மன்னிப்பு என்றால் என்ன

mannippu in tamil

வாழ்நாளிலே ஒருநாள் கூட தவறு செய்யவில்லை எனக் கூறுமளவிற்கு எந்த மனிதர்களும் இவ்வுலகில் இல்லை. ஆகவே தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது.

தவறு செய்வது மனித இயல்பு. தெரியாமலோ அறியாமலோ சிறியது முதல் பெரியது வரை சில பல தவறுகள் செய்து விடுகிறோம். ஆனால் நமது தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பது உயர்ந்த குணம்.

எனவே பிறர் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள மன்னிப்பே சிறந்த வாய்ப்பு என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மன்னிப்பு என்றால் என்ன

மன்னிப்பு என்பது மனிதகுல இயல்புகளில் ஒரு குற்றத்தை செய்தவருக்கான மன்னிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தண்டனையிலிருந்து விடுவிப்பதாகும்.

மேலும் மன்னிப்பு என்பது ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறுக்காகப் பாதிக்கப்பட்டவரிடம் கேட்பது மன்னிப்பாகும். அதே போல் பாதிக்கப்பட்டவர் அதனைப் பெரிதுபடுத்தாமல் தவறிழைத்தவருக்கு வழங்குவதும் மன்னிப்பாகும்.

அதாவது மன்னிப்பு என்பது ஒருவர் தான் தெரிந்தோ தெரியாமலோ மற்றோருவருக்கு செய்த பிழைக்காக பாதிக்கப்பட்ட அந்த நபரிடம் தான் செய்த தவறை உணர்ந்தவராக மன்னிப்பை அவரிடம் கேட்பது.

மன்னிப்பது ஏன் முக்கியம்

மன்னிக்கத் தெரியாத மக்கள் பெரும்பாலும் கோபம், விரக்தி மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கிறார்கள். எனவே இவற்றிருந்து விடுபட மன்னிப்பானது மிக மிக அவசியமாகும்.

நாம் மன்னிப்பது குற்றவாளியின் நலனுக்காக அல்ல, நமக்காக என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அதாவது மனக்கசப்பு மற்றும் மனவேதனையின் பெரும் சுமையிலிருந்து விடுபட மன்னிப்பு உதவுகின்றது.

மன்னிக்கும் திறனுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உதாரணமாக கோபம் கொள்ளும்போது மனப்பதட்டம் அதிகரிக்கின்றது, இதய நோய், நீரிழிவு நோய், மனச்சோர்வு போன்ற பல நோய்களுக்கும் காரணமாக அமைகின்றது.

மன்னிக்கும் திறன் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கணிசமாகக் குறைக்கிறது.

மன்னிப்புக் கேட்பவருடைய மன்னிப்பை அகங்காரத்துடன் ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் அது சரியல்ல மனதார மன்னிப்பதுதான் மனிதனுக்கு அழகு.

மேலும் துரோகம் செய்தவர்கள் மற்றும் வன்கொடுமை குற்றம் செய்தவர்கள் போன்றோரை மன்னிப்பது அவசியம் என்று கருத முடியாது.

உலக மன்னிப்பு தினம்

உலகளாவிய மன்னிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக மன்னிப்பு தினமானது மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை அதிகரிக்க நிறுவப்பட்டது.

உலகளாவிய மன்னிப்பு தினம் 1994 இல் CECA (கிறிஸ்துவின் தூதர்) ஆல் நிறுவப்பட்டது. இது முதலில் கனடாவிலேயே தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகளவில் பிரபலமடைந்ததால், இது உலகளாவிய மன்னிப்பு தினம் என மறு பெயரிடப்பட்டது.

மன்னிப்பால் ஏற்படும் நன்மைகள்

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.

மன்னிப்பானது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் இருக்கச் செய்துவிடும்.

மன்னிப்பதினால் முதலில் நமக்கு கிடைப்பது சமாதானம். மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை.

தவறு செய்வது மனித இயல்பு தான் அதற்காக குற்ற உணர்ச்சியுடனே வாழ்ந்து மடிந்து விட வேண்டும் என்பது அல்ல.

சரியான தருணத்தில் கேட்கப்படாத மன்னிப்புகள் தலைமுறைகளை கடந்தும் பேரெதிரிகளை உருவாக்கும் வல்லமை கொண்டு பேராபத்துக்களையும் விளைவிக்க வல்லவை.

Read more: இன்சொல் என்றால் என்ன

சுயமரியாதை என்றால் என்ன