இந்த பதிவில் “தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
இந்தியர்களாகிய நாம் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டு எமது தேசத்தை முன்னேற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
Table of Contents
தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இந்தியர்களின் ஒற்றுமை
- ஒருமைப்பாடு வளர்ப்போம்
- ஒருமைப்பாடு வளர்க்கும் வழிமுறைகள்
- ஒருமைப்பாட்டின் தேவைப்பாடு
- சர்வதேசத்தில் இந்தியா
- முடிவுரை
முன்னுரை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அதாவது நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்ற முதுமொழியை இங்கு ஞாபகப்படுத்தி கொண்டு வரலாற்றில் எம்மை ஆக்கிரமிக்க வந்த அந்நியர்கள் எமது ஒற்றுமையின்மையை பயன்படுத்தியே எமது நாட்டை அடிமைப்படுத்தினார்கள். அதில் இருந்து சுதந்திரமடைய கடுமையாக போராடவேண்டியிருந்தது.
எமது முன்னோர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியமையால் தான் சுதந்திரம் என்ற பெருவெற்றியை இந்தியா அடைந்து கொண்டது.
எனவே தான் தேசிய ஒருமைப்பாடு என்பது ஒரு தேசத்தின் வாழ் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இக்கட்டுரையில் தேசிய ஒருமைப்பாடு பற்றி நோக்கலாம்.
இந்தியர்களின் ஒற்றுமை
இந்தியாவை பல மாகணங்கள், பல சமயங்கள், பல மொழிகள் என்று பல விடயங்கள் வேறுபடுத்தினாலும் இந்தியர்கள் என்ற உணர்வினால் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுகின்ற சமயம் ஒவ்வொரு இந்தியர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் போலவும் ஒற்றுமை மிக்க தேச பக்தர்களாகவும் தம்மை உணர்கின்றனர்.
விளையாட்டுக்கள் சர்வதேச போட்டிகள் என தாய்நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதை தமது உயர்ந்த கௌரவமாக கருதுகின்றனர். இவ்வாறு தாய்நாட்டின் பற்று இந்தியர்களின் ஒற்றுமையை உலகத்துக்கு எடுத்து காட்டுகிறது.
ஒருமைப்பாடு வளர்ப்போம்
இந்த தேசத்தின் மக்கள் தமக்குள் முரண்படுவதையோ சண்டை இடுவதனையோ தவிர்த்து தாம் அனைவரும் ஒரு தேசத்தின் மக்கள் என்ற சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களும் வாழ்வில் முன்னேற தேசப்பற்று மிகவும் அவசியமாகும்.
வேறெந்த தேசங்களுக்கும் இல்லாத தனி சிறப்புக்களை உடைய எமது நாடு கல்வி, விளையாட்டு, அறிவியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் முன்னேற நாட்டின் பிரஜைகளிடத்து ஒற்றுமையானது அவசியமானதாக உள்ளது.
ஒற்றுமையினை வளர்த்து கொள்வதனால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைந்து கொள்ள முடியும்.
ஒருமைப்பாடு வளர்க்கும் வழி முறைகள்
தேசிய ஒருமைப்பாட்டை நாம் வளர்த்து கொள்ள வேண்டுமானால் நாம் சக மனிதர்களை எமது சகோதர்கள் போல நடாத்த வேண்டும்.
“முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற பாரதியாரின் வரிகளை போல இந்தியர்கள் அனைவரும் சிந்தனைகளால் ஒருமித்து இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் தம் நாடு பெரியது என்று வாழ்ந்தால் ஒரு மிகப்பெரிய மாற்றமானது உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
ஒருமைப்பாட்டின் தேவைப்பாடுகள்
நமது முன்னோர்கள் வளர்த்து சென்ற தேச ஒற்றுமை இன்று மாறி செல்கின்றது. சொந்த தேசத்து மக்களிடையே ஒற்றுமை குன்றி முரண்பாடுகளும் கலவரங்களும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்ற இன்றைய நிலையானது மிக இக்கட்டான நிலையாகும்.
இந்த நிலையில் மக்களிடையான ஒருமைப்பாட்டினுடைய தேவைபாடு அதிகரித்துள்ளது. கொரோனா போன்ற பெரும் இடர்களால் நாடு இன்று சிறிய தடுமாற்றம் கண்டிருக்கின்றது. இதில் இருந்து மீண்டெழுவதற்கு மக்களின் ஒருமைப்பாடு மிகவும் அவசியமானதாக உள்ளது.
சர்வதேசத்தில் இந்தியா
சர்வதேசத்தில் இந்தியா எப்பொழுதும் ஒரு பலமான நாடாக விளங்குகிறது. இன்று இந்து சமுத்திர பிராந்தியத்திலும் ஆசியாவிலும் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலானதாக உள்ளது.
பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் சர்வதேச அரசியலில் இந்தியாவை மிஞ்ச வேண்டும் என்ற குறிக்கோளில் சீனா செயற்பட்டு வருகின்றது. ஆகவே இந்தியர்களாகிய நாம் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டு எமது தேசத்தை முன்னேற்ற வேண்டிய சூழலில் இன்று இருக்கின்றோம்.
முடிவுரை
அண்மையில் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்த “நீரஜ் சோப்ராவின்” சாதனை ஒவ்வொரு இந்தியர்களாலும் கொண்டாடப்பட்டதை அவதானித்திருப்போம்.
ஒரு இந்தியரின் சாதனையை உலகமெங்கிலும் இருக்க கூடிய இந்தியர்கள் பெருமையோடு கொண்டாடிய விதம் அவர்களின் ஒற்றுமையை உலகுக்க காட்டியிருந்தது.
இதனை போலவே இந்தியர்கள் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டால் உலக அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like :