மணிமேகலை வாழ்க்கை வரலாறு

Manimegalai In Tamil

இந்த பதிவில் “மணிமேகலை வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை இலக்கியத்தின் காப்பிய தலைவியே மணிமேகலை ஆவாள்.

மணிமேகலை வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

சிலப்பதிகாரத்திற்கு அடுத்தபடியாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலைக் காப்பியமாகும். இக்காப்பியத்தின் தலைவியே மணிமேகலையாவாள். சிலப்பதிகாரக் காப்பியத்தில் இடம்பெறும் கோவலனும்⸴ மாதவியும் வாழ்க்கை நடத்திய பயனாக மணிமேகலை மகளாகப் பிறந்தாள்.

மணிபல்லவத் தீவு என்னும் தீவில் உள்ள கடல் தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பக்தியால் கோவலன் மணிமேகலை எனும் பெயரைத் தன்மகளுக்குச் சூட்டினான்.

கோவலனைப் பிரிந்த பின்பும் அவரது மரணத்தின் பின்பும் மணிமேகலையின் தாயான மாதவி துறவரம் போனாலும் தனது மகளான மணிமேகலைக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுக்கின்றார்.

இருப்பினும் மணிமேகலை சிறு வயதில் இருந்து துறவற வாழ்வை வாழவே விருப்பம் கொண்டு வந்தவள் ஆவாள். நல் அறங்களைப் போதிப்பதும்⸴ காமத்தின் கொடுமை⸴ கொலையின் கொடுமை⸴ பொய்யின் தீமை⸴ களவின் துன்பம் போன்ற தீய குணங்களை உணர்த்துவதையும் அறமெனக் கொண்டு வாழ்ந்தாள்.

தொடக்க வாழ்க்கை

மணிமேகலை சீரும் சிறப்புமாகவே குழந்தைப் பருவத்தில் வளர்க்கப்பட்டார். மணிமேகலை மிகவும் அழகு நிறைந்த பெண்ணாவாள். தாயான மாதவியின் அழகை விஞ்சும் அளவிற்கு அழகு நிறைந்தவள்.

ஆரம்பத்திலிருந்தே மாதவியும் கோவலனும் மணிமேகலையை கணிகைப் பெண்ணாக வளர்க்க விரும்பவில்லை. மாதவி தன் மகளை ஓர் கணிகைப் பெண்ணாக வளர்க்க விரும்பாத காரணத்தால் இவள் கோவலனின் குல வாரிசாகவே வளர்க்கப்பட்டார்.

இதன் காரணமாகத் தான் கோவலன் மற்றும் கண்ணகி மரணத்தின் பின்பு மாதவி தன்னுடைய வாழ்க்கையின் சாயலை மகள் மணிமேகலை மீது சற்றும் படாத வண்ணம் வளர்த்தெடுத்தார்.

மணிமேகலை புத்த மடம் ஒன்றிலேயே வளர்ந்து வந்தாள். சிறுவயதில் இருந்தே பல கலைகளைச் சிறப்புடன் கற்றாள்.

மணிமேகலையின் காதல்

இளவரசன் உதயகுமரன் மணிமேகலை மீது தீராக் காதல் கொண்டு அவளை பின் தொடர்ந்தான். மணிமேகலையின் நெஞ்சமும் அவன்பால் ஈர்க்கப்பட்டது. ஏன் தன் உள்ளம் அவனிடம் செல்கின்றது என்ற கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.

எனினும் அவள் எடுத்துக்கொண்ட துறவு வாழ்க்கையிலிருந்து பின் நிற்காமலும்⸴ மனதை அலைபாய விடாமலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தனது லட்சியத்தை அடைந்தாள்.

இளவரசன் உதயகுமாரனின் காதலை உதறித் தள்ளி இறுதிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து சராசரிப் பெண்களை விட மேலானவர் என்பதை உணர்த்தியுள்ளார்.

முற்பிறப்பில் லஷ்மியாக வாழ்ந்த மணிமேகலையின் கணவனான ராகுலே உதயகுமாரன். இதனால் தான் அவள் மனம் சிறிது அலைபாய்ந்தது. தன் முற் பிறப்பின் உண்மைகளை மாதவி அறிந்த போதிலும் அவள் மனம் சலனம் கொள்ளவில்லை.

எனினும்⸴ தன் முடிவில் திடமாக இருந்து இறுதிவரை துறவற வாழ்வை வாழ்ந்து காட்டினாள். உலகிலுள்ள எந்த பரந்த பாசத்திலும் சிக்காமல் நல்வழியில் நடந்தவளே கற்பில் சிறந்த பெண்ணான மணிமேகலை ஆவாள்.

மணிமேகலையின் துறவு

மணிமேகலை துறவற வாழ்க்கையை வாழவே பிறப்பெடுத்தாள். ஒரு குளத்தில் மணிமேகலைக்குக் கிடைக்கப்பெற்ற அட்சய பாத்திரமானது அள்ள அள்ள குறையாத பாத்திரமாகும்.

இதன் மூலம் அவள் உலக மக்களின் பசியைப் போக்கினாள். யானைத்தீ எனும் தீராப்பசிச் சாபத்தைப் பெற்ற காயசண்டிகையின் தீராப்பசியைத் தன் அமுதசுரபியின் ஒரு பிடி உணவு கொடுத்து தீர்த்து வைத்தாள் மணிமேகலை.

அதுமட்டுமன்றிப் பல ஏழை மக்களுக்கு உணவளிக்கும் சிறந்த தொண்டை மணிமேகலை செய்தாள். இளவரசன் உதயகுமாரன் தொல்லைகள் பல கொடுத்த போதிலும் தனது உருவத்தை மாற்றி துறவற வாழ்வை வாழ்ந்தவளாவாள்.

சமயநெறிகளில் தேர்ச்சி பெற வஞ்சி மாநகர் சென்றாள். வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படுவது தற்காலத்தில் கரூர் நகரம் ஆகும். இங்கு பல சமய நெறிகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு பின் காஞ்சி மாநகர் சென்று மக்கள் பசியைப் போக்கினாள்.

தனது குருநாதர் அறவண அடிகள் மூலம் சமய நெறிகளைக் கற்றுத் தேர்ந்த மணிமேகலை முழுமையான புத்தத் துறவியாகித் தவத்தில் கலந்தாள். மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை மறைவிற்குப் பின் தெய்வமாகப் போற்றப்படுகின்றாள்.

பெரும்பான்மை இந்து சமய நெறிகளுக்கு மாறான பௌத்த மதத்தைப் பின்புலமாகக் கொண்ட, சமய சாதி பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் போன்றவை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய உலகில், முதன் முறையாக, ஒரு சாதாரணப் பெண்மணியை, அதுவும் கணிகையர் எனும் நடன மாந்தர் குலத்தில் பிறந்த பெண்ணை கதையின் நாயகியாக கொண்டு இலக்கியத்தை படைத்தார் சீத்தலைச் சாத்தனார் என்றால், அது மிகவும் தைரியமான ஒரு செயல் என்பதைவிட, புரட்சிகரமான செயல் என்பதே சரியாக இருக்கும்.

இந்திய முற்போக்கு சமுதாயத்தில் சாதி⸴ இனம்⸴ மதம் அறியாத நிலையிலேயே உள்ளன. நவீன காலகட்டத்தில் ஆண்⸴ பெண் சம உரிமைச் சூழல் உள்ள போதும் பெண்களுக்கு இன்றும் முழுமையான சுதந்திரம்⸴ உரிமை இல்லாத நிலையையே பெரிதும் காணமுடிகின்றது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு பெண் அடிமைப்பட்டிருந்த ஆணாதிக்க சமூகத்தில்⸴ மூட நம்பிக்கைகள் நிறைந்த மக்கள் மத்தியிலும் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதனை எண்ணிப் பார்த்தால் மணிமேகலைப் பாத்திரப் படைப்பானது புரட்சியும்⸴ பெருமையும் கொண்டதே என்றால் அது மிகையாகாது.

You May Also Like :

ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை

சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை