மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். கல்வி என்பது அறிவு மற்றும் திறன்களின் திறனைப் பெறுவதற்கான படிப்படியான செயன்முறையாகும்.
இப்பூவுலகில் அழிவில்லாச் செல்வம் என்றால் அது கல்விச் செல்வம் தான். அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி இதன் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
கல்வியின் பயன்கள்
#1. சமுதாயம் மற்றும் நாட்டை உயர்த்துவதற்கு கல்வியே முக்கியம்.
கல்வியானது கற்றவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவுகின்றது. கல்வியறிவு உள்ளவர்கள் ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். உயர் கல்வி பெற்ற நாடுகள் தேசங்களை அபிவிருத்தி செய்ய உதவுகிறது.
#2. நன்மை எது தீமை எது என பகுத்தறிய கல்வி முக்கியமாகும்.
கல்விதான் எது நல்லது? எது கெட்டது? எனப் பகுத்தறியக் கற்றுக் கொடுக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பதையும் உணர வைக்கும்.
#3. உயர்வைப் பெற கல்வி முக்கியமானதாகும்.
சமுதாயத்தில் உயர்வையும், வருவாயையும், பாராட்டையும், திறமையையும் அளிக்கும் ஒரே கருவி கல்விதான். இதனால் தான் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவர். வாழ்வின் உயர்வே கல்வியில் தான் உள்ளது.
#4. உயர் அந்தஸ்தையும் பதவியை பெறுவதற்கு கல்வி முக்கியமானதாகும்.
சேரிப்புறத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை யெல்லாம் நீதிபதிகளாக, அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக மாற்றியது கல்வி. கல்வியின் மூலம் தான் உயர் பதவிகளை வகிக்க முடியும். உயர் பதவிகளே ஒருவருக்கு அந்தஸ்தைப் பெற்றுத் தரவல்லது.
#5. அறிவையும் திறமையையும் பெற கல்வி முக்கியமாகும்.
நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் மூலம் வாழ்வில் வளம் பெற முடியும்.
#6. ஒழுக்கத்தை கற்றுத் தரக் கல்வியை முக்கியமானதாகும்.
கல்வியானது தார்மீக மதிப்புக்களை கொண்டு காணப்படும் ஒன்றாக உள்ளது. அதாவது படிப்பறிவுள்ள ஒரு நபருடன் ஒப்பிடும் போது படித்த ஒரு நபர் நன்நெறிகள் மற்றும் நெறிமுறைகள் என்பனவற்றை கல்வியானது வளர்க்கும் ஒன்றாகக் காணப்படும்.
#7. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வியே முக்கியம்.
கல்வி கற்று உயர் பதவியை அடையும்போது வாழ்க்கைத்தரம் மேலோங்கும். பிற செல்வங்களைத் தேடவும், அவற்றை நன்கு பயன்படுத்தவும் கல்வியே உதவுகின்றது.
#8. இயற்கை வளங்களைப் பாதுகாக்க கல்வியறிவு முதன்மையானதாகும்.
முறையான கல்வி இல்லாமல் ஒரு நபர் அனைத்து இயற்கை வளங்களையும் அழித்துவிடுவார். அதனால் தான் இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு முறையான கல்வி தேவைப்படுகிறது.
#9. அறியாமையைப் போக்க கல்வி அவசியம்.
கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. மூட நம்பிக்கைகளைச் சமுதாயத்திலிருந்து விலக்க கல்விலே இன்றியமையாததாகும்.
#10. பெண்கள் வாழ்வில் வளம் பெற கல்வி முக்கியமானதாகும்.
கல்வியின் மூலம் பெண்கள் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் பெண் கல்வி கற்றால் முழு குடும்பமே உயர்வு பெறும். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், ஞானம் ஆகிய சிறப்புக்கள் கல்வி அறிவால் மேலும் பலப்படும்.
You May Also Like : |
---|
இளமையில் கல்வி கட்டுரை |
கல்வியின் சிறப்பு கட்டுரை |