சித்திரை கனி என்றால் என்ன

chithirai kani in tamil

சித்திரை புத்தாண்டானது இந்து மக்களுக்கு மிகவும் பிரதானமானதொரு புத்தாண்டாகவே அமைந்து காணப்படுகின்றது.

அந்த வகையில் சித்திரை மாதம் பிறக்கும் போதோ தமிழ் புத்தாண்டும் பிறக்கின்றது என்பது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் சித்திரை மாதத்தில் கனி காணுதல் நிகழ்வானது இடம் பெறுவது பிரதானமானதாகும்.

சித்திரை கனி என்றால் என்ன

சித்திரை கனி என்பது யாதென்றால் தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கனி காணும் நிகழ்வில் ஈடுபடுவார்கள் இதனையே சித்திரை கனி என குறிப்பிடலாம். அதாவது பல கனிகளை தட்டில் வைத்து அதனை கண்ணாடியில் பார்ப்பது சித்திரை கனியாகும்.

சித்திரை கனி கொண்டாடும் முறை

முதலில் வீடு, வாசல் துடைத்து சுத்தம் செய்தல் வேண்டும். மேலும் தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் அன்று வீட்டில் உள்ள பூஜை அறையிலே அல்லது ஏதாவதொரு இடத்தில் கிழக்கு திசையினை பார்த்தாற்போல் கண்ணாடி ஒன்றை வைத்தல் வேண்டும்.

பின்பு அதன் அருகாமையில் ஒரு தட்டில் பழங்களை வைத்தல். அதாவது (மா, பலா, வாழை) முக்கனிகளை வைப்பது சிறந்ததாகும்.

மேலும் அதன் அருகில் மஞ்சள், குங்குமம், தேங்காய், தங்க நகைகள், காசு போன்றவற்றை வைத்தல் வேண்டும். இவையாவும் கண்ணாடியின் முன் இருப்பதாகவே வைத்தல் வேண்டும்.

இவ்வாறு வைத்த பின்னர் தமிழ் புத்தாண்டு அன்று காலையில் எழுந்து கண்ணை மூடியவாரே கண்ணாடி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து கண்ணைத் திறந்து முகத்தை பார்க்கவும் இதன் போது நாம் வைத்த அனைத்தும் அக் கண்ணாடியில் பிரதிபலிக்கும்.

இவ்வாறு செய்வதன் ஊடாக பல நன்மைகள் வந்து சேர்வதுடன் பல்வேறு முன்னேற்றங்களை வாழ்வில் காண்பதற்கு சித்திரை கனி காணுதல் துணைபுரிகின்றது.

மேலும் இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் அருகிலுள்ள கோயிலிற்கு சென்று கடவுளை வணங்கி வந்ததன் பின்னர் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சித்திரை கனியின் பலன்கள்

தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் சித்திரை கனி இடம் பெறுவதன் மூலம் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை காண இந்த சித்திரை கனியானது துணை புரிகின்றது. இதன் மூலம் மங்கலகரமான ஒரு நாளாக சித்திரை கனி நாள் காணப்படும்.

ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பு பெற்று பஞ்சமில்லாது வாழ சித்திரை கனி நாளானது துணையாக அமைகின்றது எனலாம். இதனுடாக அவ் ஆண்டில் அனைத்து விதமான செல்வச் செழிப்பும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்நாள் துணை புரிகின்றது.

பணம் பெருகுவதற்கு உறுதுணையாக புத்தாண்டு நாளானது காணப்படுகின்றது. அதாவது சித்திரை கனி நாளில் சிறுவர்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பணத்தினை பெற்றுக் கொள்வார்கள். இதனுடாக இனி வருகின்ற காலங்களில் பண விருத்தி ஏற்படும் என்று நம்பப்படுகின்றது.

சித்திரை கனி காணுதலின் மூலம் ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமையுடன் அனைவரும் வாழ்வதற்கு சித்திரை கனி காணுதலானது துணைபுரிகின்றது. மேலும் அந்த ஆண்டு பூராகவும் எமக்கு நல்ல விடயங்கள் மாத்திரமே நடைபெறும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

குடும்பத்திலும் செல்வ வளம் பெற்று சந்தோசமாக வாழ்வார்கள் எனவும் நம்பப்படுகின்றது. சித்திரை கனி காணுதலின் ஊடாக ஓர் சிறப்பான முறைமையில் தமிழ் புத்தாண்டானது அமைந்து காணப்படும் என்பதனை குறிப்பிடலாம்.

Read more: பங்குனி உத்திரம் என்றால் என்ன

சோபகிருது என்றால் என்ன