இளம் வயது திருமணம் கட்டுரை

ilam vayathu thirumanam katturai in tamil

இந்த பதிவில் “இளம் வயது திருமணம் கட்டுரை” பதிவை காணலாம்.

பதினெட்டு வயதினை அடைந்து கொள்ளாத ஆண் மற்றும் பெண்கள் சிறுவர்களாகவே கருதப்படுவார்கள்.

இளம் வயது திருமணம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இளவயது திருமணங்கள்
  3. இவற்றுக்கான காரணங்கள்
  4. விளைவுகள்
  5. திருமண தடுப்பு சட்டம்
  6. முடிவுரை

முன்னுரை

இன்று அறிவியல், கலாச்சாரம், பண்பாடு என பல வழிகளிலும் மனித சமூகம் முன்னேறிவிட்டது. என்றாலும் இன்றளவும் இளவயது திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றின் காரணமாக சமூக மட்டத்தில் பலவகையான பிரச்சனைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

இவற்றினால் இளம் சமுதாயத்தின் வளமான எதிர்காலமானது குழிதோண்டி புதைக்கப்படுகின்றது. இக்கட்டுரையில் இளவயது திருமணம், அவற்றின் விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள் என்பன தொடர்பாக நாம் நோக்கலாம்.

இளவயது திருமணங்கள்

இந்தியாவில் ஆரம்ப காலங்களில் இருந்தே சில முட்டாள்தளமான மூடநம்பிக்கைகளும் மதகோட்பாடுகள் காணப்பட்டன. இவை தான் ஆரம்பகாலங்களில் இருந்தே இளம் வயது திருமணங்களை ஆதரித்து வந்தன.

இதன் விளைவாக இளம் வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்ற கொடுமை இடம்பெற்று வந்தது. இதனை பலர் எதிர்த்து வந்தாலும் சில கல்வி அறிவற்ற சமூகங்கள் இன்றுவரை இதனை ஆதரித்து வருகின்றமை கண்டிக்க தக்கதாகும்.

இவற்றுக்கான காரணங்கள்

பதினெட்டு வயதினை அடைந்து கொள்ளாத ஆண் மற்றும் பெண்கள் சிறுவர்களாகவே கருதப்படுவார்கள். இந்த வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்க திருமணம் செய்து வைப்பது சட்டத்தின் படி குற்றமாகும்.

இருப்பினும் சில சமூகங்கள் தங்களது குடும்ப வறுமை போன்றவற்றை காரணம் காட்டி குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் என்பற்றை கருத்தில் கொள்ளாது இள வயது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஒரு பாரிய பிரச்சனையாக குறிப்பாக இந்தியாவில் காணப்படுகின்றது. சில மக்களின் சம்பிரதாயமாகவும் இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விளைவுகள்

இத்தகைய செயல்களால் குழந்தைகளின் கல்வி இடைநிறுத்தப்படுகின்றது. இதனால் அவர்களது எதிர்காலம் கனவுகள் வீணடிக்கப்படுகின்றது.

மற்றும் பல வகையான வன்கொடுமைகள், குடும்ப பிரச்சனைகள், போதை பொருள் பாவனைகள், வன்முறை கலாச்சாரம், வறுமை, வேலையின்மை மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகி தற்கொலைகள் இடம்பெறவும் இவை காரணமாகி விடுகின்றன.

திருமண தடுப்பு சட்டம்

இந்த இளவயது திருமணங்கள் ஒருவகையில் சிறுவர் உரிமை மீறல் குற்றமாக கருதப்படுகின்றது. இதனால் சிறுவர் உரிமைகளை பாதுகாத்து அவர்களது எதிர்காலத்தை காக்க திருமணம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

2006 ஆம் ஆணடு திருமணதடுப்பு சட்டத்தின் பிரகாரம் இத்தகைய குற்றத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.

முடிவுரை

ஒரு சில மக்கள் மத்தியில் காணப்படுகின்ற இவ்வகையான சில தவறான நடைமுறைகள் சமூக கட்டமைப்பில் பல சீரழிவுகளை உண்டாக்குவதனால் உடனடியாக இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை அரசு மற்றும் நீதி துறை எடுக்க வேண்டும்.

அத்துடன் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளது அடிப்படை உரிமைகள் மற்றும் கனவுகள் தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது இவ்வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

You May Also Like :
மொழியும் பண்பாடும் கட்டுரை
பாடசாலை பற்றிய கட்டுரை