தமிழில் காணப்படும் சொற்பயன்பாட்டில் முட்டாள் என்ற சொல்லும் ஒன்றாகும். முட்டாள் என்பது முட்டு+ஆள்=முட்டாள் ஆகும்.
முட்டு மரம் என்பது கட்டிடம் போன்ற இடங்களில் தாங்கிப் பிடிப்பதற்காக கொடுக்கப்படுன்கிற மரம் ஆகும்.
முட்டுக்கட்டை என்பது மிகப்பளுவான தேரை இழுக்கும் போது அதை நிறுத்துவதற்காக கொடுக்கிற முக்கோண வடிவில் செதுக்கப்பட்ட மரமாகும்.
அதுபோலத்தான் தாங்களாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு குறிப்பட்ட கொள்கையை தாங்கிப் பிடிக்கிறவர்களை முட்டாள் என்கிறது தமிழ்மரபு. முட்டாள் என்ற பெயர் சங்ககாலம் தொடக்கம் பயன்பாட்டில் உள்ளது.
அதாவது அக்கால தேரோட்டங்களின் போது தேரின் சக்கரத்தில் முட்டுக் கொடுப்பதன் மூலம் தேரின் வேகத்தைக் குறைக்கவோ, நிறுத்தவோ, திருப்பவோ முடியும்.
தேரோட்டம் நடைபெறும்போது முட்டுக் கொடுப்பதற்கென்று கோவில் நிர்வாகிகள் சில ஆட்களை நியமிப்பார்கள்.
தேரின் சக்கரங்களுக்கு இடையே லாகவமாக பணியாற்ற வேண்டும். இது சற்று ஆபத்தான பணி. இவர்கள் இல்லாவிட்டால் தேர் முறையாக நகராது. இவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஆள் என்று பெயர். முட்டு+ஆள் = முட்டாள்.
இவர்கள் இந்தப் பணியை மட்டும் செய்து வந்தார்களாம். வேறு எந்த வேலையினைச் செய்வதற்கான திறனும் அறிவும் அற்றவர்கள் முட்டு ஆட்கள். என்பது அந்தக் காலத்தில் நிலவிய கருத்து.
எனவே வேறு வேலை செய்வதற்கேற்ற அறிவில்லாதவர்களையும் முட்டாள் (முட்டு ஆள்) என்று அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அறிவில்லாதவர்களைக் குறிப்பதற்கு மட்டும் இந்தச் பயன்படுத்தப்படுகிறது.
சிலரை முட்டாள் என அழைக்கும் போது அவர்கள் கோபத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் முட்டாள்களே சிறந்தவர் என்பதற்கான கதைகளும் காணப்படுகின்றன.
இவ்வாறான முட்டாள் என்ற பெயருக்கு தமிழில் வெவ்வேறு பெயர்கள் காணப்படுகின்றன.
முட்டாள் வேறு சொல்
- மடையன்
- மாக்கான்
- அறிவிலி
- அறிவற்றவன்
- புத்தியற்றவன்
- புத்திமத்திமமானவன்
- மூடன்
- மூர்க்கன்
இவ்வாறான பெயர்கள் முட்டாளுக்கு வழங்கப்படுகின்றன.
Read more: மேஷ ராசி குணங்கள்