ஜென்ம சனி என்றால் என்ன

janma sani endral enna

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்த சூரியகுமாரனே சனிபகவான் ஆவார். இவர் எமதர்மனின் சகோதரனும் ஆவார்.

சனிபகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர். அதனால் இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். தர்மம், அதர்மம், காமம், மோட்சம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன் ஆவார்.

இவர் நவக்கிரகங்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார். இவர் ஒவ்வொரு ராசியில் அமர்ந்திருக்கும் வீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகின்றார். அவற்றில் ஜென்ம சனி பற்றி நோக்குவோம்.

ஜென்ம சனி என்றால் என்ன

ஜோதிடப்படி இராசிக்கு முதலாம் வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பின் அது ஜென்ம சனி என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஜோதிடம் ரீதியாக ஒரு ராசிக்கு ஒன்றாம் இடத்தில் சனி அமர்ந்திருப்பின் அதற்கு ஜென்ம சனி என்று பெயர்.

ஒரு உயிர் பிறப்பெடுத்த ஜென்ம ராசிகள் சனி பகவான் சஞ்சாரம் செய்வதற்கு ஜென்ம சனி என்கிறோம்.

ஜென்ம சனியின் பலன்கள்

ஜென்ம சனி நடக்கக்கூடிய காலத்தில் பல்வேறு இழப்புகள் நிகழும் அல்லது அதற்கேற்ற அளவு துன்பங்களும் நிகழலாம்.

  • ஜென்ம சனி நடக்கும் காலத்தில் ஒருவர் எவ்வளவு பிரபலமானவராக சமூகத்தில் நன்மதிப்பு பெற்று காணப்பட்டாலும் கூட, பல்வேறு விமர்சனத்திற்கும் மதிப்பு குறைதலுக்கும் மனத்துயரத்திற்கும் உள்ளாக நேரிடுகிறது.
  • தன் சகோதர சகோதரிகள், உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகளும்,  பகைகளும்  வளர்ந்து கொள்ளக்கூடிய சூழல் உருவாகும்.
  • புதிய ஆடை வாங்குதல், அணிகலன்கள் வாங்குதல் அல்லது அவை திருடு போதல் போன்ற பல நிகழ்வுகள்  விரயம் ஏற்படும் வகையில் நிகழலாம். சிலருக்கு விபரீத எண்ணங்கள் தோன்றலாம்.
  • உத்தியோகஸ்தர்களுக்கு உயர்ந்த நிலைகளிலிருந்து பல சறுக்கல்கள் ஏற்படக்கூடும்.
  • பிறரினால் ஒதுக்கப்பட்டு, பிறரின் ஒத்துழைப்பு இல்லாமல் தானே அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
  • தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய அளவு லாபம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் வியாபாரம் நஷ்டத்தில் செல்லும்.
  • கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் உங்களின் கூட்டாளி பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படலாம். உங்களுடனான ஒத்துழைப்பு குறைவாக இருக்கும், அதனால் தொழில் புரியும் இடத்தில் பல மன வருத்தங்கள் ஏற்படக்கூடும்.
  • குடும்ப உறவில் பல பிரச்சினைகளால் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.
  • படித்த முடித்து வேலை தேடுபவர்களுக்கு சரியான வேலை அமையாமல் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

கஷ்டத்தை குறைப்பதற்கான பரிகாரம்

  • சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று அங்குள்ள நவக்கிரகங்களில் காணப்படும் சனி பகவானை பூசித்து அர்ச்சனைகள் செய்தல் வேண்டும்.
  • சனிபகவானுக்கு எள் எண்ணெய் எரித்தல் வேண்டும்.
  • தினமும் இறைவழிபாடு செய்தல் வேண்டும்.
  • விசேட பூஜைகள், தனிப்பட்ட பூஜைகள் என்பவற்றையும் ஆற்றலாம்.
  • தியான பயிற்சிகள் என்பவற்றை மேற்கொள்ளல்.

Read more: பாத சனி என்றால் என்ன

கண்டக சனி என்றால் என்ன