என் கனவு இந்தியா கட்டுரை

Enathu Kanavu India Katturai In Tamil

இந்த பதிவில் “என் கனவு இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

அனைத்து வளங்களும் நிறைந்த நம் இந்திய தேசம் உலக அரங்கில் உயரத்தில் இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும். ஊழல் மற்றும் வறுமை அற்ற ஒரு நாடாக இருக்க வேண்டும்.

என் கனவு இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்திய தேசத்தின் சிறப்பம்சம்
  3. பொருளாதாரம்
  4. கல்வி
  5. சுற்றுச்சூழல்
  6. முடிவுரை

முன்னுரை

இந்திய நாட்டினை சுதந்திரம் அடைய செய்ய பல ஒப்பற்ற தலைவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருக்கின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களின் பின்னதாக மலர்ந்த இந்திய தேசமானது நேர்மை, வாய்மை என்பன சிறந்து விளங்குகின்ற ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.

நேர்மையான ஆளுமை மிக்க தலைவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் அப்போது தான் எமது நாட்டிற்கு உண்மையான சுதந்திரமானது கிடைக்கும் என்பது எனது கருத்தாகும்.

இக்கட்டுரையில் நான் பார்க்க விரும்புகின்ற இந்தியா பற்றி காண்போம்.

இந்திய தேசத்தின் சிறப்பம்சம்

என்ன வளம் இல்லை இந்த பாரத தேசத்தில் அத்தனை வளங்களும் நிறைந்தது இந்த தேசம். இதனால் தான் பல வருடங்களுக்கு முன்னர் அந்நியர்கள் எமது தேசத்தை நோக்கி படையெடுத்தார்கள்.

இந்த நாட்டினுடைய பண்பாடுகள் மற்றும் கலாச்சாரம் என்பன உலக அரங்கில் பிரபல்யமானவையாக உள்ளன.

அதிகளவான இளைஞர்கள் படையை கொண்ட நாடு மற்றும் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் உலக அரங்கில் வெற்றி நடை போடும் அளவிற்கு இன்ற வளர்ச்சி கண்டிருக்கின்றது.

இந்தியா கலைகளுக்கு பெயர் பெற்ற நாடாகும். இவ்வாறு பல வழிகளிலும் பல பெருமைகளை கொண்டது இந்திய நாடாகும். இங்கு வாழ்கின்ற நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டு கொள்ள வேண்டும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் எனப்படுகையில் எமது நாட்டில் தனியாருடைய ஆதிக்கம் அதிகரித்துள்ளமையால் சாதாரண மக்களால் வறுமையில் இருந்து மீள முடியவில்லை முதலாளித்துவ போக்கினை இல்லாமல் ஒளித்து பொருளாதாரத்தில் சமத்துவ நிலையினை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.

தனி மனிதர்களின் உழைப்பை சுரண்டுகின்ற நிலையானது மாற வேண்டும். கல்வி தரத்தின் அடிப்படையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்திகளை இன்னும் அதிகப்படுத்தி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும். இதுவே எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவியாக இருக்கும்.

கல்வி

எனது கனவு இந்தியாவில் அனைத்து பிள்ளைகளுக்கும் தரமான கல்வியானது இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

தனியார் துறையினரிடம் இருந்து கல்வி துறையினை பாதுகாக்க வேண்டும். கல்வி துறையினை வியாபாரம் ஆக்கும் தேசதுரோகிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

அரச பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்கள் தரமான கல்வியினை வழங்க வேண்டும். இதன் வாயிலாக எமது நாட்டின் குழந்தைகள் அனைவரும் மிகச்சிறந்த கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் வல்லுனர்களாக வளர்ச்சியடைவார்கள்.

சுற்றுச் சூழல்

எனது நாடானது எல்லா வழிகளிலும் அபிவருத்தியடைந்தாலும் கூட சுற்றுச்சூழல் மாசடைவுகள் அற்ற ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும்.

தூய்மையான காற்று தூய்மையான தண்ணீர் மற்றும் இயற்கை வளங்களை சரியாக பாதுகாக்கின்ற மக்கள் மற்றும் அரசு என்பன உருவாக வேண்டும்.

இதன் வாயிலாக தான் எமது எதிர்கால சந்ததியினர் இங்கே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று நான் நம்புகின்றேன்.

முடிவுரை

எமது நாடானது எத்தனையோ பெருமைகளை உடையது பல வழிகளிலும் திறமையான மக்களை கொண்டு காணப்படுகின்றது.

இருப்பினும் வளர்ச்சியடைய முடியாமல் இருக்க காரணம் இலஞ்சம் மற்றும் ஊழல் போன்ற அடிப்படை குற்ற செயல்கள் அனைவரிடத்திலும் காணப்படுகின்றது.

குற்றம் செய்பவருக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே ஆகும். இந்த நிலையானது மாறினால் எனது கனவு இந்தியாவனது மலரும் என நான் நம்புகின்றேன்.

You May Also Like :

பசுமை இந்தியா கட்டுரை
விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா