உழைப்பாளர் தினம் கட்டுரை

Ulaipalar Dhinam In Tamil

மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் உழைப்பாளர் தினம் கட்டுரை பதிவை இங்கு காணலாம்.

உழைப்பாளர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் அவர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறை சாற்றுவதற்குமாக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

  • உழைப்பாளர் தினம் கட்டுரை
  • தொழிலாளர் தினம் கட்டுரை
  • Ulaipalar Dhinam In Tamil

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.

உழைப்பாளர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தொழிலாளர் தினம் உருவான வரலாறு
  3. தொழிலாளர்களே நாட்டின் முதுகெலும்பு
  4. உழைப்பவர்களை மதிப்போம்
  5. முடிவுரை

முன்னுரை

மே தினம் உலக தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் மே 1 இல் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. போராடினால் எதையும் வெல்லலாம் என்பதை உறுதிபடுத்திய தினம் ஆகும்.

இதனை வள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று கூறுகிறார்.

கடின உழைப்பு இருந்தால் இங்கு சாத்தியம் இல்லாதது என்று எதுவுமில்லை பயனின்றி கிடந்த உலகத்தை பயன்தரும் விதமாக மாற்றியது மனிதனுடைய உழைப்பாகும்.

ஆரம்பகாலங்களில் உழைப்பவர்களின் உழைப்பை முதலாளி வர்க்கம் சுரண்டியது. இதனால் முதலாளிகள் வளர்ந்தனர் உழைப்பாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே உழைப்பால் உயர்வோம் என்ற தொனிப்பொருளில் மே தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கும் உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்து உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் வறுமையில் வாடும் பல லட்சம் தொழிலாளர்கள் உலகில் உள்ளனர்.

தொழிலாளர் தினம் உருவான வரலாறு, தொழிலாளர்களே நாட்டின் முதுகெலும்பு, உழைப்பவர்களை மதிப்போம் போன்ற விடயங்கள் இக்கட்டுரையில் நோக்கலாம்.

தொழிலாளர் தினம் உருவான வரலாறு

அமெரிக்காவில் 1890 ம் ஆண்டில் 8 மணிநேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் எனும் கோரிக்கையை வலியுறுத்தி உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர்.

இந்த போராட்டத்தை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடாத்தியது ஏராளமான தொழிலாளர்கள் இதில் கொல்லப்பட்டனர்.

இதனை சரி செய்ய முதலாளிகளை ஆட்சியில் இருந்து துரத்தி தொழிலாளர்கள் ஆட்சிபுரிந்தால் தான் நாடுகள் வளர்ச்சி அடையும் என கருதினர்.

இதனை முடிவுக்கு கொண்டுவரும் ஆற்றல் தொழிலாளர்களுக்கே உண்டென கூறி உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று கூறினர்.

உலக மக்கள் பயன்படுத்தும் உலகத்தில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் தொழிலாளர்களின் உழைப்பினாலேயே உருவாகின்றன.

இவற்றின் லாபத்தை முதலாளிகள் அனுபவித்து கொண்டு தொழிலாளர்களை வறுமையில் வாடவிடுகிறார்கள் என்ற உண்மையை உணரதொடங்கினர்.

அமெரிக்காவில் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து 1886 இல் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் வெற்றியும் கண்டனர்.

இத்தினத்தை நினைவுகூரவும் உலக தொழிலாளர்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தவும் தொழிலாளர் தினம் உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களே நாட்டின் முதுகெலும்பு

“உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்குமில்லை” என்பது பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடல் வரிகள் ஆகும்.

தொழிலாளர்கள் உழைக்காவிட்டால் இந்த உலகமே இயங்காது. நாம் உண்ணுகின்ற உணவாகட்டும், அணிகின்ற ஆடையாகட்டும், வாங்குகின்ற பொருட்கள் ஆகட்டும், பெற்று கொள்கின்ற சேவைகளாகட்டும்,

பயணிக்கின்ற வாகனங்கள் ஆகட்டும், இருக்கின்ற வீடாகட்டும் நாம் பாவிக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு உழைப்பாளியின் உழைப்பு வியர்வையிலேயே தங்கியிருக்கிறது.

தொழிலாளர்கள் உழைக்காது விட்டால் நாட்டின் பொருளாதாரமே முடங்கி போய்விடும். ஒரு நாட்டின் உடைய பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் கையிலேயே தங்கியுள்ளது.

ஆகவே தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களில் கவனம் செலுத்துதல் மற்றும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் போன்றவற்றில் அரசாங்கம் கவனமாக செயற்படவேண்டும்.

உழைப்பாளர்களை மதிப்போம்

“எந்த தொழில் செய்தால் என்ன செய்யும் தொழிலே தெய்வம்” என்று செய்கின்ற தொழிலை சிறப்பாக செய்து எமது நாட்டை தமது உழைக்கும் கரங்களால் தூக்கி நிறுத்தும் தொழிலாளர்களுக்கு சமூகத்தில் சரியான அந்தஸ்த்து கிடைப்பதில்லை.

உயர்வான தொழில்களையே உயர்வாக பார்க்கும் தவறான மனநிலை காணப்படுகிறது. அனைத்து தொழில் செய்கின்றவர்களையும் இச்சமூகம் மதிக்க வேண்டும்.

திருடுதல், சட்விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களை தான் சமூகம் எதிர்க்க வேண்டும். உழைத்து வாழ்பவர்களை மதிக்க பழக வேண்டும்.

இதனை “உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்று கூறுவார்கள்.

முடிவுரை

இவ்வுலகில் வெற்றி பெறுவதற்கு இலகுவான வழி கடுமையாக முயற்சி செய்வது தான்.

சுற்றுகின்ற பூமி தன் சுழற்சியை நிறுத்தி விட்டால் இரவு பகல் தோன்றாது. உலகம் இயங்காது.

அது போல் மனிதன் உழைக்க தவறி விட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நிலத்தில் விழுந்த விதை கூட எது வேர்பதிக்கிறதோ அதுவே மரமாய்உயரும்.

அதுபோல் வியர்வை சிந்தி சாமர்த்தியமாக உழைப்பதால் மட்டுமே வெற்றியடையலாம்.

உழைப்பால் உயர்வோம் உழைப்பாளர்களை போற்றுவோம் .

You May Also Like :

அறம் செய்ய விரும்பு கட்டுரை

எனது கனவு பள்ளி கட்டுரை