நிறைவுப் போட்டி என்றால் என்ன

niraivu potti in tamil

அங்காடிகளின் வகைகளுள் ஒன்றாகவே நிறைவுப் போட்டியினை நோக்கலாம். இது எண்ணற்ற கொள்வனவாளர்களையும் எண்ணற்ற விற்பனையாளர்களையும் நிறைவுப் போட்டியானது கொண்டமைந்து காணப்படுகின்றது.

நிறைவுப் போட்டி என்றால் என்ன

நிறைவுப் போட்டி என்பது ஒவ்வொரு உற்பத்தியாளருடைய உற்பத்தியும் முழு தேவையினை கொண்டிருக்கும் நிலையே நிறைவுப் போட்டி ஆகும்.

அதாவது அங்காடி ஒன்றில் குறிப்பிட்ட விலையில் ஒரு பொருளை விற்பதற்கும் வாங்குவதற்குமான போட்டி நிலவுவது ஆகும்.

நிறைவுப் போட்டியின் இயல்புகள்

அங்காடி ஒன்றினுடைய நிலை பற்றி அறிந்திருத்தல் வேண்டும். அதாவது அங்காடியில் ஒரு பொருளின் தன்மை பற்றி வாங்குவோர் மற்றும் விற்போர் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

எண்ணற்ற வாங்குபவர் மற்றும் விற்பவர் காணப்படுவார்கள். எந்தவொரு விற்பனையாளரும் விலையை நிர்ணயம் செய்யும் சக்தியை பெற்றிருக்கமாட்டார் ஏனெனில் வாங்குபவரைப் போலவே விற்பனையாளரும் விலை ஏற்பவராக காணப்படுவார்.

விற்பனையாளர்கள் விற்கும் பொருள் ஒரே மாதிரியாக காணப்படும். ஏனெனில் வாங்குவோர் இப்பொருள்களில் வேறுபாடு காணாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே விற்கும் பொருள் ஒன்றாக காணப்படுகின்றது.

அப்பொருள்களானது நிறம், மணம், சுவை என எவற்றிலும் மாற்றம் ஏற்படாது ஒரே நிலையிலேயே காணப்படும். இவ்வாறான பொருள்களின் விலையிலும் மாற்றம் ஏற்படுத்த முடியாது.

நிறைவுப் போட்டியின் போது ஒரு பொருளுக்கான விலை நிர்ணயத்தில் அரசுடைய தலையீடு காணப்படாது. மேலும் நிறைவுப் போட்டியானது செலவின்மையாக காணப்படும். ஏனெனில் குறித்த விற்பனைப்பொருள் தொடர்பான போக்குவரத்து செலவோ அல்லது விளம்பரப்படுத்தும் செலவோ இங்கு காணப்படாது.

நிறுவனமானது உட்புகுதல் மற்றும் வெளியேறுதல் நிகழ்வானது தடையில்லாமல் இருப்பதோடு நிறுவனங்கள் சுதந்திரமாக செயற்படும்.

நிறைவுப் போட்டியும் நிறுவனமும்

நிறைவுப் போட்டியில் நிறுவனமொன்றின் செல்வாக்கானது அதிகமாக தாக்கம் செலுத்துவதனை காணமுடியும். அதாவது நிறைவுப் போட்டியில் ஓர் விற்பனைப் பொருளின் விலையானது ஒரே சீராக காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானதொன்றாகும். அந்தவகையில் ஓர் அங்காடி முழுவதும் ஒரே விலையே நிலவ வேண்டும் என்பதோடு இதனை மாற்ற எந்த நிறுவனத்தினாலும் முடியாது.

நிறுவனமானது விலையை ஏற்றி விற்பனை செய்தாலும் அதனை வாங்குபவர்கள் குறித்த பொருளை வாங்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

நிறைவுப் போட்டியின் நன்மைகள்

நிறைவுப் போட்டியின் போது சந்தையில் அல்லது அங்காடியில் பங்கு பெறுகின்ற அனைத்து நிறுவனங்களுக்கிடையேயும் அறிவானது சமமாகவே பகிரப்படும்.

வளங்களுக்கான ஒதுக்கீடானது நிறைவுப் போட்டியில் மிகவும் திறமையான முறையில் விற்பனையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக திகழ்கின்றது.

தரமான பொருட்களுக்கு விலையானது குறைந்தளவிலேயே காணப்படுகிறது. ஏனெனில் அங்காடியில் காணப்படும் பொருட்கள் ஒரே விலையிலேயே விற்கப்படுவதோடு தரமான நல்ல பொருளாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவுப் போட்டியின் தீமைகள்

நிறைவுப் போட்டியில் விற்பனையாளருக்கு குறைந்த இலாபமே கிடைக்கப்பெறும். அதாவது போட்டியில் பங்கேற்பதற்கான செலவு குறைவாக காணப்படுவதோடு அதனூடாக ஈட்டும் இலாபமும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

ஒரே மாதிரியான தயாரிப்பு மூலம் பல்வேறு பற்றாக்குறையான தன்மைக்கு வழியமைக்கின்றது. அனைத்து பொருள்களும் ஒரே மாதிரியாக காணப்படும் போது பொருட்களுக்கான பற்றாக்குறை நிகழும்.

புதிய தயாரிப்பு அல்லது சேவையினை உருவாக்குவதற்கான செலவு அதிகரித்தே காணப்படும்.

இவ்வாறாக நிறைவுப் போட்டியின் தீமைகளை நோக்க முடிகின்ற அதேவேளை நிறைவுப் போட்டியானது சிறப்பான பொருளாதாரத்திற்கு வழியமைக்கும் என்பதனையும் குறிப்பிடலாம்.

Read More: தொடர் ஓட்டம் என்றால் என்ன

நாவல் பழத்தின் நன்மைகள்