ஊழ்வினை வந்து உறுத்தும் கட்டுரை

வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் உழ்வினை எனும் கர்மாவை அனுபவித்தே தீர வேண்டும். என பல்வேறு சான்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஊழ்வினை வந்து உறுத்தும் என்பது பலராலும் நம்பப்படும் ஒரு செய்தியாகும்.

ஊழ்வினை வந்து உறுத்தும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஊழ்வினை என்றால் என்ன
  • ஊழ்வினையின் வகைகள்
  • ஊழ்வினை பற்றி திருவள்ளுவரின் கருத்து
  • ஊழ்வினையின் உண்மைத்தன்மை
  • முடிவுரை

முன்னுரை

எமது உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும், அதாவது நல்ல செயலாக இருந்தால் நன்மையும், தீய செயலாக இருந்தால் ஏதேனும் ஒரு தீங்கும் வந்து சேரும் என்ற நம்பிக்கையை ஊழ்வினை என கூறலாம்.

ஊழ்வினை என்றால் என்ன

விதி, கர்மா என்ற பெயர்களாலும் இந்த ஊழ்வினை அழைக்கப்படுகின்றது. நாம் புரியும் செயல்கள் ஏனையவர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே தாக்கத்தை எமக்கும் ஏற்படுத்துதல் ஊழ்வினை எனப்படும்.

அதாவது நாம் உலகுக்கு செய்யும் செயல்களின் நன்மை, தீமைகளை அவ்வாறே உலகு எமக்கு திருப்பி அளிப்பதாகும்.

எமது வாழ்வில் திடீரென ஏதாவது துன்பியல்கள், கெடுதல்கள் நடைபெற்றால் உழ்வினை என்கின்றோம். இதற்கு எமது முன்னைய பாவங்கள் காரணமாக அமைவதனால் “ஊழ்” எனும் அடைமொழி உருவாயிற்று.

ஊழ்வினையின் வகைகள்

இந்து மதத்தை பொருத்த வகையில் 03 விதமான ஊழ்வினைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாவது: நுகர்வினை எனப்படும் பிராரப்த கர்மா – முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்காக கிடைக்கும் ஊழ்வினை. இப்பாவங்களில் இருந்து நாம் தப்ப முடியாது.

இரண்டாவது: தொல்வினை எனப்படும் சஞ்சித கர்மா- முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள் இப்பிறவியிலும் தொடர்தல். இறை வழிபாட்டின் மூலம் இப்பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது வரும் வினை எனப்படும் ஆகாமய கர்மா – இது முழுதும் மனித கையிலேயே உள்ளது. இப்பிறவியில் மனிதன் செய்யும் செயலுக்காக அடைந்து கொள்ளும் பயன்களாகும்.

ஊழ்வினை பற்றி திருவள்ளுவரின் கருத்து

உலகுக்கு அறம் பற்றி எடுத்துக் கூறக்கூடிய திருக்குறளில், திருவள்ளுவர் ஊழ்வினை பற்றி ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார்.

அவற்றுள் சில “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்” என உழ்வினையில் இருந்து நாம் தப்பிக்கொள்ள வேறு ஒரு வழியில் சென்றாலும் உழ்வினை எம் முன்னே வந்தே சேரும் என்றும்,

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் ஊற்றக் கடை” என இழப்பதற்கான ஊழ் ஒருவனை போதையாக்கும். அதே போன்று ஆள்வதற்கான ஊழ் அறிவை விரிவாக்கி பல நன்மைகள் தரும்.

ஊழ்வினையின் உண்மைத்தன்மை

உழ்வினை பற்றிய கருத்துக்கள் தமிழ் செய்யுள்களிலும், இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக 18ஆம் நூற்றாண்டில் கண்ணனை மனதில் கொண்டு, நல்உள்ளம் கொண்டவராக வாழ்ந்த நாராயண தீர்த்தர்.

சுமார் ஏழு ஆண்டுகளாக கடும் வயிற்று வலியினால் அல்லலுற்று பகவானை நோக்கி தன்னுடைய வயிற்று வலிக்காண காரணத்தை வினாவ, கண்ணன் காட்சியளித்து முற்பிறவியில் நீ உணவுப் பொருட்களில் கல்லையும், மண்ணையும் களப்பனம் செய்து விற்றாய் இதன் விளைவாகவே தீராத வயிற்று வலியை பெற்றுள்ளார் என குறிப்பிட்டார்.

இந்த வரலாற்றுச் சம்பவம் ஊழ்வினையின் உண்மைத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

முடிவுரை

ஒரு மனிதன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ அவனது செயல்களின் மூலம் பிரதிபலித்து, அச்செயல்களுக்கான பயனையும் பெற்றுக் கொள்கின்றான்.

எனவே ஊழ்வினை வந்து உறுத்தும் என்பதன் மூலம் அவரவர் செய்யும் செயலுக்கான நன்மைகளையும், தீமைகளையும் அவரவர் ஊழ்வினை மூலம் பெற்றுக் கொண்டே தீருவர். என்பதனை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

Read More: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கட்டுரை

சைவமும் தமிழும் கட்டுரை