“இனி ஒரு விதி செய்வோம்” என பாடிய மகாகவி பாரதியார் பற்றிய குறிப்புகள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
பாரதி எனும் புரட்சி கவிஞன் தமிழையும் மக்களையும் அன்போடு நேசித்த பெரும் காதலன். அவன் கொண்ட தமிழ் பற்று அளவிட முடியாதது.
இந்த பாரதியார் பற்றிய குறிப்புகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ் இங்கு படியுங்கள்.
Table of Contents
பாரதியார் வினாடி வினா
1. தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டும் என பாரதியார் கூறினார்?
- பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்.
2. பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர் என்ன?
- இந்தியா, விஜயா
3. பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?
- கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர் பன்முக ஆற்றல் பெற்றிருந்தார்.
4. “சிந்துக்குத் தந்தை” எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார்?
- பாரதிதாசன்
5. வாழ்க நிரந்திரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்று தமிழை போற்றியவர் யார்?
- பாரதியார்
6. வசன கவிதைகளையும் சீட்டுக் கவிதைகளையும் எழுதியவர் யார்?
- பாரதியார்
7. தமிழ் மொழி வாழ்த்து கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
- பாரதியார் கவிதைகள் என்ற நூலில்
8. பாரதியாரின் இயற்பெயர் என்ன?
- சுப்பிரமணியம்
பாரதியார் பற்றிய சிறு குறிப்பு
வாழ்க்கை குறிப்பு
இயற்பெயர் – சுப்பிரமணியம்
பிறந்த ஊர் – எட்டயபுரம்
பெற்றோர் – சின்னசாமி ஐயர் – இலக்குமி அம்மாள்
மனைவி – செல்லம்மாள்
வாழ்ந்த காலம் – 11.12.1882 முதல் 11.09.1921 வரை (39 ஆண்டுகள்)
பாரதியார் புனைப்பெயர்கள்
- காளிதாசன்
- சக்திதாசன்
- சாவித்திரி
- ஷெல்லிதாசன்
- நித்திய தீரர்
- ஓர் உத்தம தேசாபிமானி
பாரதியார் சிறப்பு பெயர்கள் யாவை?
- மகாகவி
- மக்கள் கவிஞர்
- வரககவி
- தேசியக்கவி
- விடுதலைக்கவி
- அமரக்கவி
- முன்னறி புலவன்
- தமிழ்க்கவி
- உலககவி
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- பாட்டுக்கொரு புலவன் பாரதி
- நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
- காடு கமழும் கற்பூரச் சொற்கோ
- புதுக்கவிதையின் முன்னோடி
- பைந்தமிழ் தேர்பாகன்
- சிந்துக்குத் தந்தை
பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை?
பாரதியார் கவிதை நூல்கள்
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாப்பா பாட்டு
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
- பாரததேவியின் திருத்தசாங்கம்
- காட்சி (வசன கவிதை)
- புதிய ஆத்திச்சூடி
பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்
- ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்)
- தராசு
- சந்திரிகையின் கதை
- மாதர்
- கலைகள்
பாரதியார் சிறுகதைகள்
- ஸ்வர்ண குமாரி
- சின்ன சங்கரன் கதை
- ஆறில் ஒரு பங்கு
- பூலோக ரம்பை
- திண்டிம சாஸ்திரி
- கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)
- நவந்திரக் கதைகள்
பாரதியார் நாடக நூல்
- ஜெகசித்திரம்
You May Also Like :