இந்த பதிவில் “ஊக்கமூட்டும் மேற்கோள்கள் (Motivational Quotes In Tamil)” காணலாம்.
- ஊக்கமூட்டும் மேற்கோள்கள்
- Motivational Quotes In Tamil
Table of Contents
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்
சோம்பலினால் உடல் மட்டுமல்ல; மனமும் கெட்டுவிடுகிறது.
அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி.
உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா? அப்படியென்றால் சந்தோசப்படு.. நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.
எல்லாம் கடைசியில் சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசியல்ல.
ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.
தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்… உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!
விதைகள் கீழ் நோக்கிஎறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்..! விழும்போது விதையென விழு… விருட்சமாய் எழு…!
இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது.
இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.
தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பயனும்தான் வெற்றிக்கான வழி.
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
Motivational Quotes In Tamil
நாம் எல்லோரும் நிலவை போன்றவர்கள்.அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
மடையனுடன் விவாதிக்காதே! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
நீ உன் எதிரியை விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
கண்களை இழந்தவன் குருடன் அல்ல. எவன் தன் குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
குறிக்கோள் இல்லாத வாழ்வு என்பதே பரிதாபமான ஒரு வாழ்வாகும். உங்களுடைய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு.
பிறர் மீது குற்றம் காண்பதிலும், புறம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.
சூழ்நிலை எப்போதும் சாதகமாக இருப்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை.
சோர்வை தள்ளிவிட்டு, எப்போதும் உற்சாகத்துடன் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.
வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும். உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இந்த நம்பிக்கை பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச் சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.