இந்த பதிவில் சிறந்த தமிழ் “நற்சிந்தனை துளிகள் – Natsinthanai In Tamil” காணலாம்.
- நற்சிந்தனை துளிகள்
- Natsinthanai In Tamil
Table of Contents
நற்சிந்தனை துளிகள்
சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியமோ மறுமையிலும் துணை நிற்கும்.
அச்சமில்லாமல் வாழப் பழகுங்கள். மிருகங்களைப் போல மனிதர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.
பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள். இதற்கு மிஞ்சிய நற்குணம் வேறில்லை.
இளம் உள்ளங்களில் எப்போதும் அன்பை விதையுங்கள். அதனால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.
உங்களை நீங்களே பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதி இருக்குமிடம் நோக்கி புகழ் தானாகவே வரும்.
நல்ல உணவால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அது போல, நல்ல உணர்வுகளால் உள்ளம் ஆரோக்கியம் பெறுகிறது.
நேர்மை, ஒழுக்கம் இவற்றைப் புறக்கணிப்பதால் வாழ்க்கையில் வசதிவாய்ப்பு பெருகலாம். ஆனால் மனநிம்மதியை இழக்க நேரிடும்.
புறவுலகில் இருந்து உள்முகமாக மனதை திருப்புங்கள். இதனால் மனஅமைதி நிலைத்திருக்கும்.
கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் அதில் தான் உங்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.
ஆசைக்கு ஒரு வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மனம் போன போக்கில் சென்றால் துன்பமே உண்டாகும்.
செல்லும் இடம் எல்லாம் அன்புப் பயிரை விதையுங்கள். உங்களால் இந்த உலகம் அன்பு மயமாகட்டும்.
கோபத்தில் எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். கோபம், பதட்டம், வேகம் மூன்றும் சேர்ந்தால் மனக்குழப்பமே மிஞ்சும்.
தாய் மண்ணை நேசித்து வாழுங்கள். எத்தகைய தியாகத்தையும் அதற்காக செய்ய முன்வர வேண்டும்.
தெய்வத்தன்மை உனக்குள்ளே இருக்கிறது. ஆனால், அதை உணராமல் புறவுலகில் தேடிக் கொண்டிருக்கிறாய்.
Natsinthanai In Tamil
ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதுவே நிம்மதிக்கான வழிமுறை.
எப்போதும் உற்சாகத்துடன் இரு. அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடு. இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்.
மற்றவரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். அவர்களிடமுள்ள நல்ல பண்புகளை மட்டும் பார்க்கப் பழகுங்கள்.
பற்களுக்கு இடையே நாக்கு கடிபடாமல் தப்புவது போல, தீயவர்களுடன் இருக்க நேர்ந்தாலும் ஒதுங்கி நில்லுங்கள்.
உலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல. வாழ்க்கைப் பயணம் முடியும் வரை தான் இங்கு நமக்கு வேலை.
உழைப்பினால் கிடைக்கும் பணமே சிறந்தது. அதில் உண்டாகும் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தையில்லை.
எல்லாம் தெரிந்தவர் என்று ஒருவர் உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கவே செய்யும்.
உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ள வேண்டாம்.
குளிர்ச்சி மிக்க இடத்தில் உடல் மட்டுமே குளிர்ச்சி அடையும். நேர்மையால் மட்டுமே உள்ளம் குளிர்ச்சி பெறும்.
வெறும் பேச்சால் பயனில்லை. செயல் மூலமாக மற்றவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
பிறந்த நாட்டையும், பெற்ற தாயையும் நேசியுங்கள். அவர்களுக்காகத் தியாகமும் செய்யுங்கள்.
கடமையே கடவுள். அதற்காகப் பணியாற்றுவதே வழிபாடு. வாழ்வில் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் கடமையாற்றுங்கள்.