வெள்ளைப் பூசணியில் விற்றமின் B, விற்றமின் C, கல்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இன்றைய இந்த பதிவில் வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள் பற்றி பார்ப்போம்.
வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள்
#. ஒவ்வொரு நாளும் காலையில் வெள்ளைப் பூசணியின் சாறுடன் தேனைக் குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படுவதோடு, வயிற்றில் தொற்றுக்கள் ஏற்படாது.
#. வெள்ளைப் பூசணி சாறு தினமும் காலையில் வெறுமனே குடித்துவர உடல் எடை குறையும். இந்த சாற்றில் அதிகளவு நீர்ச்சத்து காணப்படுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படும்.
#. உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் தினமும் வெள்ளைப் பூசணி சாற்றை குடித்து வர உடல் சூடு தணிக்கப்படும். அத்தோடு, உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு, உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.
#. வெள்ளைப் பூசணி சாறினை தேனுடன் கலந்து ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் குடித்து வர இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
#. தினமும் 120ml வெண்பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுதல், சிறுநீருடன் இரத்தம் வெளிவருதல், அல்சரால் இரத்தக்கசிவு ஏற்படுதல், பைல்ஸினால் இரத்தக்கசிவு ஏற்படுதல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்த்து வைக்கும்.
#. வெண்பூசணி சாறு குடிப்பதன் மூலம் சிறுநீரகங்களைத் தூண்டி இரத்தத்தில் இருக்கக் கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுவதோடு குடலில் ஆங்காங்கே ஒட்டி இருக்க கூடிய உணவுக் கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றும்.
#. தினமும் வெள்ளைப் பூசணி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
#. வெள்ளைப் பூசணியில் அதிகளவு காரத்தன்மை காணப்படுவதால் வயிற்றில் உள்ள செரிமான அமிலத்தினது ph அளவு கட்டுப்படுத்துவதோடு சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
#. அதுமட்டுமல்லாமல் தினமும் காலையின் வெள்ளைப் பூசணிச் சாற்றினை குடிப்பதால் மலச்சிக்கல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
#. தினமும் வெள்ளைப்பூசணி சாற்றினை குடித்து வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
#. வெள்ளைப்பூசணி சாற்றினை தினமும் குடிப்பதனால் அதில் உள்ள விற்றமின் சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தினை அதிகரிப்பதோடு மூளையின் செயற்பாட்டை வினைத்திறனாக்குகின்றது.
#. வெள்ளைப் பூசணி சாற்றில் அதிகளவு அன்ரிஒக்ஸிடென்ஸ் காணப்படுவதால் இது அல்சர் பிரச்சனையைக் குணமாக்கும்.
#. வெள்ளைப் பூசணி சாற்றில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுவதால் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு தொற்று நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
#. வெள்ளைப் பூசணி சாற்றை தினமும் குடிப்பதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உருவாவன தடுத்து நிறுத்தப்படுவதோடு புற்று நோய் செல்கள் உருவாகுவது தடுக்கப்படுகின்றது.
#. வெள்ளைப்பூசணி சாற்றில் அதிகளவில் சுவாச மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றல் காணப்படுவதால் நுரையீரலை பாதிக்கும் சளிக்கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுவதோடு நுரையீரல் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.
#. வெள்ளைப் பூசணி சாற்றினை குடிப்பதால் அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் உருவாகும் அசிடிட்டி பிரச்சனைகளில் இருந்து எதிர்த்து போராட உதவி செய்கிறது.
#. தினமும் காலையில் காபிக்குப் பதிலாக வெள்ளைப் பூசணி ஜூஸினைக் குடிப்பதனால் மூளையில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கப்படுவதோடு நரம்புகள் மற்றும் மூளையை அமைதி அடையச் செய்வதோடு மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.
மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வெள்ளைப் பூசணி சாற்றினைப் பருகி அதனது நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்.
Read More: முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்