இளைஞர்கள் பற்றிய கட்டுரை

இளைஞர்கள் கட்டுரை

இந்த பதிவில் “இளைஞர்கள் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இளைஞர்கள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சமுதாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு
  3. இலத்திரனியல் ஊடகமும் இளைஞர் சமூகமும்
  4. இளைஞர் எழுச்சி நாள்
  5. இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்பர். நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூண்களாக கருதப்படுபவர்கள் இளைஞர்களே.

இன்றைய ஆட்சியிலும் பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இளைஞர்கள் மாறியுள்ளமையும், மாறப் போவதும் சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையாகும்.

இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாகக் கருதப்படுகின்றனர். இத்தகைய இளைஞர்கள் பற்றிய இக்கட்டுரையில் காண்போம்.

சமுதாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு

இன்றைய உலகம் அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதில் இளைஞர்களின் பங்களிப்பும் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. காரணம் இளைஞர்களின் பார்வைகள், கருத்துக்கள், முயற்சிகள் என அனைத்துமே முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது.

சமூக சேவைகள், இரத்த தானங்கள், வறியோர்க்கு வலுவளித்தல், புதிய கண்டுபிடிப்புகள், விவசாயம் என பல்வேறுபட்ட ரீதியில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

இலத்திரனியல் ஊடகமும் இளைஞர் சமூகமும்

நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இலத்திரனியல் ஊடகங்களுடன் அதிகளவான தொடர்புகளை கொண்டுள்ளோம்.

இன்றைய இளைஞர்களின் வளர்ச்சியில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் அதேநேரம் பல எதிர்மறையான பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது.

இலத்திரனியல் சாதனங்களின் வருகையின் பின்னரே இளைஞர் சமூகம் சீரழிந்து போயுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை கொண்டு தவறான வீடியோக்கள், போலியான தகவல்கள் பரிமாற்றம், மற்றவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள், மிரட்டல்கள் தொந்தரவுகள் என்பன அதிகரித்து காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

இளைஞர் எழுச்சி நாள்

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையான அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான, அக்டோபர், 15ம் தேதி, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும், ‘இளைஞர் எழுச்சி நாளாக’ கொண்டாடப்படுகின்றது.

எதிர்காலம் சிறக்கக் கனவு காண வேண்டும் எனக் கூறிய கற்பக விருட்சம் அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாளில் இளைஞர்கள் எழுச்சி நாள் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியதாகும்.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இளைஞர்களால் பெரும்பாலும் மன அழுத்தத்தையும், கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை. இன்று இளைஞர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்களை நெரித்துக் கொண்டிருக்கிறது மன அழுத்தம்.

கல்வி ரீதியான நெருக்கடிகள் இளைஞர்களைச் சோர்வடையச் செய்துவிடுகின்றது. இளைஞர்கள் மனதளவில் எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல், உடல் அழகு சார்ந்தகவலையாகும். தோல் நிறம், உயரம், உடற்கட்டு, முக வெட்டு போன்ற பல்வேறு கூறுகளின் அடிப்படையில் அழகு நிர்ணயிக்கப்படுவதால், அதில் குறைபாடு இருக்கும் இளைஞர்களின் தன்னம்பிக்கை நசுக்கப்படுகிறது.

முடிவுரை

ஒருநாட்டின் சொத்துக்களான இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவது தான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

அத்தோடு இளைஞர்கள் அவர்களது தனித் திறனை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும். இளைய சமுதாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இளைஞர்கள் தங்களது சக்தியை நல்வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும்.

You May Also Like :
சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை
இளம் வயது திருமணம் கட்டுரை