செங்கோல் என்றால் என்ன

அரச சின்னங்களில் ஒன்றாக செங்கோல் திகழ்கின்றது. நேர்மையான ஆட்சியினை சுட்டுவதாக செங்கோலானது காணப்படும்.

செங்கோல் என்றால் என்ன

செங்கோல் எனப்படுவது அரசாட்சியை சுட்டும் சின்னமாகிய நேர்கோலே செங்கோல் எனப்படும். இது நல்லாட்சியினை சுட்டக் கூடியதாக காணப்படுகின்றது.

அதாவது செங்கோலானது நேர்மையான ஆட்சி மற்றும் நெறி தவறாத ஆட்சியை சுட்டும் பொருட்டே அது நேரானதாகவும் அரசன் வீற்றிருக்கும் போதும் அவரது கையில் காணப்படும்.

செங்கோலின் சிறப்புக்கள்

மன்னராட்சி காலப்பகுதியில் அரியணை, மகுடம், செங்கோல், கொடை என்பன ஒரு அரசருக்கான அடையாளமாகும். இதனுள் சிறந்து விளங்குவதே செங்கோலாகும்.

செங்கோலானது நியாயமான, நீதி வழுவாத ஆட்சி முறையை வழங்க வேண்டும் என அரசருக்கு வலியுறுத்தும் ஒரு அடையாளமாக காணப்படுகின்றது. அதே நேரத்தில் மக்களுடைய பார்வையில் நேர்மையான ஆட்சியினை சுட்டுவதாக செங்கோல் காணப்படுகின்றது.

அரசர் ஒருவர் பதவியேற்கும் போது செங்கோலை மதகுருமார் அரசரிடம் கொடுத்து ஆட்சியை அங்கீகரிப்பது தென்னாட்டில் வழக்கமாக காணப்படுகின்றது. மேலும் செங்கோலை அரசரிடம் வழங்கும் போது அது அரசனுடைய தார்மீக ஆட்சி என குறிப்பிடப்படுவது செங்கோலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது.

திருக்குறளில் செங்கோல் இலக்கணம்

உலகப் பொது மறையாக காணப்படும். திருக்குறளில் செங்கோல் குறித்து பல குறட்பாக்கள் அமைந்து காணப்படுகின்றன.

திருக்குறள் பொருட்பாலில் நாட்டை ஆளும் மன்னருக்கு தேவையாக பல நீதிகள் போதிக்கப்பட்டுள்ளன. மன்னருடைய செங்கோன்மையினை வெளிப்படுத்தும் அதிகாரமே தனியாக இடம் பெறுகின்றது.

அந்த வகையில் செங்கோல் பற்றிய குறட்பாக்களும் அதன் பொருள்களையும் நோக்கலாம்.

கொடையாளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர் கொள்

பொருள் : கொடை, அருள், செங்கோல் முறை நாட்டின் குடி மக்களை காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசனானவன் அரசர்கெல்லாம் விளக்கு போன்று ஒளிப்பவன் ஆவான்.

ஓர்த்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை

பொருள் : யாரிடத்தில் குற்றம் என்பதனை ஆராய்ந்து கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலை பொருந்தி ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும். என்பதினூடாக மன்னரின் செங்கோன்மையை கூறுகின்றார்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி

பொருள் : உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றனர். அது போல் குடி மக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். என்பதினூடாக செங்கோல் பற்றி குறிப்பிடுகின்றார்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

பொருள் : அந்தணர் போற்றுகின்ற மறை நூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாக நின்று உலகத்தை காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

பொருள் : குடிகளை அன்போடு அரவணைத்து கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியை பொருந்தியே உலகம் நிலை பெறும் என்பதினூடாக உலகம் நிலை பெற செங்கோலின் அவசியம் எடுத்துக் காட்டப்படுகின்றது.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

பொருள் : நீதி முறையாக செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையுடன் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலோதூ உங் கோடா தெனின்

பொருள் : ஒருவனுக்கு வெற்றியை தருவது வேல் அல்ல அரசனுடையே செங்கோலே வெற்றி தரும்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டாச் செயின்

பொருள் : உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான் நீதி முறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அதுவே காப்பாற்றும். என்பதினூடாக செங்கோன்மை ஆட்சியினை சுட்டிக் காட்டி நிற்கின்றது.

மேற்குறிப்பிட்ட ரீதியில் செங்கோல் பற்றி திருக்குறளில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செங்கோலானது ஒரு சிறந்த ஆட்சி முறைமைக்கு எந்தளவு அவசியம் என்பதனையும் சுட்டி நிற்கின்றது.

Read More: பீடை என்றால் என்ன

இடுகுறிப்பெயர் என்றால் என்ன