இப்புவியில் பற்று அற்றவர் என்று எவரும் இல்லை. எல்லோரும் ஏதோ ஒன்றின் மீது பற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். மனிதர்களின் பற்று பலவகையாக அமையக்கூடும்.
அதாவது நாட்டுப்பற்று, சமயப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, தாய் தந்தையர் மீது பற்று போன்று பற்று பல வகையாக மனிதர்களுக்கு இருக்கக்கூடும்.
Table of Contents
பற்று என்றால் என்ன
பற்று என்ற சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு. பற்று என்பது ஒரு பொருள் மீது அல்லது ஏதேனும் ஒன்றின் மீது அளவில்லாத ஆசை அல்லது பிடிப்பு என்று பொருள் கொள்ளலாம்.
மேலும் இலக்கு ஒன்றை பற்றிக் கொண்டு தன்னலம் மறந்து தன் சுற்றம் துறந்து தன்னையே மறந்து நிற்பது பற்று எனலாம்.
திருக்குறளில் கூறப்படும் பற்று
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றக பற்று விடற்கு”
அதாவது பற்றில்லாதவராகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றுத்தான் துணைபுரியும் என்கின்றார் வள்ளுவர்.
“பற்று அற்றேம் என்பர் படிற்று ஒழுக்கம்
ஏற்றுஏற்று என்று”
ஆசைகள் (விருப்புக்கள்) அறுத்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு உண்மையில் ஆசைகள் பலவற்றைக் கொண்டு வஞ்சனையாக அதாவது தவறாக அல்லது பொய்யாக ஒழுகுவோர் பின்நாட்களில் பிழையானவற்றை ஊன் செய்தோம் என்று எண்ணி மிகவும் துன்பப்படுவர் என்று கூறியுள்ளார்.
“அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி”
நற்பண்புகள் ஏதும் அற்ற ஒழுக்கம் அற்ற வாழ்வில் மெய்ப்பொருள் வேண்டாதவர்களை ஏதும் கேட்டு நாம் தெளியக் கூடாது. அவர்களிடம் பெறுவதற்கு அறிவும் ஆலோசனையும் ஒன்றும் இல்லை. ஏனெனில் அவர்கள் பழிக்கு நாணமாட்டார்கள் ஆதலால் அவர்கள் கூறும் ஆலோசனைகள் அறமற்று இருக்க பல வாய்ப்புக்கள் உண்டு. அறம் அல்லாத செயல்கள் தீவினை உண்டாக்கும். கேடு விளைவிக்கும்.
“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாதை காணப் படும்”
அதாவது, பிறப்பறுப்பதற்கான கருவியாக பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் நிலையற்ற உலக வாழ்வில் உழல வேண்டி வரும் என வள்ளுவர் கூறுகின்றார்.
நாட்டுப்பற்று என்றால் என்ன
நாட்டுப்பற்று என்பது ஒருவன் பிறந்த தன் மண் மீது அதாவது தனது தாய்நாட்டின் மீது கொண்டுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும்.
ஒரு நாட்டில் வாழும் பிரஜைகள் அனைவருக்கும் தங்கள் நாட்டின் மீது பற்று இருக்க வேண்டும். நாட்டுப்பற்று என்பது இனம், மதம்,மொழி போன்ற பேதங்களைக் கடந்தது ஆகும்.
நாட்டு மக்களின் நன்மைக்காக, அவர்களின் ஆரோக்கியத்திற்காக, கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்குமாக தன்னலம் கொள்ளாது உழைக்கும் நிலையே தேசப்பற்றாகும்.
நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளவற்ற நாட்டுப்பற்றினாலேயே இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகின்றது என்றால் அதுமிகையல்ல. நாட்டின் நலனுக்காக உயிரைக் கொடுப்பதற்கும் தயங்காத நிலை தேசப்பற்றின் உச்சநிலை எனலாம்.
நாட்டை பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். ஒரு மனிதன் வாழ்க்கையின் உச்சத்தை தொட்டாலும், எவ்வளவு உயர்ந்தாலும் அவனின் உணர்ச்சியில் அவனைப் பெற்றெடுத்த தாயினதும் அவன் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதான பற்றும் பெரியதாகவே இருக்கும்.
எனவே தாயையும் தாய்நாட்டையும் நேசிப்பது ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும்.
Read more: செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை