இனம் என்றால் என்ன

inam enral enna

அறிமுகம்

மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் ரீதியான அம்சங்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் இனக்குழுக்களாக மனிதர்களை வகைப்படுத்த வேண்டும் என்பது அறிவியல் வகைப்பாடாகும்.

இன வகைப்பாட்டின் முதல் படைப்பாளிகளில் ஒருவரான பிரெஞ்சு விஞ்ஞானி பிராங்கோயிஸ் பெர்னியர், 1684 இல் வெளியிடப்பட்ட ஒரு படைப்பில் அவர் “இனம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

இனக்குழுக்கள் பொதுவான வரலாறு, மொழி, மதம், கலாச்சாரம் போன்ற பொது அடையாளத்துடன் கூடிய குழு உறுப்பினர்களைக் கொண்டமைந்து காணப்படும். எடுத்துக்காட்டாக இந்தியாவைக் கூறலாம்.

இந்தியா இனம், மதம், மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் மனித சமூகம் போன்ற ஒவ்வொன்றிலும் பன்முகத்தன்மை கொண்ட நாடாகும்.

இனம் என்றால் என்ன

இனம் என்றால் என்ன

இனம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த மனித மக்கள்தொகை ஆகும். இது சில உடல் மற்றும் உயிரியல் பண்புகளால் வேறுபடுகிறது.

அமெரிக்காவில் இனம் என்பது பொதுவாக தோலின் நிறம், முடி அமைப்பு, முக அம்சங்கள் மற்றும் கண்களின் தோற்றம் போன்ற பொதுவான சில உடல் பண்புகளைக் கொண்ட நபர்களின் குழுவைக் குறிக்கிறது.

புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்ட மக்கள் தொகையுடன் இனங்கள் தொடர்புடையவை ஆகும். அதாவது “ஆப்பிரிக்க இனம்”, “ஐரோப்பிய இனம்” மற்றும் “ஆசிய இனம்” என இனங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன.

பண்பாட்டுச் சூழலைப் பொருட்படுத்தாமல் மற்றும் நிலையான இனப் பிரிவுகள் இல்லாவிட்டாலும் கூட, மனித குழுக்களிடையே காணக்கூடிய உடல் (பினோடைபிக்) மாறுபாடுகளின் பிரதிபலிப்பே இனம் என்று பலர் கருதுவதுமுண்டு.

மங்கோலாய்ட்

மங்கோலாய்ட் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றவர்களாவர். பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் எஸ்சிமோ இன மக்களும் மங்கோலாய்ட்டக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

மற்ற இனங்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் மிகக் குறைந்த உடல் முடி, மற்றும் சிறிய மூட்டு விகிதத்தையும் கொண்டுள்ளனர்.

மிதமான குளிர் காற்றுக்கு ஏற்றவாறு இவர்களின் முக அமைப்பு அமைந்திருக்கும். மடிந்த கண் இமைகள், பாதாம் வடிவில் கண்கள், மஞ்சள் நிறத்தோல், ஏ வடிவ கன்னங்களுடையவர்களாகத் மங்கோலாய்ட் இனத்தவர்கள் தோற்றமளிப்பர்.

காகசாய்டு

இவர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றனர். யூரேசியாவின் பெரும்பாலான மக்கள் காகசாய்டு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கௌகேசாய்டு மக்கள் வழக்கமாக மொழிசார்ந்த பிரதேசங்களைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.

ஆர்ய இனம் (இந்தோ – ஐரோப்பிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), செமித்திய இனம் (செமித்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள்) மற்றும் ஹாமிட்டிக் இனம் (பெர்பர் – கஷிட்டிக் – எகிப்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) ஆகியவை ஆகும்.

இவர்கள் புலப்படக்கூடிய புரவ முகடு, பரந்த மூக்கு, சுருள் முடி, கறுப்பு நிறத் தோல் மற்றும் குறைவான உயரம் போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றனர்.

நீக்ராய்டு

நீக்ராய்டுக்கள் ஆபிரிக்காவின் துணை சஹாராப் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் பொதுவாக “கறுப்பு இனத்தவர்கள்” எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இவ் இனத்தவர்கள் பிற இனத்தவர்களையும் விட அதிக கறுப்பு நிறத் தோலைக் கொண்டுள்ளனர். தடித்த உதடுகள், சாய்ந்த நெற்றி, கருத்த முடி மற்றும் பரந்த மூக்கு போன்ற தோற்றத்தைக் கொண்டமைந்தவர்களாக உள்ளனர்.

You May Also Like :
சமூகம் என்றால் என்ன
கலாச்சாரம் என்றால் என்ன