இலாகா என்றால் என்ன

அமைச்சரவையானது சிறப்பானதாக திகழ்வதற்கு இலாகாவானது அவசியமானதாகும். இலாகா இல்லாத அமைச்சரவை முறைமையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலாகா என்றால் என்ன

இலாகா என்பது ஒரு துறையை குறிப்பிடுகின்றது.

ஒரு துறை இல்லாத அமைச்சரவையினை இலாகா இல்லாத அமைச்சரவை என அழைப்பர்.

இந்த முறைமையானது ஐக்கிய இராச்சியம், இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன.

இலாகா இல்லாத அமைச்சர்

இலாகா இல்லாத அமைச்சர் பதவி என்பது யாதெனில் அமைச்சரவைக்கு என்று ஒரு துறை காணப்படாமையாகும். அதாவது ஒரு துறை இல்லாத அமைச்சரவையாகும். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றது.

அதாவது எந்தவொரு துறைக்கும் தலைமையகம் இல்லாவிடினும் அமைச்சர் பதவிக்காலம், ஊழியம் மற்றும் அமைச்சரவை முடிவுகளில் வாக்களிக்கும் உரிமையை பெறுவது தான் இலாகா இல்லாத அமைச்சர் என்று அழைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சரவை

தமிழ் நாட்டினை பொறுத்தவரையில் இலாகா இல்லாத அமைச்சரவை முறைமையானது எம். ஜி. ஆரின் காலப்பகுதியிலேயே காணப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக இலாகா இல்லாத அமைச்சர் முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது 1984-1985 காலப் பகுதிகளில் முதலமைச்சராக இருந்த எம். ஜி. ஆர் உடல் நலக் குறைவால் அமெரிக்க மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் நிர்வகித்த துறைகளை அப்போதைய நிதி அமைச்சரான நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு கால்நடை அமைச்சராக இருந்த கருப்பசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டார்.

2016ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது துறைகளை நிதி அமைச்சரிடம் ஒப்படைத்து இலாகா இல்லாத அமைச்சரவையாக தமிழ் நாடானது செயற்பட்டமையினை காணக் கூடியதாக உள்ளது.

2015ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் 2015ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜிடம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இலாகாவுடனான அமைச்சரவை

ஓர் அமைச்சரவையானது இலாகாவுடனாக காணப்படுகின்ற பட்சத்தில் ஒரு சிறந்த நிர்வாகத்திற்கு துணைபுரிகின்றது. அதாவது அமைச்சரவைக்குரிய நிர்வாக விடயங்கள் அதிகாரம் என்பன சிறப்பாக காணப்படுவதற்கு இலகாவுடனான அமைச்சரவையானது அவசியமாகும்.

ஒரு துறை ரீதியில் அங்கத்துவம் வகித்து கொள்வதற்கு இவ் அமைச்சரவையானது இலாகாவினை உடையதாக காணப்பட வேண்டும். மேலும் இலாகாவுடனான அமைச்சரவையின் மூலம் ஓர் ஒழுங்கு முறையான சட்ட கோவையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

எந்த அமைச்சகத்திற்கும் தலைமை வகிக்காமல் எந்த துறைக்கும் பொறுப்பேற்காமல் அங்கம் வகிக்கும் போது அமைச்சருக்கான ஊதியம், அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்றல் போன்ற சலுகைகள் இலாகா இல்லாத அமைச்சருக்கு காணப்பட்டுள்ள போதிலும் ஒரு சிறந்த அமைச்சரவையை முன்னெடுத்து செல்வது சிக்கலான ஒன்றாகவே காணப்படும்.

எனவே தான் இலாகாவுடனான அமைச்சர் சிறந்த அமைச்சிற்குரிய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவார் எனலாம். மேலும் இந்தியாவில் இலாகா இல்லாத அமைச்சரவை முறை இடம்பெற்றுள்ளமையினையும் காணக்கூடியதாகவுள்ளது.

Read More:

அரசியல் என்றால் என்ன

சமத்துவம் என்றால் என்ன