பெண்களுக்கு ஏற்படக்கூடிய அதிகமான நோய்களில் வெளிப்படுத்தலும் ஒன்றாகும். இதனை வெள்ளைப்போக்கு, வெட்டை என்றும் அழைப்பர்.
இதை பல பெண்கள் கவனிக்காமலும் வெட்கப்பட்டு வெளியில் சொல்லாமலும் விடுவதுண்டு. ஆனால் வெள்ளைப்படுதல் 15 வயது தொடக்கம் 45 வயது வரை எல்லா பெண்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சனையாகும்.
வெள்ளைபடுதலானது சாதாரணமாகவும், அசாதாரணமாகவும் நிகழலாம். பெண்ணின் கர்ப்பைப்பை வாய், பெண் உறுப்பு உள்ளே உள்ள சுரப்பிகள் இறந்த திரவ செல்கள் மற்றும் பக்டீரியாக்களை வெளியேற்றுகின்றது.
இதனால் பெண் உறுப்பு சுத்தமாகின்றது. பெண் உறுப்பில் தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகின்றது. இது சாதாரணமானதாகும். ஆனால் வெள்ளைபடுதலானது வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலோ அல்லது துர்நாற்றம் இருந்தாலோ அது அசாதாரணமாகும்.
சாதாரண வெள்ளைபடுதலானது மாதவிடாய்க்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்படலாம். அல்லது மாதவிடாய்க்கு பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வெள்ளை படலாம். எனவே இதற்காக வெட்கப்படத் தேவையில்லை.
ஆனால் வெள்ளைபடுதலின் போது வாடை வந்தாலோ அல்லது நிறம் மாறினாலோ, அடி வயிற்றில் வலி, காய்ச்சல் ஏற்பட்டாலோ அல்லது அரிப்பு இருந்தாலோ மருத்துவரை நாட வேண்டும். இது வெள்ளை நிறம் இல்லாமலும் பல நிறங்களிலும் வெளியாகும்.
சாதாரணமாக வெள்ளைபடுதலானது மூக்கிலிருந்து சளி வருவது போல் இருக்கும். ஒரு சிலருக்கு தயிர் போல் கட்டியாகவும், முட்டையின் வெள்ளைக் கருவை போல் வழுவழுப்பாகவும் வருவதுண்டு.
ஆனால் மஞ்சளாகவோ அல்லது பச்சை நிறமாகவோ வெளிப்பட்டால் மருத்துவரை நாடுவது மிகவும் அவசியமானதாகும்.
இதனை கவனிக்காமல் விட்டால் இனப்பெருக்க உறுப்பில் ஒரு பகுதியோ அல்லது ஏனைய பகுதிகளையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படை காரணமாக மாறிவிடும். இதனால் வெள்ளைப்படுதலுக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Table of Contents
வெள்ளைப்படுதல் என்றால் என்ன
பெண் உறுப்பு எப்போதும் ஈரப்பசையுடன் வழுவழுப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கச் செய்கின்றது. இது அரிப்பு இல்லாமல் இயல்பான அளவு சுரக்கும். கருப்பைபின் வாய் அதன் உட்சுவர்களிலிருந்து சிறிதளவு சுரக்கும். இந்த வெள்ளைத்திரவம் வெள்ளைப்படுதல் என்றழைக்கப்படுகின்றது.
அதாவது வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் பிறப்புறுப்பு வழியே கெட்டியான மஞ்சள் கலந்து வெண்ணிறமான நீர்மம் வெளிப்படுதலாகும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்
கழிப்பறைச் சுத்தமின்மை, அல்லது கழிப்பறையை மாற்றி மாற்றி பயன்படுத்துதல் இதற்கான பொதுவான காரணமாக கூறப்பட்டாலும், ஏனைய பல காரணங்களும் வெள்ளைப்படுதல் நோய்க்கு அடிப்படையாக உள்ளன.
உடல் உஷ்ணம், தவறான உணவு பழக்க வழக்கங்கள், ஒவ்வாத உணவு உண்ணுதல், தூக்கமின்மை, மனக்கவலை, உள்ளாடைகள் சுத்தமின்மை, அதிகமான உடல் உழைப்பு பாரம் தூக்குதல், முறையான மாதவிடாய் இல்லாமை போன்ற பல காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படும்.
இரத்தச் சோர்வு, முதுகு வலி, உடல் சோர்வு, கை கால் எரிச்சல், தூக்கமின்மை உணவில் விருப்பமின்மை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆசனவாய்ப்புண், கருப்பை புண் போன்றனவும் ஏற்படலாம். அது மட்டுமின்றி கருத்தரிக்க தாமதமாகலாம் அல்லது இயலாமல் போகலாம்.
வெள்ளைப்படுதல் தீர்வு
உளுந்து 100 கிராம், பார்லி 100 கிராம் இரண்டையும் அரை மணி நேரம் வரை ஊறவிட்டு குக்கரில் போட்டு அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் ஆகிய நான்கையும் சேர்த்து அதனுடன் நீரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்தால் வெள்ளைப்படுதல் நீங்கும்.
அல்லது சப்ஜா விதையை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Read more: மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாதவை