இந்த பதிவில் “அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
சிறந்த தமிழ் சொற்பொழிவாளர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத்தன்மை என பல முகம் கொண்டவர்.
Table of Contents
அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு
அறிமுகம்
தமிழ்த்தாயின் தலைமகன்⸴ பெரியாரின் போர்படைத் தளபதி⸴ காஞ்சிபுரம் தந்த தனிப்பெரும் தலைவன்⸴ சாமானிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் புகழுக்கு உரியவன் பேரறிஞர் அண்ணா ஆவார்.
முதலில் திராவிட மற்றும் தமிழ்நாட்டுத் தென்னிந்திய மாநில முதலமைச்சராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஒரு பள்ளி ஆசிரியராகவும்⸴ பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழக மக்களால் இவர் “தென்னாட்டு பெர்னாட்ஷாˮ என்று அன்போடு அழைக்கப்படுகின்றார். தமிழ்⸴ ஆங்கிலம்⸴ ஹிந்தி என மும்மொழிகளிலும் திறமை பெற்றிருந்த முற்போக்கு சீர்திருத்தவாதியாவார்.
வரலாற்றுப் பக்கங்களில் முதன்மையான இடத்தில் எப்போதும் வைத்துப் போற்றப்படுகின்றவராவர். தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டவட்டமான வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா என்றால் அது மிகையாகாது.
ஆங்கிலத்தில் “மெட்ராஸ்ˮ என்றும் “மதராஸ்ˮ என்றும் கொச்சையாக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழர்கள் வாழ்ந்த நிலத்திற்கு ஓர் அடையாளமே இல்லாமல் இருந்தது.
இவர்தான் பல தமிழ் பற்றார்களினதும் தமிழ் மக்களினதும் கோரிக்கையை ஏற்று “தமிழ்நாடுˮ எனப் பெயர் கொடுத்தார்.
இயற்பெயர்: | காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை |
புனைப்பெயர் | அறிஞர் அண்ணா |
பிறந்த திகதி: | செப்டம்பர் 15, 1909 |
பிறந்த இடம்: | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
பெற்றோர்: | நடராசன் முதலியார் – பங்காரு அம்மாள் |
பணி: | அரசியல்வாதி |
இறப்பு: | பெப்ரவரி 3, 1969 |
தனிப்பட்ட வாழ்க்கை
பட்டு நெசவுக்குப் புகழ் பெற்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடராசன்⸴ பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 1909 செப்டம்பர் 15ஆம் திகதி பிறந்தவர் தான் அண்ணாதுரை. இவர் பிறந்த கையோடு இவரை வளர்த்து எடுக்கும் பொறுப்பை தன்னுடைய இளைய சகோதரி ராஜாமணி பொறுப்பில் ஒப்படைத்துவிட்டார் பங்காரு.
பள்ளிக் கல்வியை காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் முடித்தார். அண்ணாதுரை சென்னை சென்றும் கல்லூரியில் படித்தார். இவருக்கு கல்வி மீது ஆர்வம் இருந்தாலும் இவரின் தந்தை மரணம் அடையவே பொருளாதாரச் சூழல் வலுவானதாக இருக்கவில்லை.
இருப்பினும் பேராசிரியர்களும்⸴ ஆசிரியர்களும் இவருக்கு உதவி செய்யவே இவர்களின் துணையோடு பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அது மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்று விளங்கினார்.
இவருக்கு எழுத்திலும் பேச்சிலும் அதிக ஆர்வம் இருந்தது. சிறுகதைகள்⸴ கதைகள்⸴ நாடகங்கள் உள்ளிட்டவைகளையும் எழுதினார். படிக்கும் போதே ராணி என்பவரை திருமணமும் செய்து கொண்டார். தன் ஆரம்ப கால வாழ்க்கையைப் பள்ளி ஆசிரியராக துவங்கினார்.
அரசியல் நுழைவு
அண்ணாதுரைக்கு அரசியல் மீதான ஆர்வம் காதலாக மாறாது. அப்போதைய காலத்தில் சென்னை மாகாணத்தில் காங்கிரசும்⸴ நீதிக்கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருந்தன. காங்கிரசை விட நீதிக்கட்சியின் மீதே அதிக ஆர்வம் அண்ணாதுரைக்கு இருந்தது.
நீதிக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலரோடு அண்ணாதுரைக்கு தொடர்பு இருந்தது. நீதிக் கட்சியின் பேச்சாளராக பொதுக்கூட்டங்களில் பேசினார். நீதிக் கட்சி ஆதரவு பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதினார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார். இதுவே இவர் எதிர்நோக்கிய முதல் தேர்தலாகும்.
அண்ணா பெரியார் முரண்பாடு
திருப்பூரில் பெரியாரைச் சந்தித்து பெரியாரின் தொண்டராகவே மாறினார். இவரின் திறமையை உணர்ந்து பெரியார் தான் நடத்திய குடியரசு⸴ விடுதலை உள்ளிட்ட நாளிதழ்களில் துணை ஆசிரியராக நியமித்தார்.
பல போராட்டங்களுக்கு அண்ணாதுரையை பெரியார் தளபதியாக்கினார். இவரது பேச்சாற்றலும்⸴ எழுத்தாற்றலும் ஏராளமான இளைஞர்களைப் போராட்டத்தில் இணைத்து வைத்தது. இதன் காரணமாக இவர் கைதும் செய்யப்பட்டார். முக்கியமான தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் பெரியாரின் மொழிபெயர்ப்பாளராக இவரே இருந்துள்ளார்.
இதன் மூலம் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆகவே மாறினார். நீதிக்கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு பெரியாருக்குக் கிடைக்கவே அந்த கட்சியை சுத்திகரிக்க விரும்பிய பெரியார் திராவிட கழகம் எனப் பெயர் மாற்றத் தயாரானார்.
இதன் மூலம் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது. பெரியாரும்⸴ அண்ணாவும் இணைந்து பெற்ற மாபெரும் வெற்றி என திராவிட தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். எனினும் இந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
திராவிடக் கழகத்தின் கருப்புச் சட்டைப் படையை உருவாக்க விரும்பிய பெரியார் கட்சியின் அனைத்து தொண்டர்களும் கருப்பு சட்டை அணிய வேண்டும் என தெரிவித்தார். ஆனால் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தான் கருஞ்சட்டைப் படையை வைத்திருந்தார் என்று தெரிவித்து அண்ணா மறுத்தார்.
இந்த விவகாரம் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதன் நீட்சியாகவே புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கு நிதி திரட்டும் முயற்சியின் காரணமாக அண்ணா மீது பெரியார் எதிர்ப்பு உருவானது.
இதுவே பிரிட்டிஷ்காரன் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு எடுத்த சமயத்தில் விரிசலாக மாறியது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15 துக்க நாள் என்றார் பெரியார். ஏனெனில் வட இந்தியரிடம் திராவிடர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்படுவதாக கருதினார்.
ஆனால் அண்ணா அவர்கள் இதனை ஒரு சுதந்திரமான நாட்டுக்கான⸴ ஜனநாயக அரசியலுக்கான வாய்ப்பாக பார்த்தார்.
மேலும் 70 வயதான பெரியார் தன்னை விட 40 வயதில் சிறிய பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு எடுத்தது மற்றும் தனக்குப் பிறகு தனது மனைவியாரை தலைவராக்கப் பார்க்கின்றார் என்ற விமர்சனமும் எழுந்தது. இதன் காரணமாக 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்தினார் அண்ணா.
அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற முதலே அண்ணாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது அமெரிக்கா சென்று மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோதிலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் திகதி மரணம் அவரை ஆட்கொண்டது.
You May Also Like :