வெண் பொங்கல் செய்வது எப்படி

Venpongal Seivathu Eppadi

இந்த பதிவில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக பொங்கலில் பலவகை உண்டு. அதில் வெண்பொங்கலும் ஒன்று. இந்த வெண்பொங்கலானது தென்னிந்திய பாரம்பரியங்களில் ஒன்றாக உள்ளது. இது பெரும்பாலும் விசேட தினங்களிலேயே செய்யப்படுகின்றது.

எனினும் சாதாரண தினங்களில் கூட வெண் பொங்கல் காலை உணவாக செய்து சாப்பிட்டாலாம். அதுவும் வடையுடன் பொங்கல் சாப்பிட்டால் மிகவும் அருமை. சரி⸴ வாங்க சுவையான வெண்பொங்கல் நெய் மணக்க மணக்க எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

வெண் பொங்கல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி1 கப்
பாசிப்பருப்பு1/2 கப்
இஞ்சி1 துண்டு
பச்சை மிளகாய்2
சீரகம்1 டீஸ்பூன்
மிளகு1 டீஸ்பூன்
கறிவேப்பிலைதேவையான அளவு
முந்திரி12
நெய்1/4 கப்
பால்1/4 அல்லது 1/2 கப்
பெருங்காயத்தூள்1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பச்சை அரிசியை நன்கு கழுவி ¼ மணி நேரம் அல்லது ½ மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பாசிப்பருப்பை அதன் பச்சை வாசனை நீங்கி நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு வறுத்த பாசிப்பயிரை கால் மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

இப்போது ஒரு குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசி மற்றும்⸴ பாசிப்பருப்பை நீருடன் சேர்க்க வேண்டும்.

பின்பு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். (இரண்டு தொடக்கம் மூன்று விசில் வரும் வரை விடவேண்டும்)

அரிசி மற்றும் பருப்பு நன்கு குழைந்ததும் அதை கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனோடு 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய்யும் எண்ணெய்யும் நன்கு காய்ந்த பின்பு மிளகு⸴ சீரகம்⸴ பச்சை மிளகாய்⸴ இஞ்சி⸴ முந்திரி⸴ பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்துவிடவும்.

பின்பு அடுப்பை ஆப் (நிறுத்தி) செய்து பின் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தாளிப்பை பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும். (உப்பை சரிபார்த்துக் கொள்ளவும்)

இறுதியாக நெய் சேர்த்து பாரிமாறவும்.

இப்போது சுவையான வெண் பொங்கல் ரெடி!!!

You May Also Like:

திருவாதிரை களி செய்வது எப்படி

சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி