எல்லை வேறு சொல்

எல்லை வேறு பெயர்கள்

எல்லை என்ற சொல் தமிழில் பயன்பாட்டில் உள்ள சொல்லாகும். இச்சொல்லானது பயன்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு பொருள்களைப் பெறுகின்றது.

எல்லை என்பது வரையறுக்கப்பட்ட நிலத்தை குறிக்கும் அது உரித்துடமை நிலமாக காணப்படும். உதாரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சினையைக் கொள்ளலாம். இங்கு எல்லை என்பது இடத்தையை குறிக்கின்றது.

வேறு வகையில் எல்லை என்பது மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல் என்று பொருள்படும். மற்றும் எல்லை என்பது பகல் என்ற பொருளைத் தரும் எனவும் அகராதிகள் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களும் எல்லை என்ற சொல்லை பகல் வேளையை குறிக்கவே பயன்படுத்தின. மேலும் எல்லை என்பது ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை எனவும் கொள்ளப்படும்.

இவ்வாறு எல்லை என்பது பல பொருள்களைக் கொண்டு காணப்படுவதைப் போல பல பெயர்களையும் அதனின் பொருளுக்கேற்ப கொண்டு காணப்படுகின்றது.

எல்லை வேறு சொல்

  1. வரம்பு
  2. அளவு
  3. வரையறை
  4. அந்தம்
  5. இறுதி
  6. கடைசி
  7. முடிவு
  8. முடிப்பு

இதன் மூலம் எல்லை என்ற சொல்லின் விளக்கம் பற்றி அறியலாம்.

Read more: சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை

அமாவாசை அன்று செய்ய கூடாதவை