தாவரங்களில் காணப்படும் இனப்பெருக்க அமைப்பே பூ அல்லது மலர் என்று அழைக்கப்படுகின்றது. அந்தவகையில் பூவானது ஏழு நிலைகளை கொண்டமைந்து காணப்படுகின்றது.
Table of Contents
பூவின் 7 நிலைகள்
ஒரு மலரானது பல்வேறு வகை பருவங்களை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. அதாவது ஒரு பூவானது தோன்றுவது முதல் உதிர்வது வரை பல நிலைகளாக காணப்படும். அந்தவகையில் பூவின் நிலைகள் ஏழு வகையாக காணப்படுகின்றன.
#1. அரும்பு
ஒரு செடியானது பூக்கும் பருவத்தினை அடையும் நிலையே அரும்பு எனப்படும். இது ஒரு பூவானது தோன்றுவதற்கான முதல் நிலையாகும். சிறிதாக அமைந்து காணப்படும் இதழினை விரிப்பதற்கு முந்தைய நிலையே இதுவாகும்.
#2. மொட்டு
அரும்பானது சிறிதாக இருந்து பெரிதாக மொக்கு விடும் நிலையே மொட்டாகும். இவ்வாறான நிலையின் போது சிறந்த வாசணை ஏற்படும்.
#3. முகை
பூ பூப்பதற்கு முதல் மொட்டானது திறக்கும் நிலையே (முகிழ்விக்கும் நிலை) முகை எனப்படும். அதாவது முத்தாக விரியும் நிலையாகும்.
#4. மலர்
மொட்டானது முழுமையாக விரிவடைந்து செல்லும் நிலையே மலர் எனப்படும். அதாவது பூவாக காணப்படும் நிலையே மலர் ஆகும்.
#5. அலர்
மலர்ந்த இதழ்கள் விரிந்து காணப்படுகின்ற நிலையே அலர் ஆகும். இந் நிலையிலேயே பூவிலிருந்து மகரந்தமானது பரவும்.
#6. வீ
நன்றாக விரிந்து காணப்படும் மலரானது வாடிப்போகும் நிலையே வீ ஆகும். அதாவது மலரானது வாடி விழப்போகும் ஒரு நிலையாகும்.
#7. செம்மல்
வாடிப்போகும் நிலையில் காணப்படும் மலரானது வதங்கி கீழே கிடக்கும் நிலையே செம்மல் எனப்படும். இது காய்ந்த கருகிய நிலையில் காணப்படும். இம் மலருடைய நிறமானது மாறி காணப்படும். இவ்வாறாக ஏழு நிலைகளாக திகழ்கின்றது.
ஆரம்ப காலகட்டத்தை சேர்ந்தவர்கள் பூவின் படி நிலைகளை 12 ஆக குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.
பூவின் 12 நிலைகள்
அரும்பின் உட்பிரிவுகள்
#1. அரும்பு
ஒரு செடியானது பூக்கும் பருவத்தினை அடையும் நிலையே அரும்பு எனப்படும். இது ஒரு பூவானது தோன்றுவதற்கான முதல் நிலையாகும்.
#2. நனை
அரும்பானது உள்ளும் புறமும் ஒரு வித ஈரப்பதமான தேன் நனைப்புடன் காணப்படுகின்ற நிலையாகும்.
#3. முகை
மொட்டு போன்று உருவாகி முத்தாக காணப்படுவது முகையாகும்.
#4. மொக்குள்
பூவுக்குள் பருவமாற்றமான ஒரு வகை மணம் கொண்ட நிலை மொக்குள் ஆகும்.
முகை உட்பிரிவுகள்
#5. முகிழ்
மொட்டானது மணத்துடன் விரிந்தும் விரியாமலும் காணப்படும் நிலையாகும்.
#6. போது
மொட்டு மலரும் போது ஏற்படும் ஒரு புடைப்பு நிலையே போது ஆகும்.
#7. மலர்
போது நிலையிலிருந்து பூவாக உருவாகும் நிலை மலர் எனப்படும்.
#8. அலர்
மலரானது நன்றாக விரிந்து காணப்படும் நிலையே அலர் எனப்படும்.
#9. வீ
மலரானது வடும் போது அதனை வீயாக கொள்ளலாம்.
#10. செம்மல்
வாடி வதங்கி கீழே விழும் நிலையே செம்மல் ஆகும்.
#11. பொதும்பர்
பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து காணப்படுவது பொதும்பர் எனப்படும்.
#12. பொம்மல்
கொத்து கொத்தாய் பூத்து காணப்படும் பூக்கள் வாடி வதங்காமல் கீழே விழும் நிலை பொம்மல் ஆகும்.
பூக்களின் பயன்கள்
உலகில் காணப்படுகின்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் மலர்களை விரும்பக் கூடியவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தவகையில் வீட்டை ஒளிரச் செய்யும் அலங்காரமாக இன்று மலர்கள் காணப்படுகின்றன.
கடவுளை வழிப்படுவதற்காக கோவில்களுக்கு மலர்களை எடுத்து செல்வது என்பது மலர்களின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகின்றது.
துக்க அனுதாபங்களை வெளிப்படுத்தவதற்காகவும், அன்பு மற்றும் மரியாதையினை வெளிப்படுத்துவதற்காகவும் மலரினை பயன்படுத்துகின்றனர். இவ்வாறாக மலரானது பல்வேறு வகையில் அனைவருக்கும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
Read More: துத்தி இலையின் பயன்கள்