எனக்கு பிடித்த கதை கட்டுரை

enakku piditha kathai katturai in tamil

இந்த பதிவில் பொய் சொல்லாதே எனும் “எனக்கு பிடித்த கதை கட்டுரை” பதிவை காணலாம்.

நாம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க சிறந்த கதைகளை வாசிக்கப் பழகவேண்டும்

எனக்கு பிடித்த கதை கட்டுரை

எனக்கு பிடித்த கதை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறந்த கதையில் இருக்க வேண்டிய அம்சங்கள்
  3. பொய் சொல்லாதே
  4. கதையின் படிப்பினை
  5. சிறப்பம்சங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் எண்ணிலடங்காக் கதைகள் பல மொழிகளிலும் தோன்றியுள்ளன. அவை அனைத்தையும் எம்மால் படித்து முடித்துவிட இயலாது. வாழ்நாளில் பல கதைகள் படித்திருப்போம். எனினும் அவை அனைத்தும் பிடித்துவிடுவதில்லை.

ஒரு சில கதைகள் எம்மை மிகவும் கவர்ந்துவிடுவதுண்டு. படிக்கும் போதே மனதை மகிழவைக்கும் அல்லது நெகிழவைக்கும்.

அந்த வகையில் எனக்குப் பிடித்த கதையாக “பொய் சொல்லாதே” எனும் தலைப்பில் அமைந்த ஓர் நீதிக் கதையாகும். இக்கதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிறந்த கதையில் இருக்க வேண்டிய அம்சங்கள்

படித்து முடித்ததும் மறந்துவிடாமல் எப்போதும் மனதில் நிற்க வேண்டும். கதையில் விறுவிறுப்பு வேண்டும். நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறுவதாக அமைதல் வேண்டும். கதாபாத்திரத்தின் குணம் கதைநடைபெறும் இடம் போன்றன குறிப்பிடப்படல் வேண்டும்.

பொய் சொல்லாதே

சிங்காரபூரம் எனும் ஓர் அழகான ஊரில் காளியப்பன் என்பவர் தன் மனைவி, மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கென்று இருந்த ஆடுகளைத் தினமும் காலை வேளைகளில் ஊருக்கு வெளியே மேய்த்துக் கொண்டு மேய்ச்சல் நிலத்தில் விட்டு பொழுது சாயும் நேரத்தில் வீட்டுக்கு அழைத்துவருவது காளியப்பனது வேலையாக இருந்தது.

ஆனால் அவர் மகன் கோவிந்தனோ சோம்பேறியாக இருப்பான். பொய் பேசுதல், வெட்டிப்பேச்சு என வேண்டாத பழக்கங்களுடையவனாக இருந்தான்.

ஒரு நாள் காளியப்பன் கோவிந்தனை அழைத்து முக்கிய வேலையாக வெளியூர் சென்று வரும் வரை ஆடுகளைப் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த கோவிந்தன் தாயார் கூறியதும் சம்மதித்தான்.

மறுநாள் காலை ஆட்களை மேய்த்துக் கொண்டு போனான். வேலை பார்த்துப் பழக்கம் இல்லையென்பதால் அவனுக்குப் பொழுது போகவில்லை.

இதனால் வயல் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கவனத்தைத் திருப்பும்படி ‘புலிவருகிறது, புலிவருகிறது’ என்று கூச்சலிட்டான். அவனது சத்தம் கேட்டதும் எல்லோரும் ஓடி வந்தனர்.

வந்த பின்புதான் அவன் கூறியது பொய்யென உணர்ந்தனர். வந்தவர்கள் எல்லோரும் அவனைக் கடிந்து பேசிவிட்டுத் திரும்பினர். அடுத்த நாளும் அதே போல் கூச்சலிட்டு ஏமாற்றி மகிழ்ந்தான்.

இரண்டு நாட்களில் வருவதாகக் கூறிய தந்தை காளியப்பன் வராததால் மூன்றாவது நாளும் கோவிந்தன் ஆடுகளை மேய்க்கச் சென்றான். அப்போது உண்மையிலேயே எங்கிருந்தோ வந்த ஒரு புலி ஓர் ஆட்டின் மீது பாய்ந்து ஆட்டைக் கடித்துக் குதறியது.

அப்போது உண்மையிலேயே கோவிந்தன் “புலி, புலி காப்பாத்துங்கள்” என்று அலறினான். ஆனால் அவன் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. ஆடுகள் அனைத்தும் புலிக்கு இரையாகியது. இதனால் சோகத்துடன் வீடு வந்தான்.

கதையின் படிப்பினை

நாம் எப்போதும் பொய் கூறக்கூடாது. ஒருவனது வார்த்தையில் உண்மையில்லை என்றால் அவன் எப்போது உண்மை கூறினாலும் அது எடுபடாது. எனவே விளையாட்டாக கூட பொய் பேசக்கூடாது.

சிறப்பம்சங்கள்

பொய் சொல்லாதே எனும் நீதிக் கதையானது குறுகியதாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள் ஒருபோதும் நன்மையையோ, கௌரவத்தையோ பெற்றுத்தர மாட்டாது என்பதனையும் எச்சந்தர்ப்பத்திலும் பொய் பேசக் கூடாது என்பதையும் பொய் பேசுவதன் விளைவு பற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும் என்பர். எனவே நாம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க சிறந்த கதைகளை வாசிக்கப் பழகவேண்டும்.

சிறந்த கதைகள் எம்மை நல்வழிப்படுத்துகின்றது. ஆகவே நல்ல கதைகளைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள நற்கருத்துக்களை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகுவோமாக!

You May Also Like :
கல்வி புரட்சி கட்டுரை
வரலாற்றை கற்பதன் பயன்கள் கட்டுரை