நாம் வாழும் இப்பூமியானது நீல நிற ஆடை போற்றியவாறு காணப்படுவதற்கு கடலே காரணம். உலகில் 70 வீதமான பங்கில் கடல் காணப்படுகின்றது. எனவே கடல் என்பது பூமிப் பரப்பின் மிகப்பெரிய பரப்பைக் கொண்டிருக்கின்றது.
இவ்வகையில் கடல் என்ற சொல்லானது கடத்தற்கு அறியதென்று பொருள்படும். இன்னொரு வகையில் நீந்திக் கடப்பதற்கு அரியது என்பதாக கருதலாம். இறைவன் படைப்பில் அனைத்துமே அதிசயம் அதிலும் கடல்கள் மாபெரும் அதிசயம்.
கடலின் ஆழத்தை யாராலும் அளக்க முடியாது அந்தக் கடலிலும் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. இவ்வாறு சிறப்புடைய கடலுக்கு தமிழில் மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Table of Contents
கடலின் வேறு பெயர்கள்
- அரலை
- அரி
- அலை
- அழுவம்
- அளக்கர்
- அளம்
- ஆர்த்தி
- ஆலந்தை
- ஆழி
- ஈண்டுநீர்
- உரவுநீர்
- உவர்
- உவரி
- உவா
- ஓதம்
- ஓதவனம்
- ஓலம்
- கயம்
- கலி
- கார்கோள்
- கிடங்கர்
- குண்டு நீர்
- குரவை
- சக்கரம்
- சலதரம்
- சலதி
- சலநிதி
- சலராசி
- சுழி
- தாழி
- திரை
- துறை
- தெண்டிரை
- தொடரல்
- தொன்னீர்
- தோழம்
- நரலை
- நிலைநீர்
- நீத்தம்
- நீந்து
- நீரகம்
- நிரதி
- நிராழி
- நெடுநீர்
- நெறிநீர்
- பரப்பு
- பரவை
- பரு
- பாரி
- பாழி
- பானல்
- பிரம்பு
- புணர்ப்பு
- புணரி
- பெருநீர்
- பெளவம்
- மழு
- முந்நீர்
- வரி
- வலயம்
- வளைநீர்
- வாரி
- வீரை
- வெண்டிரை
- வேழாழி
கடலின் சில வேறு பெயர்களும் அதன் பொருளும்
ஆழி:- கடலின் உள்ளே சென்று அதன் ஆழ்பரப்பு ஆரம்பிக்கும் இடம்தான் ஆழி எனப்படும். எனவே ஆழம் தொடங்கும் இடம் ஆழி. கடல் ஆழம் கொண்டதால் இப்பெயர் வழங்கப்பட்டது.
பரவை:- கடலின் பரந்து விரிந்து தன்மையால் இப்பெயர் வழங்கப்பட்டது.
முந்நீர்:- கடலுக்கு முந்நீர் என்ற பெயரும் வழங்கப்படுகின்றது இதற்கு காரணம் மூன்று வகையான நீர் கடலில் கலப்பதனால் இதற்கு முந்நீர் எனப் பெயர் வைத்தனர். அதாவது கடலில் பெய்யும் மழை நீர், கடல் அடி நிலத்தின் ஊற்றுநீர், ஆற்று நீர் போன்றவை கலப்பதனால் இதற்கு இப்பெயர் வந்தது.
வியன்நீர்:- கடலை கண்டு வியக்க வேண்டி இருப்பதால் இப்பெயர் வந்தது.
You May Also Like : |
---|
நீர் வேறு பெயர்கள் |
ஆசிரியர் வேறு பெயர்கள் |