இந்த பதிவில் “நேர்மையுடன் தற்சார்பு கட்டுரை” பதிவை காணலாம்.
இன்று வளர்ச்சி அடைந்து தன்னிறைவு அடைந்துள்ள பல நாடுகளும் ஒரு காலத்தில் நேர்மையான தற்சார்பை கடைப்பிடித்த நாடுகளே ஆகும்.
Table of Contents
நேர்மையுடன் தற்சார்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுதந்திர இந்தியப் பொருளாதாரம்
- நேர்மையுடனான தற்சார்பு
- நேர்மையுடனான தற்சார்பை மேம்படுத்த தேவையானவை
- தற்சார்பில் இளைஞர்களின் முக்கியத்துவம்
- முடிவுரை
முன்னுரை
நம் நாடு சுதந்திரம் அடைந்து பல வருடங்களாகி விட்டது. இந்தச் சுதந்திரத்தில் நேர்மையுடன் தற்சார்பு பொருளாதாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றுகின்றது. ஒரு நாடு தனக்குத் தேவையானதை தானே உற்பத்தி செய்து கொள்வதைத் சார்பு என்கின்றோம்.
“கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்ˮ என பாரதி அளித்த பரிமாற்றக் கொள்கையின் விரிவான கருத்துருவே தேசிய சார்பு எனலாம்.
இத்தேசிய தற்சார்புடனும் நேர்மையுடனும் இருப்பின் நாடு செழிக்கும். நேர்மையுடன் தற்சார்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சுதந்திர இந்தியப் பொருளாதாரம்
இந்தியா சுதந்திரம் அடைந்த போது நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து இருந்தது. பாகிஸ்தான் பிரிவினை காரணமாக வேளாண்மை நிலங்கள் பாகிஸ்தான் நாட்டைச் சென்றடைந்தது.
இதன் காரணமாக நாட்டை மேம்படுத்தும் பணியில் நேரு உட்பட பல அறிஞர்கள் ஈடுபட்டனர். 5 ஆண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். 1951 ஆம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது.
இதன் நோக்கம் விவசாயம், சமுதாய மேம்பாடு, நீர்ப்பாசனம், மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளை மேம்படுத்துவதாகும்.
நேர்மையுடனான தற்சார்பு
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தற்சார்புத் தன்னாக்கத் திறன் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது⸴ சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது போன்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இவ்வாறு மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி கொண்டனர்.
நேர்மையுடனான தற்சார்பை மேம்படுத்த தேவையானவை
கல்வியை மேம்படுத்துவது அவசியம் ஆகும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள்⸴ தொழில்துறை முன்னேற்றம் அடையும். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தித் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
விவசாயம்⸴ கைத்தொழில் போன்றன ஊக்குவிக்கப்பட வேண்டும். சமமான விலை நிர்ணயம் செய்வது⸴ கூலி வருவாய் அமைப்பு முறையை தோற்றுவிப்பது ஆகியன மூலம் நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
தற்சார்பில் இளைஞர்களின் முக்கியத்துவம்
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்ˮ என்ற கூற்றிற்கு இணங்க ஒவ்வொரு இளைஞர்களும் தங்கள் பங்களிப்பை நாட்டிற்கு வழங்க வேண்டும்.
கல்வி அறிவினைப் பயன்படுத்தி தொழில் துறையில் சாதனை படைக்க வேண்டும். சுய தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். இளைஞர் சமுதாயம் மேம்படும் போது தான் பொருளாதார வளம் உயரும்.
நாட்டின் எதிர்கால முன்னேற்றம் இளைஞர்கள் கைகளில் உண்டு என்பதை உணர்ந்து இந்திய நாட்டின் முன்னேற்றத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.
முடிவுரை
நாம் இன்னும் அயல்நாட்டுப் பொருட்களை நாடி வருகின்றோம். இதன் பொருள் நாம் தற்சார்பு அடையவில்லை என்பதே ஆகும். இந்த நிலை மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்திய நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை முன்னேற்றும் பணியில் பங்காளராய் மாறுவோம்.
You May Also Like: