முற்காலத்தில் மக்கள் அவர்களுக்கு தோன்றிய கருத்துக்களை ஓவியம் மூலமே மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.
அக்கால மக்களுக்கு புரியும்படி ஓவிய எழுத்துக்கள் பயன்பட்டது. உதாரணமாக மலை, கிணறு போன்றவை பருப்பொருட்கள் என்பதால் இவற்றை ஓவிய வடிவில் எழுதுவது இலகுவானதாகும்.
கண்ணுக்குத் தெரியாத, மனத்தால் உணரத்தக்க நுண்பொருட்களாகத் திகழும் அன்பு, அச்சம், ஆசை முதலியவற்றைக் குறிக்கும் சொற்களையும் ஓவிய எழுத்துக்களில் எழுத முடியும் என்பது ஓவிய எழுத்துக்களின் தனிச் சிறப்பு ஆகும்.
தமிழகத்தில் மலைப்பாடி, கீழ்வானை, கோவை, மதுரை, நீலகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் ஓவிய எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குகைகளின் சுவர்களில் ஓர் ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தக் குகைகளில் வேட்டையாட விரும்பும் விலங்கின் உருவத்தை வரைந்து சென்றால் அந்த மிருகம் வேட்டையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இங்கு ஒன்றின் மீது ஒன்றாக ஓவியம் வரைந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
ஒவ்வொரு குறியீடும் ஒவ்வொரு சொல்லை அல்லது ஒரு முழுச் சொல்லை பிரதிநிதித்துவம் செய்வதால் ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு குறியீடு தேவைப்படும்.
ஏராளமான குறியீடுகளும், அவற்றுக்கான பொருள்களையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது கடினமானதாகவே இருக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை.
எனினும் கோட்பாட்டு ரீதியில் ஒரே குறியீட்டினையே வெவ்வேறு மொழிக்குப் பயன்படுத்த முடியும்
கொரிய மொழியும், ஐப்பான் மொழியும், சீன மொழியும் தங்கள் எழுத்து முறைகளில் பல குறியீடுகளை ஒரே பொருளில் பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகவே கருதப்படுகின்றன.
ஓவிய எழுத்து முறை ஐப்பான் மொழியிலும், சீன மொழியிலும் காணப்பெறுவதாகப் பொற்கோ குறிப்பிடுகின்றார்.
எழுத்து எந்தவித வெளி செல்வாக்கும் இல்லாமல், தன்னிச்சையாக ஆரம்பித்தது என்றால், அது கட்டாயம் ஒரு ஓவிய எழுத்து மூலமே தொடங்கப்பட்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அண்மைய தொல் பொருள் ஆய்வுகள் எமக்கு எடுத்துக் காட்டுவது என்னவென்றால், எழுத்தின் தோற்றுவாயும், பரவலும் நாம் முன்பு சிந்தித்ததை விட சிக்கல் நிறைந்ததாக உள்ளது என்பதுவே ஆகும்.
Table of Contents
எழுத்து வடிவத்தின் தொடக்கம்
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும், பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
உலக மொழிகள் எல்லாம் ஒத்த ஒலிப்பு முறையில் பேசப் பெறுவது இல்லை. இந்த ஒலிப்பு முறை வேறுபாடு ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி வேறுபடக் காரணமாக அமைகின்றது.
இது போன்றே உலக மொழிகள் எல்லாம் ஒத்த வரிவடிவில் எழுதப் பெறுவது இல்லை. ஒவ்வொரு மொழியும் குறிப்பிட்ட வரிவடிவத்தில் எழுதப் பெறுகின்றன.
இவ்வாறு உலகம் முழுவதும் எழுதப் பெறுகின்ற எழுத்து முறைகளை
- ஓவிய எழுத்து முறை (Pictography)
- அசை எழுத்து முறை (Syllabic Writing)
- ஒலியன் எழுத்து முறை (Phonetic Writing)
என மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.
ஓவிய எழுத்து என்றால் என்ன
ஆரம்ப காலத்தில் எழுத்து, பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர். மேலும், ஓவியம் போன்று எழுதப்பட்டால் அவற்றை ஓவிய எழுத்துக்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது.
Read more: இன எழுத்துக்கள் என்றால் என்ன