இந்த பதிவில் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்க கூடிய “சதகுப்பை மருத்துவ குணங்கள்” பற்றி பார்க்கலாம்.
குறுஞ்செடியாக பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் பழுத்ததும் தனியாக பிரிக்கப்படும். இதன் விதைகள் கொத்துமல்லி விதைகள் போன்று இருக்கும்.
இதன் விதையை உலர்த்தி பொடியாக்கினால் அதுவே சதகுப்பை என்றழைக்கப்படுகிறது. இது சோயிக்கீரை விதை, மதுரிகை என்றும் அழைக்கப்படுகிறது.
சதகுப்பை மருத்துவ குணங்கள் (Sathakuppai Benefits In Tamil)
1.ஜீரண சக்தியை தூண்டும் சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் ஜீரண சக்தியை தூண்டும்.
2. கபத்தைப் போக்கும். சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும்.
3. பசியைத் தூண்டும் மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் பசி ஏற்படும்.
4. கர்ப்பப்பை கோளாறைக் குறைக்கும் சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இவற்றை சம அளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.
5. சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
6. நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுகளை அகற்றும். சதகுப்பைச் சூரணம் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர நுரையீரலிலுள்ள மாசுக்கள் நீங்கும்.
7. சூதகசந்தி, சூதகக்கட்டு, காக்கை வலிப்பு முதலியவற்றிற்கும் சிறந்த மருந்தாகும். சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுக்கலாம்.
8. சதகுப்பை விதையை அரைத்து, வெந்நீராவியில் வேகவைத்து இதன் வேருடன் அரைத்து கீல் வாயுவிற்குப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.
9. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தோன்றும் அதிகப்படியான இரத்தபோக்குக்கு சதகுப்பையை மருந்தாக பயன்படுத்தலாம். சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் மூன்றையும் சம அளவாக எடுத்து இடித்து பொடியாக்கி சம அளவு பனைவெல்லம் கலந்து வைக்கவும். இதை காலையிலும் மாலையிலும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு சோம்பு கலந்த நீர் குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.
10. பிரசவித்த பிறகு தாய்ப்பால் சுரப்புக் குறைவாக இருந்தால் சதகுப்பை, அமுக்குரா சூரணம் இரண்டையும் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
11. நாள் முழுவதும் கடுமையான வேலை செய்பவர்கள் சோர்வு தெரியாமல் இருக்க இதை உணவில் சேர்த்துச் சாப்பிடல் நல்ல பலன் கிடைக்கும்.
You May Also Like: |
---|
ஆவாரம் இலை பயன்கள் |
கொய்யா இலையின் பயன்கள் |