இந்த பதிவில் ஹலால் என்றால் என்ன என்பது பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
ஹலால் என்றால் என்ன
இஸ்லாத்தில் அனுமதியளிக்கப்பட்ட அனுமதிக்கக்கூடிய செயல்கள் அல்லது சட்டபூர்வமானவற்றுக்கான அரபுச்சொல்லே ஹலால் ஆகும். இஸ்லாமியர்கள், யூதர்கள் பொதுவாக ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள்.
அதற்குக் காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி இஸ்லாமியர்கள் ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி விலங்குகள் கொல்லப்பட்டால் மாத்திரமே அவற்றினை சாப்பிடுவார்கள்.
ஹலால் மற்றும் ஹராம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு
ஹலால், ஹராம் இரண்டுமே அரபு மொழிச் சொல் ஆகும். ஹலால் என்பது இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு செயலையும் குறிக்கும்.
இதன் எதிர்ச்சொல் ஹராம் ஆகும். அதாவது சட்டப்படி அனுமதியளிக்கப்படாத செயல்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.
இதன்படி நேரடி மொழிபெயர்ப்பாக ஹலால் என்றால் ஆகுமானது என்றும் ஹராம் என்றால் தடுக்கப்பட்டுள்ளது என்றும் கொள்ளப்படுகிறது.
ஹலால் முறையில் உணவுகளை உட்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்
ஹலால் முறையில் விலங்குகளை வெட்டும் போது விலங்குகளின் உடலில் உள்ள அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் அவற்றினை உண்ணும் போது உடலினுள் நோய்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
அதாவது மனிதர்கள் உணவுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் விலங்குகளை உண்ணும் போது அந்த உணவு அவர்களுக்கு தீங்காக இருக்கக் கூடாது.
அனைத்து உயிரிகளினதும் இரத்தத்தில் தான் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் கலந்திருக்கும். அதனால் தான் நாம் நோய்களை கண்டறிய இரத்த பரிசோதனை செய்கின்றோம்.
இரத்தத்தில் இருக்கும் நோய் கிருமிகள் அந்த நோயை சாப்பிடுபவர்களையும் தாக்கி பலவித நோய்களை ஏற்படுத்தும்.
இறைச்சி விரைவில் கெட்டு போகாது. நீண்ட நேரம் பாதுகாப்பாகவும் இருக்கும். குளிர்சாதன வசதி இல்லாத அந்த காலத்தில் இம்முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதற்கு காரணம் வெட்டும் போது விலங்குகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பதாலாகும்.
ஹராம் உணவுகள்
இஸ்லாமியர்கள் பின்வரும் உணவுகளை உட்கொள்வது இல்லை. பன்றி இறைச்சி, படுகொலைக்கு முன் இறந்த விலங்குகள், சரியாக கொல்லப்படாத விலங்குகள், மது, போன்றனவாகும். இந்த தடை செய்யப்பட்ட உணவுகள் ஹராம் உணவுகள் எனப்படும்.
You May Also Like: |
---|
பேச்சு மொழி என்றால் என்ன |
அணங்கு என்றால் என்ன |