இறை உண்மையை எடுத்துரைக்கும் நூல்களுள் வேதமும் ஒன்றாகும். வேதம் என்பது பொது நூலாகும். வேதம் என்றசொல் “வித்” என்னும் வினையடியிலுருந்து தோன்றியது. வித் என்றால் அறிவு என்பதாகும். வேதங்ளை தொகுத்தவர் வியாசர் ஆவார்.
வேதங்கள் நான்கு என்பதனால் நால்வேதம், சதுர்மறை, சதுர்வேதம் என அழைக்கப்பட்டன. ஆரம்பத்தில் வேதங்கள் “திரையீ வித்யா” என மூன்றாகச் சொல்லப்பட்டன. அவை இருக்கு, யசுர், சாமம் என்பனவாகும். பின்னர் அதர்வ வேதமும் இணைக்கப்பட்டு நான்காகக் கூறப்பட்டன.
வேதங்களில் முதலாவது இருக்கு வேதமாகும். இருக்கு என்பதற்கு பாட்டு என்பது பொருள்ஆகும்.
இருக்கு வேதம் 10 மண்டலங்ளையும் 1028 சூக்தங்களையும் கொண்டுள்ளது. யசுர் வேதம், செய்யுள் நடையிலும் உரை நடையிலும் அமைந்த மந்திரங்ளைக் கொண்டது.
சாமவேதம் 1875 பாடல்களைக் கொண்டுள்ளதுடன் ஆர்ச்சிகம், உத்திர ஆர்ச்சிகம் என்னும் இரு பிரிவுகளையும் கொண்டுள்ளது. அதர்வ வேதம் 20 காண்டங்ளையும், 731 சூக்தங்ளையும், 6000 பாடல்ளையும் கொண்டுள்ளது.
நான்கு வேதங்களும் நான்கு பகுதிகளையும் மூன்று காண்டங்களையும் உடையன. அவை சங்கிதை, பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்பனவும் கர்ம, உபாசனை, ஞான காண்டங்களாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வேதம் வேறு சொல்
- எழுதாமறை
- எழுதாக்கிளவி
- சுருதி
- மறை
- சுயம்பு
Read More: சீதளம் வேறு சொல்