பிரமை என்றால் என்ன

Piramai In Tamil

இந்த பதிவில் “பிரமை என்றால் என்ன” என்பதை விரிவாக காணலாம்.

பிரமை என்றால் என்ன

பிரமை என்பது இல்லாத ஓர் விடயத்தை இருப்பது போல அல்லது நடக்காத ஓர் விடயத்தை நடந்தது என்று நினைத்துக் கொள்ளும் ஒருவித மனநிலையே ஆகும். இல்லாததை இருப்பது என்று நினைத்துக் கொண்டு வாழ்வது ஆகும்.

இது மாயையின் ஓர் தோற்றமாகும் மற்றும் மனநிலைசார் ஒருவித நோயாக காணப்படுகிறது. இது மயக்கம், பைத்தியம், பெருமோகம், அறியாமை, மாயை என பலவாறு அழைக்கப்படுகிறது.

பிரமை மரபியல் வழியாகவோ, மூளையில் ஏற்படும் நரம்பு தளர்ச்சி காரணமாக பெரிதும் ஏற்படுகிறது.

இதனை விட அதிக வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தனிமையில் நீண்ட காலம் இருத்தல் என்பவற்றினாலும் ஏற்படலாம்.

பிரமையின் வகைகள்

பிரமைகள் தோற்றம் பெறும் விதத்தினை அடிப்படையாகக் கொண்டு  ஐந்து வகைகளாக காணப்படுகிறது.

1. செவிவழிப்பிரமை :-

விசித்திரமான குரல்கள், ஓசைகள் கேட்பது போல் உணர்தல்.

2. காட்சி வழிப்பிரமை :-

உண்மையானவை இல்லாத நபர்கள், வண்ணங்கள், வடிவங்கள் அல்லது உருப்படிகளை பார்ப்பது போல் உணர்தல்.

3. தொட்டுணரக் கூடிய பிரமை அல்லது ஹாப்டிக் பிரமை :-

தோலின் மேல் ஏதோ ஊர்ந்து செல்வது போல, யாரோ தொடுவது போல அல்லது அவர்கள் எதையோ தொட்டுணர்வது போல் உணர்தல்.

4. வாசனைப் பிரமை :-

ஏதோ ஒரு வாசனை எந்நேரமும் அவர்களை ஆட்கொள்வது போல் உணர்தல்

5. கஸ்டேட்டரி பிரமை :-

வாயில் ஏதோ ஒரு சுவை  இருப்பது போல உணர்தல்.

சித்தப்பிரமை

இந்நோய் சாதாரண பிரமைகளில் இருந்து சற்று வீரீயம் கூடியதாக காணப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவரை சமாளிப்பது கடினமான விடயமாகும்.

அவர்களினால் சுயமாக எவ்விடயத்தையும் சரியாக சிந்தித்து செயற்படவும் இயலாது, எந்த விடயத்தையும் இலகுவாக புரிந்து கொள்ளவே இயலாது. தாமாகவே ஓர் கற்பனை செய்து கொண்டு அதனையே நிஜமென நினைத்து செயற்படுவார்கள்.

பிறர் இது அவர்களின் கற்பனை என்பதை புரிய வைக்க முற்பட்டாலும் அவர்கள் அதனை விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.

உலகில் உள்ள மக்களில் 1 சதவீதமான மக்களே இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர்களுக்கு இந்நோய் 2 மடங்கு அதிகமாக வருகின்றது.

இது உடனே ஏற்படும் நோயாக அல்லாமல் நீண்ட நாட்கள் உள்ளிருந்து வெளிப்படும் நோய் ஆகும். இவர்களுக்கு பிறர் கூறும் விடயங்களை நினைவில் வைத்துக்கொள்வது கடினமான விடயமாக காணப்படும்.

எப்பொழுதும் ஏதோ ஒரு உருவம் கண்முன் தெரிவது போலவும், ஏதோ ஓர் குரல் கேட்பது போல எண்ணம் எழுந்த வண்ணம் காணப்படும். இவர்களிடம் உணர்ச்சிகள் அதிகமாக காணப்படும்.

அதாவது ரொம்ப அதிகமாக கோபப்படுதல் மற்றும் எதன் மேலாவது ஆசை வைத்தால் அதனை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றும்.

சித்த பிரமை அறிகுறிகள்

  • அதிகப்படியான பிரமைகள் தோன்றுதல்.
  • பேச்சு, நடவடிக்கைகளில் வித்தியாசம் ஏற்படல்.( அசாதாரணமாக செயற்படல் )
  • தம்முடைய நெருங்கிய உறவுகளே தம்மை கொலை செய்ய வருவதாக சிந்தித்தல்.
  • எந்நேரமும் முணுமுணுத்தவண்ணம் இருத்தல், வித்தியாசமாக சிரித்தல் மற்றும் தம்மை தாமே கவனிக்காத வண்ணம் இருத்தல்.

தீர்வுகள்

  • சரியான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை சரியான முறையில் வழங்குதல்.
  • அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்து அவற்றை அன்புடன் நிறைவேற்றி வைத்தல்.
  • அன்பான முறையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்.
  • மன அழுத்தத்திற்கு செல்லவிடாமல் எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருத்தல்.
  • அவர்களின் சுகாதாரம்சார் விடயங்களை அடிக்கடி நினைவுப் படுத்தி சுத்தமான முறையில் இருக்க பழக்குதல்.
  • போதைப்பொருள் பாவனை உள்ளவர்களை அதிலிருந்து விடுபட உதவுதல் மற்றும் மனநிலை மருத்துவர்களிடம் அழைத்து செல்லல்.
You May Also Like:
கிவி பழம் நன்மைகள்
நாவல் பழத்தின் நன்மைகள்