எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ செய்ய வேண்டியவை

மகிழ்ச்சியாக வாழ வழிகள்

இன்று பலரும் தொலைந்து விட்டு தேடிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி என்னும் உணர்வே. இந்த மகிழ்ச்சி என்பது திடீரென்று கிடைப்பதில்லை.

பயிற்சியின் மூலமே நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதிவில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ பின்பற்ற வேண்டிய வழிகள் பற்றி பார்ப்போம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ செய்ய வேண்டியவை

போதுமான தூக்கம்

தினமும் ஒவ்வோரு மனிதரும் போதியளவு நேரம் தூங்க வேண்டும். குறைந்தது 6 மணித்தியாலங்களாவது கட்டாயம் தூங்க வேண்டும். போதியளவு நேரம் தூங்குவதனால் மனஅழுத்தங்களில் இருந்து விடுபட வைப்பதோடு மனதில் உள்ள துன்பங்களை குறைத்து நேர்மறை எண்ணங்கள் உருவாக வழிவகுக்கும்.

தியானம்

தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது கண்களை மூடி அமைதியான இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும். இயலுமான வரை தியானம் அதிகாலையில் செய்வது நன்று. தியானம் செய்வதால் மனதில் இருக்கும் குழப்பங்களை தீர்ப்பதோடு மனதில் அமைதி மற்றும் மகிழ்ச்சி ஏற்பட வழிவகுக்கும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு அதிகளவு நேரம் செலவிடுதல்

நாம் விரும்பும் நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எல்லா நேரங்களிலும் துணை நிற்கும் நண்பர்களோடு நம்முடைய நிகழ்கால சந்தோஷங்களை பகிருதல் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கிறது.

சமூக வலைத்தளங்கள்

இயலுமானவரை சமூக வலைத்தளங்களில் அதிகளவு நேரம் செலவிடுவதை தவிர்த்தல் வேண்டும். அவை எப்பொழுதும் போலியான தற்காலிகமான மகிழ்ச்சியையே ஏற்படுத்தும்.

நல்ல உறவு

இயலுமானவரை மகிழ்ச்சியாக இருப்பதற்கு நன்றியுணர்வு மிக்க மனிதர்களோடு நல்ல உறவினைப் பேணிக் கொள்ள வேண்டும்.

இயற்கை

எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய பசுமையான இடங்களுக்கு சென்று இயற்கையை இரசிக்க வேண்டும். இதனால் குழப்பத்தில் இருக்கும் மனது கூட எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சி அடையும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி தினமும் செய்வதால் உடம்பில் உள்ள எண்டோர்பின் மற்றும் செரோடோனின் ஹால்மோன் போன்ற சுரப்பிகள் அதிகளவில் சுரக்கப்பட்டு மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கும்.

இசை

எப்போதும் மனதிற்கு பிடித்தமான மென்மையான இசையைக் கிரகித்தல் மனதிற்கு இதமான மகிழ்ச்சியை தரும்.

ஈடுபாடு

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒரு நிமிடமேனும் அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு நம்முடைய மனதுக்கு பிடித்த விடயங்கள் மீது ஈடுபடுவதால் மனம் மிகுந்த மகிழ்ச்சியை உணரும். எப்பொழுதும் மனதுக்கு பிடிக்காத எதிரான விடயத்தை செய்ய கூடாது.

கோபத்தை குறைத்தல்

கோபம் வரும் வேளைகளில் அவசரப்பட்டு வார்த்தைகளால் திட்டாமல் மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

மன்னிப்பு கேட்டல்

நாம் தவறு செய்யும் பட்சத்தில் யார் எவரென்று பாராமல் உடனே மனதால் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நன்மை செய்தல்

இயலுமானவரை எப்பொழுதும் பிறருக்கு தீமை செய்யாது எல்லா நேரங்களிலும் அடுத்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும். இது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நன்றி செலுத்துதல்

முடியுமானவரை எப்பொழுதும் நமக்கு நன்மை செய்பவர்களுக்கு உடனே அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நன்றி கூறுதல் கட்டாயமாகும்.

இன்றைய வேலைப் பளுவுக்கு மத்தியில் அமைதி, மன மகிழ்ச்சி போன்றவற்றை தொலைத்து விட்டு தேடித் திரிபவர்கள் மேற்குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

Read More: ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்