திசுக்கள் என்றால் என்ன

இழையம் என்றால் என்ன

அறிமுகம்

உறுப்புகளை உருவாக்குவதற்கும், ஒரு உயிரினத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்வதற்கும் வெவ்வேறு திசுக்கள் ஒன்றுடன் ஒன்று உருவாகின்றன.

திசுக்கள் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் (Histology) எனப்படும். ஒவ்வொரு உறுப்பும் நெருங்கிய தொடர்புடைய பல்வேறு திசுக்களால் ஆனது. பல உறுப்புக்களின் இணைப்புத் திசு ஸ்ட்ரோமாவை உருவாக்குகின்றது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட உறுப்பை உருவாக்கும் பல்வேறு திசுக்கள் அந்த உறுப்பின் முக்கிய செயற்பாட்டின் செயற்திறனை உறுதி செய்கின்றன.

உறுப்பின் உருவாக்கத்தில் பல்வேறு திசுக்கள் பங்களிப்புச் செய்தாலும் அவற்றில் ஒன்று மட்டுமே மிக முக்கியமானதாகும். மீதமுள்ளவை துணை உறுப்புக்களாகும்.

எடுத்துக்காட்டாக – இணைப்புத் திசு ஒரு உறுப்பின் அடிப்படையை உருவாக்குகின்றது. தசைத் திசு வெற்று உறுப்புக்களின் சுவர்களை உருவாக்குகின்றது. அதாவது உணவுக்குழாய், குடல், சிறுநீர்ப்பை போன்றவையாகும்.

திசுக்கள் என்றால் என்ன

குறிப்பிட்ட வேலையைச் செய்யும் கண்ணறைகளின் தொகுதியே திசுக்கள் ஆகும். ஒரு உயிர்ச் செயலைப் புரியும் பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டதைப்பே திசுக்கள் ஆகும். இவை தூண்டலுக்கேற்ற துலங்களை வெளிப்படுத்தும். எடுத்துக்காட்டு – தசைத் திசுக்கள்.

அதாவது திசு அல்லது இழையம் என்பது, ஒரு உயிர்ச் செயலைப் புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும்.

தாவரத் திசுக்கள்

ஜீலியஸ்வான் சாக்ஸ் (Julius Von Sachs) என்பவர் தான் தாவரங்களிலுள்ள திசுத் தொகுப்புக்களைக் கண்டறிந்தவராவார். தாவர திசுக்கள் பொதுவாக இரண்டாக உயிர் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன

  1. ஆக்குத்திசு அல்லது நுனியாக்கு திசுக்கள்
  2. நிலையான திசுக்கள்

ஆக்குத்திசு (மெரிஸ்டெம்) என்பது தொடர்ந்து பிரியும் தன்மை கொண்ட ஒரே மாதிரியான அளவுடைய முதிர்ச்சி நிலை அடையாத செல்களின் தொகுப்பு ஆகும்.

ஆக்குத்திசுக்களை, தாவரங்களின் வளர்ச்சி நடைபெறும் தாவரத் தண்டின் நுனிப்பகுதி, வேரின் நுனிப்பகுதி, இலை மூலங்கள் போன்ற இடங்களில் காணலாம். திசுக்கள் உயிர் உள்ள செல்களால் ஆனவையாகும் சிறியதாக, முட்டை வடிவ, பலகோண அல்லது கோள வடிவில் உள்ளன.

நிலைத்த திசுக்கள் என்பவை பகுப்படையும் திறனை (பிரிதல் திறன்) நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக இழந்த திசுக்களாகும். இவை எளியத்திசு, கூட்டுத்திசு என இரண்டு வகைப்படுகின்றன.

தாவரங்களில் உள்ள திசுக்கள் தாவர வேர், தண்டு மற்றும் இலைகள் போன்ற பல்வேறு உறுப்புகளாக மாறி உள்ளன.

திசு வளர்ப்பியல் துறை

தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களிலிருந்து திசுக்கள் மற்றும் செல்களைப் பிரித்தெடுத்து அவற்றைப் புதிய உயிரினங்களாகவும், திசுக்களாகவும் உறுப்புக்களாகவும் வளர்த்தெடுக்கும் அறிவியல் பிரிவே திசு வளர்ப்பியல் (Tissue culture) ஆகும்.

இது உயிரியல் பிரிவின் மிகச் சிறந்த பயன்தரும் துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இத்துறையின் மூலம் மனித குலத்திற்குப் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.

இன்று அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப உணவுத் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் திசு வளர்ப்பியல் துறை உதவுகின்றது.

இத்துறையின் மூலம் அரியவகைத் தாவரங்களை உற்பத்தி செய்ய முடியும். அதுமட்டுமல்லாது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்குத் தேவையான செல்கள் மற்றும் திசுக்களை வளர்த்தெடுத்து பயன்மிக்கதாக மாற்றவும் இத்துறை உதவுகின்றது.

இத்துறை சார்ந்து பல படிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனால் அதனைக் கற்றுக் கொள்ளவும் வேலைவாய்ப்புக்களை அதன் மூலம் பெருக்கிக் கொள்ளவும் இத்துறை பெரிதும் பங்களிப்புச் செய்கின்றது.

You May Also Like :
மென்பொருள் என்றால் என்ன
தரவு என்றால் என்ன