பெயர்ச்சொல்லான திணை எனும் சொல்லானது ஒழுக்கம், நாகரிகம், குலம், இனம், பிரிவு என்னும் பல பொருள்களை குறிக்கும் சொல்லாக காணப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் திணை என்பது அகம் சார்ந்த விடயங்களை கூறுவது அகத்திணை என்றும் புறம் சார்ந்த விடயங்களை கூறுவது புறத்திணை என்றும் அழைக்கப்பட்டது.
அத்துடன் திணை என்பது தொல்காப்பிய தமிழ் இலக்கணத்தில் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறது.
Table of Contents
திணை என்றால் என்ன அவை எத்தனை வகைப்படும்
சொல் இலக்கணத்தில் அமைந்த திணை என்பது பிரிவு, வகுப்பு என்ற பொருளில் அமைகிறது.
திணையின் வகைகள்
திணையானது இரண்டு வகைப்படும். அவையாவன
- உயர்திணை
- அஃறினை
உயர்திணை என்றால் என்ன
ஆறறிவு கொண்ட மனிதர்களை குறிப்பவையே உயர்திணை எனப்படுகிறது. அதாவது பகுத்தறிவு கொண்டவர்களை உயர்திணை சார்ந்தவர்கள் என்கின்றனர்.
எடுத்துக்காட்டு
- அரசன்
- மாணவன்
- தந்தை
- ஆசிரியர்
- தேவர்கள்
- மருத்துவர்
அஃறினை என்றால் என்ன
பகுத்தறிவற்ற அதாவது மனிதர்கள் அல்லாத உயிர் உள்ள மற்றும் உயிரற்றவற்றை அஃறிணை என்கின்றனர்.
எடுத்துக்காட்டு
- மரம்
- புத்தகம்
- ஆடு
- நாய்
- மேசை
- பூனை
பால்
பால் என்றால் பகுப்பு என்று பொருள்படும். பெயர்ச்சொற்கள் பால்நிலையின் அடிப்படைகள் ஐந்து வகைப்படும். அவையாவன,
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
இவற்றுள், ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்கு உரியன. ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டும் அஃறிணைக்கு உரியன.
1. ஆண்பால்
உயர்திணையில் உள்ள ஆண்களுக்குரிய பொதுவான சொற்களை குறிப்பவை ஆண்பால் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- அடியான்
- ஆண்டான்
- இரவலன்
- இனையன் ( இத்தன்மையன்)
- கையன்
அஃறிணைப் பெயர்களில் ஆண் மிருகங்களின் பெயர்களை குறிக்கும் சொற்கள் ஆண்பாற் சொற்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- கடுவன் – கடுவன் என்பது குரங்குக்கும், பூனைக்கும் உரிய ஆண்ப்பால் பெயர்களாகும்.
- மா – மா என்பது குதிரை, பன்றி, யானை என்பவற்றுக்குரிய ஆண்பால் பெயர்களாகும்.
- ஒருத்தல் – ஒருத்தல் என்பது கரடி, மான், யானை, எருமை, பன்றி, புலி, மரை என்பவற்றுக்குரிய ஆண்பால் பெயர்களாகும்.
- போத்து – போத்து என்பது மரை, பசு, புலி, பூனை என்பவற்றுக்குரிய ஆண்பால் பெயர்களாகும்.
- கலை – கலை என்பது முசு, மான் என்பவற்றுக்குரிய ஆண்பால் பெயர்களாகும்.
2. பெண்பால்
உயர்திணையில் உள்ள பெண்களுக்கு பொதுவாக உள்ள சொற்களை குறிப்பவை உயர்திணை பெண்பால் சொற்களாகும்.
எடுத்துக்காட்டு
- ஆண்டாள்
- இரவலனி
- இனையள் ( இத்தன்மையள்)
- கையள்
அஃறிணையில் உள்ள அதாவது பெண்மிருகங்களின் பொதுவான பெயராக அமைப்பை அஃறினை பெண்பாற் சொற்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- பிடி – பிடி என்பது யானை, கவரிமான், ஒட்டகம் என்பவற்றிற்குரிய பெண்பால் சொற்களாகும்.
- பிணை – பிணை என்பது மான், நாய், பன்றி என்பவற்றிற்குரிய பெண்பால் சொற்களாகும்.
- பெட்டை – பெட்டை என்பது ஒட்டகம், கழுதை, குதிரை, சிங்கம், மான் முதலியவற்றுக்குரிய பெண்பாற் சொற்கள் ஆகும்.
- மந்தி – மந்தி என்பது முசு, குரங்கு முதலியவற்றுக்குரிய பெண்பாற் சொற்கள் ஆகும்.
- பினா – பினா என்பது புல்வாய், நாய், பன்றி முதலியவற்றுக்குரிய பெண்பாற் சொற்கள் ஆகும்.
3. பலர்பால்
பலர்பால் சொற்களானது உயர்திணையில் உள்ள ஆண்பால் பெண்பால் சொற்களின் பன்மை சொற்களை குறிக்கிறது.
எடுத்துக்காட்டு
- அவர்கள்
- ஆசிரியர்கள்
- நீங்கள்
- மாணவர்கள்
4. ஒன்றன்பால்
அஃறிணையில் உள்ள ஒருமைச் சொற்களை குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- காகம்
- பூனை
- நாய்
- மேசை
5. பலவின்பால்
அஃறிணையில் உள்ள பன்மை சொற்களை குறிப்பது பல்லின் பால் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- காகங்கள்
- மேகங்கள்
- நாய்கள்
- அவைகள்
பொதுப்பெயர்
உயர்திணைக்கும், அஃறிணைக்கும், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும் பெயர் பொதுப்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- தான்
- தாய்
- எல்லாம்
Read more: காப்பியம் என்றால் என்ன