இந்த பதிவில் “கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை தமிழ் (Corona Katturai In Tamil For Students)” காணலாம்.
உலகமே தத்தளிக்கும் இந்த கொரோனா பேரிடரில் நாமும் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை ஆகும்.
Table of Contents
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை தமிழ்
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- தோற்றம்
- கொரோனா உலக பேரிடர்
- தடுப்புமுறைகள்
- கொரோனா அரசியல்
- முடிவுரை
முன்னுரை
அண்மைக்காலமாக உலகையே உலுக்கிய நிகழ்வு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் உலகில் பல லட்ச கணக்கான உயிர்களை பலி கொண்டு இன்னமும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கின்ற ஒரு தொற்று நோயாகும்.
உலக வரலாற்றில் தசாப்தங்கள் தோறும் தொற்றுநோய்கள் உருவாகி அதிக மக்களை பலி கொள்வது இயற்கையாகும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு உலகையே முடங்க வைத்தது சீனாவில் இருந்து உருவான இந்த வைரஸ் மருத்துவ துறையில் பெருவளர்ச்சி கண்ட நாடுகளை கூட ஆட்டம் காணவைத்திருந்தது.
இந்த கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா இதன் தோற்றம் அவற்றால் உண்டான பாதிப்பு உலகின் கொரோனா அரசியல் தடுப்பு முறைகள் என்பவற்றை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
தோற்றம்
இவ்வைரஸ் 2019 இல் சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவானதாக சொல்லப்படுகிறது சீனாவில் இருந்து உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவலடைந்து இருக்கிறது.
இந்நோயானது (SARS-CoV-2) எனும் வைரஸ்ஸினால் உருவாக்கப்பட்டமையால் COVID-19 என அழைக்கப்படுகிறது.
இது மனித உடலில் மூக்கு வளியாக உள்நுளைந்து மனிதனின் சுவாசதொகுதியை பாதித்துமனிதன் மரணிக்கவும் சாத்தியமுள்ள உயிர்கொல்லி வைரஸ் ஆகும்.
மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு மிகவேகமாக பரவுகின்ற இந்த வைரஸ் ஆனது 2020 இல் உலகமெங்கும் பரவியது.
இதன் தாக்கத்தால் உலகின் விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டதுடன் நாடுகள் தமது எல்லைகளையும் மூடின இதனால் சரவதேச வர்த்தகம் சுற்றுலாத்துறை என்பன வீழ்ச்சி கண்டன.
கொரோனா உலக பேரிடர்
உலகின் அனைத்து பிராந்தியங்களையும் அச்சத்தில் ஆழ்த்திய இவ்வைரஸ் சர்வதேச பேரிடராக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தபட்டு உள்ளது.
இந்நோயினால் இறந்தவர்கள் அதிகம் வயதானவர்கள் நோய்எதிர்ப்பு சக்திகுறைவானவர்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்.
இந்நோயை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் தமது உயிரை பணயம் வைத்து போராடினார்கள் தாதியர்கள், மருத்துவ பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் போன்ற பலரும் இந்த வைரஸ்ஸில் இருந்து மக்களை காப்பாற்ற கடுமையாக போராடினார்கள்.
இன்றும் அந்நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. அனைத்து வகையான வேலைகளும் தடைப்பட்டன உணவு பஞ்சங்கள் தலை தூக்கின ஏழை மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
தடுப்பு முறைகள்
இந்நோயினுடைய பாதிப்பிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும்.
“வெள்ளம் வரும் முன் அணை கட்டவேண்டும்” என்பது போல் நோயின் தீவிர தன்மை அதிகரிக்க முன்பு நாம் அதில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிதல், வெளியிடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்தல்,
சமூக இடைவெளியை பேணல். கைகளை சுத்தமாக்க கிருமி கொல்லிகளை பயன்படுத்தி கழுவுதல், சுத்தமாக இருத்தல்,
சுத்தமான உணவு நீர் என்பவற்றை எடுத்துகொள்ளல் உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை செய்து உடலையும் மனதையும் திடமாக வைத்து கொள்ளல்
இவைதான் கொரோனா தொடர்பாக சுய பாதுகாப்பு முறைகளாகும். இதுவே சிறந்த முறைகளுமாகும்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளும் பயன்படுத்தபடுகின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலமும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறமுடியும்.
கொரோனா அரசியல்
கொரோனா வைரஸ் ஒரு பாரிய அரசியல் என்று ஒரு புறம் துறை சார் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதாவது வைரஸ் உருவாகியது தற்செயலானது என சீனா விளக்கம் கூறினாலும் அதனை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன.
வல்லரசு போட்டியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் பின்னுக்கு தள்ளிவிடவேண்டும் என்ற நோக்கில் சீனாவால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த வைரஸ் என மேற்குலகம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இதற்கு விரைவாக சீனா எவ்வாறு நோய்தொற்றில் இருந்து மீண்டது என்ற கேள்வியை எழுப்பியது வைரஸினால் ஏனைய நாடுகள் தடுமாறிய வேளையில் சீனா ஏனைய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை விற்பனை செய்து லாபங்களை ஈட்டுகிறது என்பது குற்றசாட்டாகும்.
அது மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் பின் தள்ளி சீனா முன்னேறியுள்ளது ஆகவே இதுவொரு உயிரணு யுத்தம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.
அது மாத்திரமின்றி எதிர்காலத்தில் உலக போர் தோன்ற இது காரணமாய் அமைந்துவிடும் என அஞ்சுகின்றனர்.
முடிவுரை
இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தினை நாம் ஒவ்வொருவரும் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக தடுக்க முடியும்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எம்மை நாமே பாதுகாப்பதுடன் எமது சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்தத்தை தடுக்க எம்மால் முடிந்த முயற்சிகளை செய்வதோடு எமக்காக களத்தில் நின்று சேவையாற்றுபவர்களுக்கும் உறுதுணையாய் இருப்போம்.
கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸில் இல் இருந்து நாம் விடுபட ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்றுவோம்.
You May Also Like :