உள்ளடங்கல் கல்வி என்றால் என்ன

ulladangal kalvi in tamil

உள்ளடங்கல் கல்வி முறைமையானது கற்றலை எளிதாக்க கூடியனவாகவும் இலகுவானதுமான ஒரு கல்வி முறைமையாகும்.

உள்ளடங்கல் கல்வி என்றால் என்ன

உள்ளடங்கல் கல்வி என்பது மாணவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் சேர்ந்து கல்வி பயில்வதாகும். அதாவது கற்றல் திறன் குறைபாடு உடையவர்கள், பல மொழி பேசுபவர்கள், பண்பாட்டினை கொண்டவர்கள் அனைவரும் ஒன்றாக கல்வி பயிலும் முறையாகும்.

இது ஒருங்கிணைந்த கல்வியை விட விரிவான கருத்துக்களை தன்னகத்தே கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

உள்ளடங்கல் கல்வியானது சிறப்பு தேவையுடைய சில குழந்தைகளை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது கண்பார்வையற்ற குழந்தைகளுக்கான பிரெய்லி அமைந்த புத்தகங்களையும் கொண்டமைந்ததாக காணப்படும்.

பன்முகத்தன்மையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளடங்கல் கல்வி முறைமை அமைந்துள்ளது.

உள்ளடங்கல் கல்வியின் நன்மைகள்

உள்ளடங்கல் கல்வியானது தனிப்பட்ட வேறுபாடுகளை கற்று கொள்வதற்கும், ஏற்று கொள்வதற்குமான வாய்ப்பினை வழங்குகின்றது.

பல வகையான பிற குழந்தைகளுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவும், ஒவ்வொருவரும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் திறன்களை கொண்டுள்ளனர். இதனூடாக வெவ்வேறு திறன்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது.

இயலாமையுடைய குழந்தைகளும் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சக மாணவர்களின் உதவியுடன் கற்று கொள்வதற்கு துணைபுரிகின்றது.

உள்ளடங்கல் கல்வியானது சமூகத்தில் உள்ள அனைவரும் இலகுவாக கற்கக் கூடியதாகவும் எளிமையானதாகவும் அமைந்து காணப்படுகிறது.

உள்ளடங்கல் கல்வியின் இலக்குகள்

ஒரே வகுப்பில் பல்வேறுபட்ட இயல்புடைய மாணவர்களை கொண்டிருத்தல். இதனூடாக விசேட தேவையுடைய மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய மாணவர்களும் நன்மை பெறும் நோக்கில் இக்கல்வி முறையானது காணப்படும்.

மாணவர்கள் தனியாள் வேறுபாடு உடையவர்கள் அல்லது பல்வகைமை கொண்டவர்கள் என்பதனை விடவும் அதிகமாக ஒரே மாதிரியானவர்கள் என்பதின் ஊடாகவே இயலாமை கருத்திற்கொள்ளப்படாது அனைவராலும் ஒன்றாக கற்கக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துதல்.

கலாச்சாரம், கொள்கைகள் போன்றவற்றை மறுசீரமைத்து பல தரப்பட்ட மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்.

அனைத்து மாணவர்களுக்குமான தரமான கல்வியினை வழங்கல். அதாவது பொருத்தமான கற்றல் மற்றும் கற்பித்தல் உத்திகள் பயன்படுத்தப்படும்.

உள்ளடங்கல் கல்வி எதிர்நோக்குகின்ற சவால்கள்

உள்ளடங்கல் கல்வியின் போது பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. அதாவது அநேகமானவர்களுக்கு மத்தியில் தனிக் கல்வியே சிறந்தது என்ற ஒரு கருத்து ஏற்பட்டதன் காரணமாக உள்ளடங்கல் கல்வியை ஏற்க மறுக்கின்றனர்.

உள்ளடங்கல் கல்வியானது அனைவரையும் ஒன்றாக இணைத்து கல்வி வழங்கக் கூடிய ஒரு முறையாக காணப்படுவதால் விசேட தேவையுடையவர்களே அதிகமாக கற்றுக்கொள்கின்றார்கள் என்ற கருத்தானது நிலவுகின்றது.

மேலும் ஏனைய மாணவர்களுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் ஒன்றாகவே கற்பித்தல் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ளாது செயற்படுகின்றனர்.

பெற்றோர்கள் உள்ளடங்கல் கல்வி முறைமைக்கு உடன்படாது செயற்படுகின்றனர். விசேட தேவையுடைய குழந்தைகளுக்கென்று விசேட கல்வி முறை காணப்படல் வேண்டும் என்பதோடு அவர்கள் சிறப்பாக முன்னேறுவதற்கு விசேட கல்வி முறை உகந்நது என நம்புகின்றனர்.

ஆனால் பன்முக கலாச்சாரத்தினை கொண்டவர்கள் உள்ளடங்கல் கல்வியில் கற்கும் போது தாழ்வு மனப்பான்மை போன்றவை நீங்கி அனைவரும் ஒன்றாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை இவ் உள்ளடங்கல் கல்வி முறையானது கொண்டுள்ளது.

எனவேதான் உள்ளடங்கல் கல்வியின் நன்மைகளை அனைவரும் புரிந்து கொள்வதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெற்றோர்கள் உள்ளடங்கல் கல்வியில் தமது குழந்தைகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும். இதனூடாக சிறந்த கல்வியினை அனைவரும் பெற்று கொள்ள முடியும்.

Read More: உடற்கல்வியின் நோக்கங்கள்

அழகியல் கல்வியின் முக்கியத்துவம்