நெட்டி என்றால் என்ன

நெட்டி வேலைப்பாடானது மிகவும் பழமை வாயந்ததொன்றாக காணப்படுகிறது. நெட்டியினூடாக இன்று பல கைவினைப்பொருட்களை வடிவமைக்கின்றனர்.

நெட்டி என்றால் என்ன

நெட்டி என்பது ஒரு வகை செடியினை குறிக்கின்றது. இது தஞ்சாவூரில் உள்ள குளம், ஏரியில் விளைகின்றது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும் மேல் பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். நெட்டி டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தேவையான அளவுக்கு கிடைக்க கூடியதாக காணப்படும்.

நெட்டியின் முக்கியத்துவம்

நெட்டியில் செய்யப்படும் கலைப்பொருட்களானவை தந்தத்தால் செய்யப்பட்டது போன்று வெண்மையானதாகவும், அனைவரையும் கவரக்கூடிய வகையிலும் காணப்படுகின்றது.

நெட்டியை கொண்டு கோயில் அமைப்புக்கள், இயற்கை காட்சிகள், உருவ அமைப்புக்கள், கட்டட அமைப்புக்கள் போன்றன செய்யப்படுகின்றன. மேலும் இறை உருவ அமைப்புக்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளமை இதனுடைய முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

இன்று நெட்டி வேலைப்பாட்டிற்கான தேவையானது அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த வேலைப்பாட்டில் கோயில்கள், வீடு, கட்டிடங்கள் என எந்த வடிவத்தை கேட்டாலும் நெட்டி வேலையில் செய்து கொடுக்க முடியும்.

இது ஒரு கைவினை கலையாக காணப்படுகின்ற காரணத்தினால் இதற்கென்று தனியான நேரம் ஒதுக்கிட்டு வேலை செய்ய வேண்டியதில்லை. தமது திறமைக்கு ஏற்றாற் போல் இலகுவான நெட்டி வேலைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். வறுமையான பெண்கள் நெட்டி வேலைப்பாடுகளை மேற்கொள்வதினூடாக வறுமையில் இருந்து மீண்டு வந்து நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

கைவினைப்பொருட்களும் நெட்டி வேலைப்பாடும்

உலகில் நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்து இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் வளர்ச்சியடைய தொடங்கின. கிராமப்புறங்களில் பனை ஓலைகளில் விசிறி, கூடை போன்றவையும் கோரைப்புற்களில் பாய்களையும் செய்ய தொடங்கினர்.

மேலும் கண்ணை கவரும் வகையில் கைவினைப் பொருட்களை வடிவமைக்கின்றனர். அந்தவகையில் நெட்டி எனும் ஒரு வகை செடியினால் இயற்கையை மிஞ்சக்கூடிய வகையில் மலர்கள், மாலைகள், ஆலையங்கள், மனித மற்றும் விலங்கு உருவங்கள் போன்றன கைவண்ணத்தில் சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன.

இவ்வாறு நெட்டித் தண்டில் செய்யப்படும் மலர்களானவை இயற்கையான மலர்களை விட அழகாக தோற்றமளிக்கிறது. நெட்டி கைவினை கலைப்பொருட்களானவை சோழர் காலத்தில் இருந்தே சிறப்புற்று விளங்குகின்றது.

நெட்டி முறை கலையானது தஞ்சை மாவட்டத்தில் இன்றும் தனக்கானதொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புற கைவினைஞர்கள் நெட்டியில் எளிமையான முறையில் மாலைகள் உள்ளிட்ட அலங்கார பொருட்களை செய்து வருகின்றனர்.

பூம்புகார் கலைக்கூடத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாணிதி திறந்து வைத்தபோது அங்கு நெட்டியால் தத்ரூபமாக தயாரிக்கப்பட்ட கலைக்கூடம், எழுநிலை மாடம், நெடுங்கல் மன்றம் போன்றவற்றை காட்சிக்கு வைத்து பாராட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.

நெட்டிச்செடி மூலமாக கைவினைப்பொருட்களை இலகுவாக குறுகிய நேரத்திற்குள் செய்து கொள்ள முடியும். மேலும் நெட்டி வேலைப்பாடானது இன்று தஞ்சாவூரில் மிகவும் பிரபலமானதொன்றாக காணப்படுகிறது. நெட்டிச் செடியினூடாக வருமானத்தை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இன்று பல்வேறு உருவ அமைப்புக்களை நெட்டிச் செடியினூடாக அமைத்து வருகின்றனர்.

எனவேதான் நெட்டிச் செடியானது ஒரு சிறு செடியாக காணப்பட்டாலும் கூட அதனுடைய பயனானது பல்வேறு வகைகளில் காணப்படுகின்றது. இக்கலையானது இன்றும் வளர்ந்து கொண்டு வரும் ஒரு முறைமையாகவே காணப்படுகின்றது.

Read More: முடக்கத்தான் கீரை பயன்கள்

ஆடாதோடை பயன்கள்