பருவநிலை மாற்றம் கட்டுரை

Paruva Nilai Matram Katturai In Tamil

இந்த பதிவில் “பருவநிலை மாற்றம் கட்டுரை” பதிவை காணலாம்.

பருவநிலை மாற்றம் இன்று உலகம் எதிர் கொள்ளும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது.

மனிதனின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தை தவிர்க்க முடியும்.

  • காலநிலை மாற்றம் கட்டுரை
  • Paruva Nilai Matram Katturai In Tamil
இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

பருவநிலை மாற்றம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பருவநிலைகளின் அவசியம்
  3. காலநிலை மாற்றத்தை உருவாக்கும் காரணிகள்.
  4. காலநிலை மாற்றமும் அனர்த்தங்களும்.
  5. காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.
  6. உலகளவில் காலநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள்
  7. முடிவுரை

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் உலகளவில் அதிகம் பேசப்படும் விடயமாக இந்த பருவநிலை மாற்றம் காணப்படுகிறது. மனித வாழ்க்கையினை சவால் நிறைந்ததாக இந்த காலநிலை மாற்றம் மாற்றி வருகிறது.

இயற்கையாக இந்த பூமியில் உவப்பான காலநிலை நிலவி வந்தது. இதனால் சூழலும் சமநிலையாக இருந்தது. மனித வாழ்க்கையும் அமைதியாக இருந்தது.

ஆனால் கடந்த 20 வருடங்கள் அவ்வாறில்லை உலகம் அபிவிருத்தி எனும் பாதையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் காலநிலையும் இயற்கையும் தமது சீற்றத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இதனால் மனிதன் செய்வதறியாது திகைத்து வருகின்றான். இக்கட்டுரையில் பருவநிலை மாற்றம் எவ்வாறு உருவாகின்றது, அதனுடைய விளைவுகள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்றன இடம் பெறுகின்றன.

பருவநிலைகளின் அவசியம்

காலநிலை எனப்படுவது ஒரு நீண்ட காலமாக அவதானிக்கப்படும் வானிலை மாற்றங்களினுடைய தொகுப்பாகும். மனிதனுடைய வாழ்க்கைக்கு காலநிலை மிகமுக்கியமான பங்களிப்பை வழங்குகிறது.

காலநிலை மூலகங்கள் ஆன காற்று, சூரியஒளி, ஈரப்பதன், வளி, அமுக்கம் போன்றன. சீராக நிலவுகின்ற போது தான் பூமியில் மனிதனால் வாழ முடியும்.

உதாரணமாக மோசமான காலநிலை நிலவுகின்ற சகாரா பாலைவனங்களிலோ வடதென் பனி துருவங்களிலோ மனிதனால் ஈடுகொடுத்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும்.

மிதமான காலநிலை தன்மை நிலவுகின்ற பிரதேசங்களில் தான் மனிதர்கள் வாழமுடியும். பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும் இதர தொழில் முயற்சிகளிலும் ஈடுபடமுடியும்.

காலநிலை மாற்றத்தை உருவாக்கும் காரணிகள்

காலநிலை மாற்றம் ஏற்பட அதிகம் பங்காற்றுவது மனிதர்களே இவர்களது தொழில்நுட்பங்களால் கைத்தொழில் புரட்சியின் பிற்பாடு உலகமெங்கும் பல தொழிற்சாலைகள் உருவாக தொடங்கின.

இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மோட்டார் வாகனங்கள் வீதியை நிரப்ப துவங்கின. ஆகாயவிமானங்கள் வானத்தில் பறந்தன. பாரிய கப்பல்கள் சமுத்திரங்களில் பவனி வந்தன. இவற்றினால் உண்டாகும் மாசாக்கம் எல்லை கடந்து செல்ல துவங்கின.

காபன் வாயுக்கள், பச்சைவீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகளவில் சேர துவங்கின. “குளோரோ புளோரோ காபன்” ஓசோன் படையை சிதைவடைய செய்ய அளவு கடந்த வெப்பமும் தீய கதிர்வீச்சுக்களும் பூமிக்குள் வர துவங்கின.

இதனால் பூமி வெப்பமடைய துவங்கியது. இதனால் தான் இயல்பான காலநிலை தன்மைகள் கடுமையாக மாற துவங்கியது.

காலநிலை மாற்றமும் அனர்த்தங்களும்

காலநிலை மாறுபாட்டின் காரணமாக உலகில் அதிகளவில் இயற்கை அனர்த்தங்கள் ஆண்டு தோறும் இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

அளவுக்கு மீறிய மழை வீழ்ச்சி ஏற்படுவதனால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன. மற்றும் கடுமையான வரட்சி, வெப்ப அலைகள் உருவாகுதல், பாலைவனமயமாதல் போன்ற நிகழ்வுகள் அதிகம் இடம்பெறுகின்றன.

வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகள் காற்றழுத்த தாழ்வினால் தாழமுக்க நிலைகள் உருவாகி கடும் வெள்ளஅனர்த்தங்கள் வருடம் தோறும் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியா, வடஅமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் காட்டுத்தீ உருவாக காலநிலை மாற்றமே காரணமாக அமைகின்றது.

காலநிலை மாற்றத்தினால் விவசாயம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படுகின்றன. இயற்கை சூழலும் உயிரினங்களும் கூட இவற்றினால் பாதிக்கபடுகின்றன.

காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மனிதன் இயற்கையின் சமநிலையை பேணவேண்டும். காபன்களின் வெளியேற்றத்தை முற்றாக குறைக்க வேண்டும்.

பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிலம், நீர், காற்று, ஆகாயம் போன்றவற்றில் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாசடைதலை தடுத்தாக வேண்டும். காடுகளுக்கு புத்துயிர் அழிக்க வேண்டும்.

இயற்கையை மீள கட்டியமைப்பதன் மூலமாக தான் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.

உலகளவில் காலநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள்

எமது பூமியை காலநிலை மாற்றத்தில் இருந்த பாதுகாக்க நாமே போராடவேண்டும். உலகளவில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

முதன்மையாக The Intergovermental Panel On Climate Change என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையினால் 1988 இல் உருவாக்கப்பட்டது .

காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கைகளை தயாரித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றது.

இந்த நிறுவனத்துக்கு 2007 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. WMO , UNEP போன்ற நிறுவனங்கள் இதனோடு இணைந்து காலநிலை மாற்றத்துக்கெதிராய் போராடி வருகின்றன.

முடிவுரை

மனிதர்களுடைய வாழ்வு இந்த பூமியை சார்ந்ததாகும். அதன் பாதக நிலைமைகள் மனிதகுலத்தை நேரடியாக பாதிக்கும். காலநிலை மாற்றம் பாரிய பாதக விளைவுகளை இன்று ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

ஆகவே இன்றே விழித்து கொள்ள வேண்டும் மனிதர்கள் சுயநலமாக சிந்திப்பதை விடுத்து பிறரும் வாழவேண்டும்.

இந்த பூமி பாதுகாக்கபடவேண்டும் இந்த காலநிலை மாற்றத்துக்கெதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நாம் செய்கின்ற சூழலுக்கெதிரான செயற்பாடுகளை தவிர்ப்பதே சிறந்த செயலாகவிருக்கும்.

You May Also Like :

உலக வெப்பமயமாதல் கட்டுரை

நெகிழியின் தீமைகள் கட்டுரை