தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழியாகும். தொன்மை மட்டுமல்ல இனிமையான மொழியாகவும் உள்ளது. இம்மொழியைப் பேசும் தமிழ் மக்களில் பலரும் பிழையின்றி எழுதுவது அரிதாகி வருகின்றது.
இது வயது வேறுபாடின்றி நிகழ்கின்ற பிரச்சினையாகவுள்ளது. இதற்கு முதற் காரணம் தமிழில் சில எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லையேயாகும். தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி என்பதனை இப்பதிவில் காண்போம்.
தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி
#1. எழுத்துக்களை இணங்காணல்.
தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி “ன” என்பதும், மூன்று சுழி “ண” என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு ஆகும்.
“ண்” என்பதை “டண்ணகரம்” என்றும், “ன்” என்பதை “றன்னகரம்” என்றும், “ந்” என்பதை “தந்நகரம்” என்றே கூற வேண்டும். இவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது.
எங்கெல்லாம் இந்த மூன்று சுழி “ணகர” ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய் எழுத்து “ட” வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும்.
உதாரணம் – மண்டபம், கொண்டாட்டம்
இதனால்தான் இதற்கு “டண்ணகரம்” என்று பெயர்.
இரண்டு சுழி “ன்” ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் “ற” என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.
உதாரணம் – தென்றல், சென்றான்.
“ந்” ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் “த” என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.
உதாரணம் – பந்து, வெந்தயம், மந்தை
#2. பன்மைச் சொற்களை இனங்காணல்.
பன்மைச் சொற்கள் “கள்” விகுதியை ஏற்று முடிவடையும்.
உதாரணமாக – “யானைகள் போர்க்களம் சென்றது” இவ்வாக்கியம் பிழையானது. காரணம் ‘யானைகள்’ என்னும் அஃறிணைப் பன்மைப்பெயர் ‘சென்றது’ என்னும் அஃறிணைப் ஒருமை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும். எனவே ‘சென்றன’ எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.
“அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தன” இவ்வாக்கியம் தவறானதாகும். அதாவது இரண்டாவதாக வரும் ‘சந்தேகமே’ எழுவாய் ஆகும். ஆதலால் ஒருமை முடிவு பெற வேண்டும். “அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தது” என்று வாக்கியம் முடிவடைய வேண்டும்.
#3. வல்லின எழுத்துக்கள்
க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்துக்களோடு துவங்கும் வார்த்தைகளுக்கு முன்பு மட்டுமே ஒற்றெழுத்து வரும். இதில் ட, ற என்கிற எழுத்துக்களோடு பொதுவாக வார்த்தைகள் துவங்காது என்பதால் க, ச, த, ப மட்டுமே கவனிக்க வேண்டியவை.
ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து, இரண்டாம் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும்.
உதாரணங்கள் –
- பூ+பறித்தாள் – பூப்பறித்தாள்
- தீ+பிடித்தது – தீப்பிடித்தது
- கை+குழந்தை – கைக்குழந்தை
#4. அதிகளவாகப் புத்தகம் வாசிக்க வேண்டும்.
நல்ல புத்தகங்களை வாசிக்கும் போது அறிவையும், மொழி வளத்தையும், மொழியைக் கையாளும் விதத்தையும், இலக்கண அமைப்பையும் மறைமுகமாகக் கற்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.
Read more: கட்டுரை எழுதுவது எப்படி