட்ரானின் எண்ணிக்கையோ இரண்டிலிருந்து பதினாறுவரை வேறுபடும். எனவே கார்பன் பதினைந்து ஐசோடோப்புகளைப் பெற்றுள்ளது.

பதினைந்து ஐசோடோப்புகளை பெற்றிருக்கின்ற போதிலும், அவற்றுள் மூன்று மட்டுமே பெருமளவு விரவி காணப்படுகின்றன. கார்பன்-12, கார்பன்-13 மற்றும் கார்பன்-14 என்பனவையே அவை மூன்றும் ஆகும்.

கார்பன்-12

கார்பனின் மற்ற ஐசோடோப்புகளுடன் ஒப்பிடுகையில் கார்பன்-12 ஐசோடோப்பு இப்புவியில் அதிக அளவு காணப்படுகிறது.

பூமிக்கடியில் கிடைக்கும் நிலக்கரி, வைரம் மற்றும் கிராஃபைட் முதலியன தனிமநிலை கார்பன்-12 ஆகும். தவிர கனிம மற்றும் கரிம சேர்மங்களின் அடிப்படையாகவும் கார்பன்-12 இருக்கின்றது.

உயிரினங்கள் அனைத்தும் கார்பன்-12ஐ அடிப்படையாக கொண்ட சேர்மங்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களிலும் கார்பன்-12ன் சேர்மங்கள் இருக்கின்றன.

கார்பன்-13

புதிதாக கண்டறியப்படும் புதுப்புது கரிம வேதிமூலக்கூறுகளின் வடிவமைப்பினை கண்டறிவதில் இவ்வகை ஐசோடோப்பு பயன்படுகிறது.

கதிரியக்க ஐசோடோப்புகள்

கதிரியக்க ஐசோடோப்புகள் ஒரு அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை அந்த உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் போது சில உட்கருக்கள் நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது.

இந்த நிலைப்புத்தன்மையற்ற உட்கருக்கள் பிளவுற்று கதிரியக்கத்தை தொடர்ச்சியாக உமிழ்கின்றன. இவை கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.

கதிரியக்க ஐசோடோப்புகள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் நிலையற்ற கலவையைக் கொண்டுள்ளன. இவை ஆற்றலை உருவாக்கி அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்துறையில் சேவை செய்கின்றன.

மருத்துவத்துறை – மருத்துவத்தில், கதிரியக்கக் கூறுகளால் வெளிப்படும் காமா கதிர்கள் மனித உடலுக்குள் இருக்கும் கட்டிகளைக் கண்டறியப் பயன்படுகின்றன. மற்றும் தோல் நோய்ச் சிகிச்சையில் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயன்படுகிறது.

கதிரியக்கக் கோபால்ட்-60 (Co60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம்-198 (யுர198) தோல் புற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

கதிரியக்க அயோடின் (I-123) தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படுகிறது. பால்பரஸ்-32 அல்லது ஸ்ட்ரான்சியம்-90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. கதிரியக்கத் தன்மையுள்ள அயர்ன்(Fe-59) ஐப் பயன்படுத்தி இரத்த சோகை நோயைக் குணப்படுத்தலாம்.

வேளாண்மை – கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. ரேடியோஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ஆகியவை உருவாக்கப்படுகின்றன.

தொல்லியல் – தொல்பொருள் மற்றும் பழம்பொருட்களின் வயதை அறிய C-14 ஐசோடோப்பு பயன்படுகிறது. கதிரியக்க கார்பனின் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள் இக்கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதினைத் தீர்மானிக்கலாம்.

Read more: கூகை கிழங்கு பயன்கள்

இறந்தவர்களை வழிபடும் முறை