இந்த பதிவில் “ஆற்றல் என்றால் என்ன” என்பது பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
ஆற்றல் என்றால் என்ன
இயற்பியலின் வரையறையின் படி ஆற்றல் என்பது ஒரு வேலை செய்யத் தேவைப்படும் திறன் ஆகும். இது ஊக்கம், வலிமை, வீரியம், சாரம், வல்லமை, திறமை என பல பொருள்படும். ஆங்கிலத்தில் “Energy” என அழைக்கப்படுகின்றது.
ஆற்றல் என்பதினை நேரடியாக கண்ணால் பார்க்கவோ, தொட்டுணரவோ, புலன்களால் அறியவோ இயலாது. இவ்வாற்றல் தொழிற்படும் பொருள்களின் வாயிலாகவே அறியமுடிகிறது.
எந்த ஒரு வேலையையும் செய்ய ஆற்றல் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி ஆற்றல்களை நாம் ஆற்றல் மூலங்களில் இருந்து பெறுகிறோம்.
ஆற்றல் வகைகள்
ஆற்றல் தொழிற்படுகின்ற விதத்திற்கு அமைவாக அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- இயந்திர ஆற்றல்
- வேதி ஆற்றல்
- மின் ஆற்றல்
- வெப்ப ஆற்றல்
- சூரிய ஆற்றல்
1. இயந்திர ஆற்றல்
உயரமான இடத்தில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர் அதிக ஆற்றலை பெற்றிருக்கும். அணையில் இருந்து கீழே விழும் நீரின் ஆற்றலைக் கொண்டு, மின்னாக்கியின் கம்பிச் சுருளை சுழற்றுவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வியந்திர ஆற்றல் நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் என இரு வகைப்படும்.
- நிலை ஆற்றல்
ஒரு பொருள் அதன் நிலையை பொறுத்தோ அல்லது வடிவத்தை பொறுத்தோ பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும். அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர் போன்றவை சற்று உயர்த்தில் நிலையாக இருப்பதனால், அவை நிலை ஆற்றலைப் பெற்றுள்ளன.
- இயக்க ஆற்றல்
இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும். நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர் போன்றவை இயக்கத்தில் உள்ளதால் அவை இயக்க ஆற்றலை பெற்றுள்ளன.
இயந்திரஆற்றலின் பயன்கள்
- இயந்திர ஆற்றல் மூலமாக நிலையாக உள்ள பொருளை ஓய்வு நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது.
- காற்றின் இயக்க ஆற்றலை கொண்டு காற்றாலைகள் மூலம் மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.
2. வேதி ஆற்றல்
வேதி வினையின்போது வெளிப்படும் ஆற்றல் வேதி ஆற்றல் எனப்படும். மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது வேதி ஆற்றல் ஆகும்.
வேதி ஆற்றலின் பயன்கள்
- தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கும், செயல்களுக்கும் அவற்றின் உணவில் உள்ள வேதி ஆற்றல் பயன்படுகிறது.
- மின் கலங்களில் உள்ள வேதியாற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
- எரிப்பொருள்களைப் பயன்படுத்தும் போது அதில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
3. மின் ஆற்றல்
காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது. மின் விளக்கில் மின்னாற்றல் ஒளி ஆற்றலாகவும், மின்விசிறியில் மின்னாற்றல் மின்னியக்க ஆற்றலாக வரும் மாற்றமடைகிறது.
மின்னாற்றலின் பயன்கள்
- தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்கவும் தொலைத் தொடர்புத் துறையிலும் மின்னாற்றல் பயன்படுகிறது.
- . பெருநகரங்களில், மின்சார தொடர்வண்டியை இயக்கவும் மின்னாற்றல் பயன்படுகிறது.
4. வெப்ப ஆற்றல்
வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதனை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஜீல் என்பவர் ஆவார். வேதி வினைகள் மற்றும் உராய்வின் மூலமாகவும் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது.
வெப்ப ஆற்றலின் பயன்கள்
- சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் தான் மழை கிடைக்கிறது.
- அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதனால் கிடைக்கும் வெப்ப ஆற்றலினால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- மின்சார அடுப்பு, மின்சார சலவைப் பெட்டி ஆகியவற்றில் மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
5. சூரிய ஆற்றல்
சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றல் சூரிய ஆற்றல் எனப்படும். கி.மு 212 இல் ஆர்க்கிமிடீஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞர் சூரிய ஆற்றலை பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க் கப்பல்களை எரித்தார்.
சூரிய ஆற்றலின் பயன்கள்
- நீர் சூடேற்றும் கருவி , சூரிய அடுப்பு ஆகியவற்றில் சூரிய ஆற்றல் நேரடியாக பயன்படுகிறது.
- செயற்கைக் கோள்களிலும், கணக்கீட்டு கருவிகளிலும் சூரிய மின்கலங்கள் பயன்படுகிறது.
- சூரிய ஆற்றல் வாகனங்களை இயக்கப் பயன்படுகிறது.
ஆற்றல் மாற்றமும் பலனும்
இயற்கையின் எல்லா இயக்கத்திற்கும் விதிமுறைகள் இருப்பது போலவே ஆற்றலுக்கும் இரு விதிகள் உண்டு.
- ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறத்தக்கது.
- ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
You May Also Like: |
---|
கணையம் என்றால் என்ன |
வசந்த பஞ்சமி என்றால் என்ன |