தொழில் செய்யும் போது பாடப்படும் பாடல்கள் தொழிற்பாடல்கள் ஆகும். வேளாண்மைத் தொழிலும் வேளாண்மை அல்லாத தொழிலும் இதில் அடங்கும்.
நாட்டுப்புறப் பாடல்களின் பகுப்பில் தொழில்முறைப் பாடலாக இடம்பெறுவது ஏற்றப்பாட்டு ஆகும்.
தொழிற்பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன ஆகும்.
நாட்டுப்புறத் தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் சிறப்பிடம் பெற்றவை ஆகும்.
வேளாண் தொழிற் பாடல்களில் விதைவிதைப்பது முதல் நீர் பாய்ச்சி, களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றி செல்லும் வரை ஒவ்வொன்றுக்கும் பாடல்கள் பாடப்படுகின்றன.
ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டு இல்லை என்பது பழமொழி, கவியரசர் எனப்போற்றப்பெறும் கம்பரையே திகைக்க வைத்தது ஏற்றப்பாட்டு.
கிராமப்புற மக்கள் எந்தச் செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். உழைப்பின் விளைவால் உண்டான, வளர்ச்சியானாலும் எல்லாவற்றிற்கும் கடவுளே காரணம் என்று நம்பிக்கை மிகுந்தவர்கள்.
எனவே கடவுளை முன்னிறுத்தியே ஏற்றப்பாட்டையும் தொடங்குவார்கள். பிள்ளையாரை வணங்கியே துலை பிடிப்பர். அது மட்டுமின்றி ஆபத்தான தொழில் சூழ்நிலைகளில் தெய்வங்களை எல்லாம் அழைத்துக் காப்பாற்றுமாறு வேண்டுவதை பல பாடல்களில் காணலாம்.
Table of Contents
ஏற்றப்பாட்டு என்றால் என்ன
கிணறு, குளம், குட்டை, கால்வாய்கள் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு மின் இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது “ஏற்றம்” ஆகும். குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆற்றங்கரை ஊர்களில் நீர் இறைக்க மிகுதியாக பயன்பட்டது ஏற்றமே ஆகும்.
ஏற்றப்பாடு என்பது பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே இறைத்து நீர் பாச்சினர். இவ்வாறு ஏற்றம் இறைக்கும் போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாடு என்று அழைக்கப்பட்டது.
ஏற்றப்பாட்டின் நோக்கம்
தொழில் துன்பங்கள் தெரியாமல் இருப்பதற்காகப் பாடல்கள் பாடப்படுகின்றன. வேறு பயன்கள் இருந்தாலும் இதுவே முதன்மையான காரணமாகத் தெரிகிறது. அதாவது களைப்பு தெரியாமல் இருப்பது தான் இதன் முதல் நோக்கம்.
இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கையை அறிவது அடுத்த நோக்கம் ஆகும். பாடலின் ஒவ்வொரு பத்தடிக்கும் இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
மொத்த நிலத்தின் அளவு, இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை, இன்னும் இறைக்கப்பட வேண்டிய சால்களின் எண்ணிக்கை முதலியவற்றை ஏற்றம் இறைப்பவர் நன்கு அறிந்திருப்பார்.
பாடும் நெறிமுறை
ஏற்றத்தின் கீழே சாலை பிடித்து கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவர். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்பவர் ஒன்றாக சேர்ந்து அவ்வடியை திருப்பிப் பாடுவர் மிதி மரத்தில் இருப்போர் பாடி முடித்த பின் அடுத்த அடியை சார் பிடிப்பவர் பாட வேண்டும்.
இவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் அமைந்ததாக ஏற்றப்பாடு அமைவதைக் காண முடியும். நீர் இறைக்கும் காலைப் பொழுதிற்கு ஏற்றவாறு ஏற்றப்பாடலின் நீளம் குறையலாம் அல்லது நீளலாம்.
Read more: அஷ்டமி அன்று செய்ய கூடாதவை